Published:Updated:

14 நாள்கள்

14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

14 நாள்கள்

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

Published:Updated:
14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

பெண்கள் பாதுகாப்புப் போராளி!

மீபகாலமாகப் பெண்கள்மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவருகின்றன. காஷ்மீர் மாநிலம், கத்துவாவில் கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிக் கொல்லப்பட்ட எட்டு வயதுச் சிறுமி, உன்னோ மற்றும் சூரத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற பாலியல் கொடூரங்கள் என நாடே கொந்தளிக்கிறது. இந்தச் சூழலில் டெல்லியில் உள்ள காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் போராட்டத்தைத் தொடங்கினார், டெல்லி பெண்கள் கமிஷனின் செயலாளர் சுவாதி மலிவால். தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகப் பேசி வரும் மலிவால், பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனை இன்னமும் அதிகரிக்கப்பட வேண்டும்; குறிப்பாக சிறுவர்/சிறுமியர் மீதான வன்முறை, பாலியல் வல்லுறவு வழக்குகள் துரித நீதிமன்றங்கள் மூலம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். 

14 நாள்கள்

‘ரேப்-ரோக்கோ’, ‘ஸ்டாப் ரேப்’ என்று எழுதப்பட்ட பதாகைகளைப் பிடித்தபடி நூற்றுக்கணக்கான பெண்கள் சுவாதியுடன் ராஜ்காட்டில் அமர்ந்தனர். ஏப்ரல் 12 அன்று, பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதி, அதை வெளியிட்
டிருந்தார் சுவாதி. ‘சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க ஆறு மாதங்களுக்குள் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்’ என்கிற கோரிக்கையை அதில் வலியுறுத்தியிருந்தார். பத்து நாள்களுக்குப் பின் பிரதமர், ‘பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட ஏதுவாக சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும், இதுபோன்ற குற்றங்கள் இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்’ என அறிவித்தார். தன் உண்ணாவிரதத்தை இதன்பின் கைவிட்ட சுவாதி, ஐ.நா சபை வழிகாட்டல்படி காவல்துறையில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்ற தன் அடுத்த கோரிக்கையைக் கையில் எடுத்திருக்கிறார். 

திருத்தங்களுக்குப் பிறகாவது திருந்தட்டும்!

சுவாதியின் உண்ணாவிரதம் முதல் அச்சுறுத்தும் `ஆப்' விளையாட்டு வரை... கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவை என்ன? அறிவோம்... ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

14 நாள்கள்

ண்டன் பார்லிமென்ட் ஸ்கொயரின் முதல் பெண் சிலை!

லண்டனைச் சேர்ந்த கரோலின் பெரெஸ், புகழ்பெற்ற பார்லிமென்ட் ஸ்கொயரில் அதைக் கவனித்தார். காந்தி, மண்டேலா என உலகத் தலைவர்களும், வின்ஸ்டன் சர்ச்சில், ஜார்ஜ் கேனிங் என இங்கிலாந்தின் சிறந்த தலைவர்களின் சிலைகளும் கம்பீரமாக நிற்கும் லண்டன் நகரின் மையப் பகுதியில், ஒரு பெண்மணியின் சிலைகூட இல்லை! ‘’உலகின் முன்னேறிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்திலா இந்த நிலை?’ என்று எண்ணிய கரோலின், 2016-ம் ஆண்டு, ‘ஆன்லைன் மனு' ஒன்றைத் தயாரித்துப் பரப்பினார். லட்சக்கணக்கான பெண்களின் டிஜிட்டல் கையெழுத்துடன் மனு லண்டன் மேயரது அலுவலகத்தை எட்டியது. 2017-ம் ஆண்டு பெண் சஃப்ரஜிஸ்ட் போராட்டத்தின் முகம் என்று அடையாளம் காணப்படும் மில்லிசன்ட் ஃபாசட்டின் உருவச் சிலையை பார்லிமென்ட் ஸ்கொயரில் காந்தி மற்றும் மண்டேலா போன்ற அமைதியையும் அன்பையும் போதித்த தலைவர்களின் சிலைகள் அருகே நிறுவப் போவதாக அறிவிக்கப்பட்டது. மனு செய்தது, வடிவமைத்தது முதல் நிறுவுவது வரை இந்தச் சிலை முழுக்க முழுக்க பெண்களின் உழைப்பால் அமைக்கப்பட்டது.

பெண்களுக்கு ஓட்டுரிமை முதல், ஆண்களுக்கு நிகரான சம்பளம் வரை நியாயம் கேட்டுப் போராட்டங்கள் இங்கிலாந்தில் நடைபெற்று ஏறத்தாழ நூறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. சஃப்ரஜிஸ்ட் போராட்டங்கள் என்ற பெயர்கொண்ட இவற்றால்தான் இங்கிலாந்து மற்றும் அதன் காலனி ஆதிக்க நாடுகளில் பெண்களின் உரிமை குறித்த புரிந்துணர்வும், விழிப்பு உணர்வும் ஏற்பட்டன. 1875-ம் ஆண்டு கேம்ப்ரிட்ஜின் நியூன்ஹேம் கல்லூரியைத் தொடங்கியவர்களில் ஒருவர் மில்லிசன்ட். பெண்களுக்குப் படிக்கும் உரிமையும், ஓட்டளிக்கும் உரிமையும் கிடைத்தால் மட்டுமே முன்னேற முடியும் என்று வீதிகளில் இறங்கிப் போராட்டங்களைத்  தொடங்கியவர் இவர். மில்லிசன்ட்டின் வழிகாட்டலில் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின் 1918-ம் ஆண்டு முதன்முறையாக முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்தது இங்கிலாந்து. சிலையைத் திறந்துவைத்துப் பேசிய இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே, “மில்லிசன்ட் இல்லையென்றால் இன்று நான் பிரதமராக உங்கள் முன் நின்றுகொண்டிருக்கமாட்டேன், பெண் உறுப்பினர்கள் யாரும் இன்று பாராளுமன்றத்தில் இருக்க மாட்டார்கள்; நமக்கு எந்த உரிமையும் முன்னேற்றமும் இருந்திருக்காது” என்று கூறினார்.

உண்மைதான்!

14 நாள்கள்

கிரிக்கெட் ஆண்களுக்கானது மட்டுமல்ல!

ந்திய மகளிர் கிரிக்கெட் அணியின்  கேப்டனான மித்தாலி ராஜ், கடந்த பத்து ஆண்டுகளாக மகளிர் கிரிக்கெட்டின் தூதுவராகச் செயல்பட்டுவருகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு இந்தியா முன்னேறியது, மித்தாலி மற்றும் இந்தியப் பெண்கள் அணியின் இருபது ஆண்டுக்கால தவம்! கொல்கத்தாவில் சமீபத்தில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு ஐ.சி.சி பெண் கிரிக்கெட் ஃபோரம் கூட்டத்தில் பேசிய மித்தாலி, தான் விளையாடத் தொடங்கியபோது மகளிர் கிரிக்கெட் அணி பற்றி விவரமே தெரியாமல் இருந்த நாள்கள் தொடங்கி, இன்று தெருவில் இறங்கி நடக்கையில் அனைவரும் அடையாளம் கண்டு பாராட்டும் நிலை வரை, தன் பத்தாண்டு கிரிக்கெட் பயணத்தை நினைவுகூர்ந்தார்.

பெண்கள் கிரிக்கெட் பற்றிய விழிப்பு உணர்வு இப்போது அதிகரித்திருப்பதாகக் கூறிய மித்தாலி, கிரிக்கெட் என்னும் விளையாட்டு ஆண்களுக்கானது என்ற மனத்தடை இப்போது நீங்கியிருப்பதாகவும்,  விளையாட்டு குறித்து பெண்கள் அதிகம் பேசி வருவது மகிழ்ச்சி தருவதாகவும் கூறினார். பெண்கள் கிரிக்கெட் ஒரு தனி ‘பிராண்ட்’டாக உருவெடுத்து வருவது மகிழ்ச்சிக்குரியது என்றும், பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைத்துவருவதாகவும் கூறியுள்ளார்.

மகளிர் கிரிக்கெட்டுக்கு தனி இடம் வந்தாச்சு. ஃபுட்பால், கபடின்னு மத்த விளையாட்டையும் கொஞ்சம் கண்டுக்கங்க ஐயா!

14 நாள்கள்

விண்ணில் அசத்தும் வில்லட் ஓவியா!

‘நீ
ட்’ தேர்வுக்கு எதிராகப் போராடித் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவை நினைவுகூரும் வகையில், தான் வடிவமைத்திருக்கும் சிறிய செயற்கைக்கோளுக்கு அனிதா-சாட் எனப் பெயரிட்டிருக்கிறார் மாணவி ஒருவர். திருச்சியை அடுத்த திருவெறும்பூரைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்புப் பள்ளி மாணவி கே.ஏ. வில்லட் ஓவியா. 500 கிராம் எடைகொண்ட இந்தச் சிறிய செயற்கைக்கோள் வரும் மே ஆறாம் தேதியன்று மெக்சிகோ நாட்டிலிருந்து ஹீலியம் பலூன் மூலம் விண்ணில் ஏவப்படவிருக்கிறது. அதற்கான கவுன்ட் டவுன் சமீபத்தில் தமிழகத் தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. வளி மண்டலத்தில் 15 கி.மீ உயரத்தில் மூன்று மணி நேரம் மட்டுமே பறக்கவுள்ள இந்தச் செயற்கைக்கோள், காற்றின் தரம், தட்பவெப்பம், அழுத்தம் போன்றவற்றை அதில் இணைத்துள்ள சென்ஸார்கள் மூலம் கண்டறிய உதவும். செயற்கைக்கோள் சேகரிக்கும் தகவல்கள் மெக்சிகோ நகரின் அஸ்ட்ரா லேபுக்கு அனுப்பப்படும். பின்னர் பாராசூட் மூலம் கடலில் இறங்கும் செயற்கைக்கோள் மீட்கப்படும்.

“செயற்கைக் கோளில் உள்ள வாயு சென்ஸார்கள் காற்றில் உள்ள கரியமில வாயு, பிராண வாயு போன்றவற்றையும் அளவிடும். இதைக் கொண்டு காற்றில் உள்ள மாசு அளவிடப்பட்டு, வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான செயல் திட்டம் வகுக்கலாம்” என்று ஆர்வத்துடன் கூறுகிறார் ஓவியா. கடந்த மூன்று ஆண்டுகளாக இதன் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளார் இவர். ‘அக்னி இக்னைட் இந்தியா’ என்ற தனியார் அமைப்புடன் இணைந்து இந்த சாட்டிலைட்டைத் தயாரித்துள்ளார். இத்தனையும் செய்துவிட்ட ஓவியா, இப்போது ‘நீட்’ தேர்வுக்குத் தயாராகிவருகிறார்.

வாழ்த்துகள்... சாட்டிலைட் பெண்ணே!

14 நாள்கள்

‘சர்ஜரி ஆப்’ விளையாட்டுகள்... உஷார்!

`பி
யூட்டி கிளினிக்’, ‘பிரின்சஸ் பிளாஸ்டிக் சர்ஜரி’, ‘பிளாஸ்டிக் சர்ஜரி சிமுலேட்டர்’, ‘லிப் சர்ஜரி சிமுலேட்டர்’, ‘சூப்பர் ஸ்டார் பிளாஸ்டிக் சர்ஜரி’ - இவை எல்லாம் சமீபகாலமாகப் பிரபலம் ஆகிவரும் ஆப்கள். அதிர்ச்சி அடையும் வகையில் இவற்றை விளையாடுவது பெரியவர்கள் அல்லர்... நம் வீட்டுக் குழந்தைகள். சிமுலேட்டர் மூலம் அறுவை சிகிச்சை விளையாட்டுகள் விளையாடுவது வாடிக்கைதான். ஆனால், உதடு அறுவை சிகிச்சை, மூக்கைத் திருத்தும் அறுவை சிகிச்சை, இடையைச் சிறுக்க வைக்க, மார்பு அளவைப் பெரிதாக்க எனப் பல சிகிச்சை முறைகளைக் குழந்தைகள் விளையாட்டாகத் தருகின்றன இந்தச் செயலிகள் (ஆப்). இவற்றுக்கு எதிராகக் களம் இறங்கியிருக் கிறார்கள் பொதுமக்கள் மற்றும் ‘பாடி ஷேமிங்’ எனப்படும் உடல் அவமானப்படுத்துதலுக்கு எதிரான அமைப்புகள்.

இதுபோன்ற செயலிகள் மூலம் அழகியல் குறித்த தவறான எண்ணங்களை பெருநிறுவனங்கள் இளைய தலைமுறையினரிடம் விதைத்து வருகின்றன என உலக அளவில் பெரும் எதிர்ப்பை இவர்கள் கிளப்பியிருக்கிறார்கள். ``நாம் பாலியல் குறித்த அறிவைச் சரியான வயதில் குழந்தைகளுக்குத் தராமலிருப்பது போலவே, அழகைப் பிரதானமாகக் கொண்ட தவறான விளையாட்டுகள் பற்றியும் அவர்களுக்கு அறிவுறுத்துவதில்லை” என்கிறார் அமெரிக்க பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டேவிட் காங்கெல்லோ. ஆப்பிள் நிறுவனத்தின் டாம் நியுமேர் “ஆப்பிள் நிறுவனம் இவை போன்ற விளையாட்டுகளை ஆப் வடிவில் அனுமதிப்பதில்லை” என்று அறிவித்ததைத் தொடர்ந்து, ஐஸ்டோரில் இந்தச் செயலிகள் அழிக்கப்பட்டுவிட்டன. கூகுள் நிறுவனமும் இவற்றை அனுமதிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் மலிந்து கிடக்கும் ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் இந்தச் செயலிகள் மிக எளிதாகத் தரவிறக்கம் செய்யப்படும் வகையில்தான் இருக்கின்றன. இதுகுறித்த விழிப்பு உணர்வு இன்னமும் நம் மக்களிடம் வரவில்லை.

ம்க்கும்… நாம எல்லாத்துலயும் லேட்டுதான்!

14 நாள்கள்

சர்வதேச அளவில் சாதிக்கும் மீனா கந்தசாமி!

ர்வதேச அளவில் புனைகதை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பெயிலிஸ் பெண்கள் விருது வழங்கப்படுகிறது. 2018-ம் ஆண்டுக்கான ‘மகளிர் புனைகதை விருது’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த விருதின் இறுதிப் பட்டியலில் ஆறு பெண்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மீனா கந்தசாமியும் ஒருவர். இவர் எழுதிய ‘வென் ஐ ஹிட் யூ’ என்ற ஆங்கில நாவலுக்காக மீனாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விருதுத் தேர்வு குறித்து நடுவர் குழுத்  தலைவர் சாரா சாண்ட்ஸ் கூறுகையில், “நடுவர்களிடம் நேர்மையாகவும் நேரடியாகவும் பேசக்கூடிய படைப்புகளைத்தான் தேர்ந்தெடுத்தோம். இன்டர்நெட்டின் தாக்கம், பாலியல் வன்முறை, துக்கம், மெர்மெய்டுகள் என வித்தியாசமான களம் கொண்ட புத்தகங்களையே தேர்வு செய்தோம்” என்றார்.

பெஸ்ஸி என்ற ஏழரை அங்குல வெண்கலச் சிலையும், முப்பதாயிரம் பவுண்டு ரொக்கப் பணமும் இந்த விருதுப் பட்டயத்துடன் வழங்கப்படுகின்றன. ஜூன் 6 அன்று விருது யாருக்கு என்பது தெரியவரும்.

மனமுறிவு மற்றும் கணவன் மனைவிக்கு இடையேயான எமோஷனல் அடக்குமுறை, வன்முறை குறித்து மிகுந்த வலியுடன் ‘வென் ஐ ஹிட் யூ’  நாவலில் பதிவுசெய்திருக்கிறார் மீனா.

ஆல் தி பெஸ்ட், மீனா! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism