Published:Updated:

14 நாள்கள்

14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

பெண்கள் உலகம் நிவேதிதா லூயிஸ்

14 நாள்கள்

பெண்கள் உலகம் நிவேதிதா லூயிஸ்

Published:Updated:
14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

டயானா மகன் திருமணம் முதல் எவரெஸ்ட் தொட்ட தந்தை - மகள் வரை...

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவை என்ன?

இங்கிலாந்து இளவரசருக்கு டும்டும்டும்!

இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசரான சார்லஸ் - டயானாவின் இளைய மகன் ஹாரிக்கு லண்டன் நகரில் விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. அரச குடும்ப வழக்கப்படி தூய ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற்ற வைபவத்தை உலகெங்கும் உள்ள மக்கள் கண்டுகளித்தனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரைச் சேர்ந்த மேகன் மார்க்லேயைக் கண்கவர் நிகழ்ச்சியில் திருமணம் செய்துகொண்டார் 33 வயதான ஹேரி. 36 வயதான மேகன், முன்னாள் நடிகை.  ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். மனிதநேய ஆர்வலரான மேகன் 2017-ம் ஆண்டு இளவரசர் ஹாரியுடன் நடைபெற்ற திருமண நிச்சயத்துக்குப்பின் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்த ஆண்டு ‘டைம்’ இதழ் தேர்ந்தெடுத்த உலகின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மேகனின் தந்தை தாமஸ் மார்க்லே  ஓய்வுபெற்ற லைட்டிங் டைரக்டர். தாய் டோரியா யோகா ஆசிரியை.

14 நாள்கள்

தந்தைக்கு நிகழ்ந்த அறுவை சிகிச்சை காரணமாக, அவருக்குப் பதிலாக இளவரசர் சார்லஸின் கரம்பிடித்து நடந்து ஆலயத்துக்குள் நுழைந்தார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் லண்டன் வீதிகளில் கூடி திருமண ஜோடியை வாழ்த்தினர். மும்பையைச் சேர்ந்த ‘டப்பாவாலாக்கள்’ இந்தத் திருமணத்துக்காக மும்பையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இளவரசர் சார்லஸின் திருமணத்துக்குச் சிறப்பு விருந்தினர்களாக லண்டன் சென்று திரும்பிய இவர்கள், சார்லஸின் மகனான ஹாரிக்கு மராட்டிய மாநில ஸ்பெஷல் திருமண உடைகளைப் பரிசாக அனுப்பியுள்ளனர்.

ராயல் ஜோடிக்கு வாழ்த்துகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐ.ஏ.எஸ் தேர்வு `ஆஹா’ முடிவுகள்!

சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் முதல் 25 இடங்களில் எட்டு இடங்களைப் பெண்கள் கைப்பற்றியுள்ளனர். இதுவரை டாப் 25-ல் பெண்கள் அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கைப்பற்றியதில்லை. இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அனுகுமாரி, தன் நான்கு வயது மகனை தாயிடம் விட்டுவிட்டு மிகுந்த சிரமத்துக்கிடையே வெற்றியடைந்திருக்கிறார்.

9-ம் இடம் பிடித்த சவுமியா ஷர்மா, நான்கு மாத பயிற்சி யில் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றிருக்கிறார்; மெயின் தேர்வின்போது, காய்ச்சலின் காரணமாக டிரிப்ஸ் ஏற்றிக்கொண்டு தேர்வு எழுதியதைப் புன்னகையுடன் நினைவுகூர்கிறார். ஏற்கெனவே ஐ.ஆர்.எஸ் பயிற்சியில் இருக்கும் ஆஷிமா மித்தல், ஐ.ஏ.எஸ் விருப்பத்தால் மீண்டும் தேர்வெழுதி இம்முறை 12-ம் இடத்தைப் பிடித்திருக்கிறார். 14-ம் இடத்தைப் பிடித்திருக்கும் டாக்டர் நேஹா ஜெயின், தேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் மற்றும் ஜிம்னாஸ்ட். 15-ம் இடம் பிடித்த ஷிவானி கோயல், வயதுவரம்பை எட்டாத காரணத்தால் ஓர் ஆண்டு தேர்வு
எழுத முடியாமல் காத்திருந்தவர். 16-ம் இடம் பிடித்த, எர்ணாகுளத்தை அடுத்த சிறிய கிராமத்தைச் சேர்ந்த சிகா சுரேந்திரன், படிப்பதற்கு டெல்லி வரை சென்றுவிட்டு, வீட்டைப் பிரிய முடியாத பாசத்தால் திரும்பியவர். மிகச் சாதாரண குடும்ப பின்புலம்கொண்ட இவர், ஏழ்மையைப் படிப்புகொண்டே விரட்ட முடியும் என்று தன் தந்தை தன்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்ததாகக் கூறுகிறார். 18-ம்
இடம்பிடித்த அபிலாஷா அபினவ்வின் கதை இன்னும் சுவாரஸ்யமானது. தந்தை ஐ.பி.எஸ் அதிகாரி. தனியார் நிறுவனப் பணி, அதன்பின் வங்கி வேலை என்று இருந்த அபிலாஷாவை, `நீ ஐ.ஏ.எஸ் ஆக முடியாது; அதிகாரி ஒருவரைத் திருமணம்தான் செய்துகொள்ளத்தான் முடியும்' என்று உறவினர் ஒருவர் நையாண்டி செய்ய, பொங்கி எழுந்துவிட்டார். கடும் முயற்சி, பயிற்சிக்குப் பின் தானே இன்று அதிகாரியாகி விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

23-ம் இடம் பிடித்த தபசியா பரிஹர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரும் டெல்லிக்கு இடம்பெயர்ந்து கடும் முயற்சி செய்து இந்த இடத்தைப் பிடித்திருக்கிறார்.

இவர்கள் தவிர, இன்னொரு சாதனைப் பெண் - குடிமைப்பணி அதிகாரியான 22 வயதே நிரம்பிய சுஸ்ரீ சுனில்குமார். அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் தந்தை சுனில்குமார். மன்மோகன்தான் தனக்குப் பெரும் இன்ஸ்பிரேஷன் என்று கூறி இருக்கும் சுஸ்ரீ, தன் முதல் முயற்சியிலேயே, 151-வது இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

கலக்குங்க கலெக்டர்களே!

எவரெஸ்ட் தொட்ட இமயங்கள்!

“உலகின் மிக அழகிய சூரிய உதயத்தை இன்று நாங்கள் கண்டோம்” என்று மே 16 அன்று காலை 4.30 மணிக்குத் தாங்கள் கண்ட விடிகாலை குறித்து ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் 24 வயது தீயா சூசன்னா.
இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? தீயா உதித்த கதிரைக் கண்டது தன் தந்தையுடன்... எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில்! ஸ்னோ லெப்பர்ட் அட்வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் அஜித் பஜாஜ், பத்மஸ்ரீ விருது பெற்றவர். ஏற்கெனவே வடதுருவம் மற்றும் தென்துருவங்களில் ஸ்கீ செய்த முதல் இந்தியர் என்ற பெருமை பெற்ற அஜித், தன் மகள் தீயாவையும் ஸ்கீயிங், மலையேற்றம் என்று அட்வென்ச்சர் விளையாட்டுகள் மீது ஆர்வம்கொண்டவராகவே வளர்த்தார். தன் 17-வது வயதில் ட்ரான்ஸ் கிரீன்லாந்து ஸ்கீயிங் எக்ஸ்பெடிஷனில் கலந்துகொண்ட மிக இளம் வயது பெண் என்ற சிறப்பைப் பெற்றார் தீயா.

14 நாள்கள்

லடாக், பிரான்ஸின் ஷேமானிக்ஸ் எனச் சிகரங்களை வென்றுகொண்டிருந்த தந்தை-மகள் ஜோடிக்கு, எவரெஸ்ட்டில் ஏறுவது பெரும் கனவாக இருந்தது. தாய் ஷர்லி ஆதரவு தர, ஏப்ரல் 16 அன்று வீட்டைவிட்டுக் கிளம்பினார்கள் இருவரும். ஒரு மாதம் கொஞ்சம் கொஞ்சமாக எவரெஸ்டை நோக்கிய பயணம் நகர்ந்து, ஒரு வழியாக மே 16 அன்று காலை இருவரும் எவரெஸ்ட்டில் இந்தியக் கொடியை நாட்டினர்.

அதே வாரம், அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த 40-வயதுப் பெண்ணான முரி லிங்கியும், எவரெஸ்டைத் தொட்டிருக்கிறார். நான்கு குழந்தைகளுக்குத் தாயான முரி, அருணாசலில்  பள்ளி பியூன். சிறுக பணம் சேர்த்து, கடும் முயற்சி செய்து எவரெஸ்டை அடைந்திருக்கிறார். எவரெஸ்டில் பிறர் போல் தேசியக் கொடியை நாட்டியது மட்டுமல்லாமல், `பேட்டி படாவோ, பேட்டி பச்சாவோ’ என்ற `பெண் குழந்தை
களுக்குக் கல்வி கொடுங்கள், பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்’ என்ற பிரதமரின் வாசகம் அடங்கிய பதாகையைக் கையில் ஏந்தி புகைப்படமும் எடுத்திருக்கிறார்.

சாதனைகள் தொடரட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism