
பள்ளிகளில் கழிவறைகளின் அவசியத்தையும், பொது இடங்களிலும் அவற்றைச் சுத்தமாக வைத்திருப்பது கடமை என்பதையும் உணர்த்திய ஆசிரியரின் ‘நமக்குள்ளே’ சிந்திக்க வேண்டியது; செயல்படுத்த வேண்டியது.
- என்.காளிதாஸ், சிதம்பரம்
இன்று பல பெண்கள் சொல்லிப் புலம்புவது, `உடற்பயிற்சி செய்ய எனக்கு நேரமில்லை' என்பதுதான். அவர்களுக்கு என்றே பிரத்யேகமாக வழங்கப்பட்ட ‘சமையலறையிலும் உடற்பயிற்சி செய்யலாம்!’ விளக்கங்களும் படங்களும் பயனுள்ளவை.
- அம்பிகா சஞ்சீவ், சென்னை-4
சேலம் - சென்னை பசுமை வழிச் சாலையால் பாதிக்கப்படும் மக்களின் நிலையைப் படித்தபோது என் கண்கள் கலங்கின.
- சி.கார்த்திகேயன், சாத்தூர்
‘எனக்குள் நான்’ படித்த பின்பு ஊர்வசி அற்புதமான நடிகை மட்டுமல்ல; புத்தக வாசிப்பும், சமூக அக்கறையும் கொண்ட ஒரு புத்திசாலி பெண்மணி என்பதும் தெரிந்தது. பாலசந்தர் பாராட்டி யது அவரது நடிப்புக்குக் கிடைத்த விருது என்பதில் சந்தேகமில்லை.
- சியாமளா ரங்கன், சென்னை-28
கல்குவாரிக்குள் கொத்தடிமையாக வாழ்ந்து மீண்டுவந்த பச்சையம்மாளின் வைரம் பாய்ந்த மனம் அவரை இன்று நிமிர்ந்து நிற்க வைத்துவிட்டது.
- என்.ரங்கநாயகி, கோவை-25
பிருந்தா ரமணியின் சுவையும் சத்தும் நிறைந்த சோயா ரெசிப்பிகள் சமையல் செய்வதில் என்னை மேலும் உற்சாகப்படுத்தின.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்