Published:Updated:

தர்மபுரி சாயாசிங் 'மிஸ் கூவாகம்' (படங்கள்)

தர்மபுரி சாயாசிங் 'மிஸ் கூவாகம்' (படங்கள்)
தர்மபுரி சாயாசிங் 'மிஸ் கூவாகம்' (படங்கள்)

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த திருநங்கைகளின் மிஸ் கூவாகம் போட்டியில் சாயாசிங் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தர்மபுரி சாயாசிங் 'மிஸ் கூவாகம்' (படங்கள்)

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகத்தில் உள்ளது கூத்தாண்டவர் கோவில். இங்கு எழுந்தருளியிருக்கும் அரவாணனை தங்கள் கணவராக நினைத்து, திருநங்கைகள் வழிபட்டு வருகின்றனர்.

தர்மபுரி சாயாசிங் 'மிஸ் கூவாகம்' (படங்கள்)

இந்த கோவிலில் வருடா வருடம் ஏப்ரல் மாதத்தில் 18 நாள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகத்திலுள்ள அனைத்து திருநங்கைகளும் கலந்து கொள்வார்கள்.

தர்மபுரி சாயாசிங் 'மிஸ் கூவாகம்' (படங்கள்)

இந்த சமயத்தில் விழுப்புரம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் ரூம்கள் வாடகைக்கு கிடைக்காது. எங்கு பார்த்தாலும் திருநங்கைகளின் முகமாக தென்படும். திருநங்கைகளின் ஆடல், பாடல்களினால் விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டது போன்று இருக்கும்.

தர்மபுரி சாயாசிங் 'மிஸ் கூவாகம்' (படங்கள்)

கூவாகம், கூத்தாண்டவர் கோவிலின் இந்த வருடத்தின் திருவிழா கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மிஸ் கூவாகம் போட்டி இன்று மாவட்ட அரவாணிகள் நலச்சங்கத்தின் சார்பில் நடந்தது.

தர்மபுரி சாயாசிங் 'மிஸ் கூவாகம்' (படங்கள்)

இதில் தர்மபுரியைச் சேர்ந்த சாயாசிங் மிஸ் கூவாகமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திராவை சேர்ந்த அனுஷ்கா 2வது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த தீபிகா 3வது இடத்தையும் பிடித்தனர்.

தர்மபுரி சாயாசிங் 'மிஸ் கூவாகம்' (படங்கள்)

இன்று மாலை கூத்தாண்டர் கோவிலில் திருநங்கைகள் தாலிகட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து நாளை காலை தாலி அறுக்கும் நிகழ்ச்சியோடு விழா முடிவடையும்.

தர்மபுரி சாயாசிங் 'மிஸ் கூவாகம்' (படங்கள்)

இதற்கிடையே நேற்று மாலை ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட அழகிப்போட்டியில் சேலத்தை சேர்ந்த சங்கவி மிஸ் கூவாகமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னையைச் சேர்ந்த சுதா 2வது இடமும், கேரளாவை சேர்ந்த முபைக்கான் 3வது இடத்தையும் பிடித்தனர்.

ஆ.நந்தகுமார்


படங்கள்: தே.சிலம்பரசன்