Published:Updated:

பைக் விபத்து, மகன் மரணம், அம்மா மீது வழக்கு

பைக் விபத்து, மகன் மரணம், அம்மா மீது வழக்கு
பிரீமியம் ஸ்டோரி
பைக் விபத்து, மகன் மரணம், அம்மா மீது வழக்கு

செய்திக்குப் பின்னே...த.கதிரவன்

பைக் விபத்து, மகன் மரணம், அம்மா மீது வழக்கு

செய்திக்குப் பின்னே...த.கதிரவன்

Published:Updated:
பைக் விபத்து, மகன் மரணம், அம்மா மீது வழக்கு
பிரீமியம் ஸ்டோரி
பைக் விபத்து, மகன் மரணம், அம்மா மீது வழக்கு

‘வ்வ்ர்ர்ர்ரும்....’

ஈரக்குலையை நடுநடுங்கவைக்கும் உறுமலும் கண்ணிமைக்கும் நேரத்தில், கடந்துசெல்லும் அசுர வேகமும்தான் ‘பைக் ரேஸ் பிரியர்’களின் பதறவைக்கும் `பய'டேட்டா. போக்குவரத்து மிகுந்த சாலைகளிலும் வளைந்து நெளிந்து, கட் அடித்து, மின்னல் வேகத்தில் பயணிக்கும் இந்த சாகசப் பிரியர்களால் விபத்துகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது.


சென்னை, அயப்பாக்கத்தைச் சேர்ந்த ரோஹித் அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 11-ம் வகுப்பு படித்து வந்தார். 16 வயது. பைக் என்றால் கொள்ளைப் பிரியம். மகனின் ஆசையைப் பூர்த்தி செய்ய, கடந்த மார்ச் மாதம் புத்தம்புது 300 சி.சி. பைக் ஒன்றைப் பரிசளித்துள்ளனர் அவர் பெற்றோர். சம்பவத் தன்று இரவு தனது புதிய பைக்கில், பள்ளித் தோழியுடன் அதிவேகத்தில் பயணித்திருக்கிறார் ரோஹித். அப்போது சாலையைக் கடந்துகொண்டிருந்த பாபு என்பவர்மீது ரோஹித்தின் பைக் எதிர்பாராதவிதமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார் பாபு. சாலையோர மரத்தில் மோதி விழுந்த ரோஹித் அன்றைய இரவே சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார். படுகாயங்களோடு உயிர் பிழைத்திருக்கிறார் தோழி.

பைக் விபத்து, மகன் மரணம், அம்மா மீது வழக்கு

‘18 வயதுக்குக் கீழேயுள்ள சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று காவல் துறை ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இதன்படி நாட்டிலேயே முதன்முறையாக, இந்த விபத்து வழக்கில், பைக்கின் உரிமையாளர் என்ற முறையில் ரோஹித்தின் தாயார்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘`18 வயதுக்குப் பிறகுதான் மனிதன் மனதளவில் முதிர்வு பெறுகிறான். அதனால்தான், வாகனம் ஓட்டும் அனுமதியில் ஆரம்பித்து வாக்களிக்கும் உரிமை வரை குறைந்தபட்ச வயது 18 என இந்திய அரசியல் சட்டம் நிர்ணயம் செய்திருக்கிறது. குழந்தை பிடிவாதமாகக் கேட்கிறது என்பதால், கத்தி, விஷம் மாதிரியான ஆபத்தான பொருள்களை அவர்களது கையில் கொடுத்துவிட முடியுமா?’’ என்கிறார் இவ்வழக்கை விசாரித்துவரும் காவல் ஆய்வாளர் சுகிலா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பைக் விபத்து, மகன் மரணம், அம்மா மீது வழக்கு

டீன்ஏஜ் குழந்தைகளை கன்ட்ரோல் செய்வது எப்படி?

பதின்பருவக் குழந்தைகளின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு வழிகாட்டுவது எப்படி? மனநல மருத்துவர் ஷாலினி தரும் விளக்கம் இது...

‘`இந்த வழக்கில், ரோஹித் அம்மாவுக்கு அடுத்தடுத்து இரண்டு துயரங்கள் நேர்ந்திருக்கின்றன. விபத்தில் மகனை இழந்திருக்கிறார்; அந்த விபத்து ஏற்பட காரணமாக இருந்திருக்கிறார் என்கிற குற்றச்சாட்டின் கீழ் அவர்மீதும் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், அவருக்கு அவசியம் கவுன்சலிங் தேவை.

பெரும்பான்மையான பெற்றோர் கூறும் புகாரே, ‘நாங்கள் எவ்வளவு தடுத்தாலும் அடம்பிடித்து வலுக்கட்டாயமாக டூவீலரை எடுத்துக்கொண்டு போய்விடுகிறான்’ என்பதாகத்தான் இருக்கிறது. பிள்ளைகள் டூவீலர் ஓட்டிச் செல்வதைப் பெற்றோரே ஊக்குவிப்பது என்பது அரிதானது.

பைக் விபத்து, மகன் மரணம், அம்மா மீது வழக்கு

சில பெற்றோர், பொருளாதார ரீதியான தங்களது வெற்றியைச் சமூகத்துக்கு எடுத்துக்காட்டும் விதமாக ஆடம்பரப் பொருள்களைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். மற்றொரு தரப்பினரோ, ‘நான்தான் கஷ்டப்பட்டேன்... என் பிள்ளைக்கு எந்த கஷ்டமும் வரக் கூடாது’ என்கிற எண்ணத்தில் குழந்தைகள் கேட்ட பொருளையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். இந்த இரண்டுமே தவறான நடைமுறை.

நெருக்கடியான காலகட்டங்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்கிற வித்தையைத் தான் நாம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர, வசதிகளைச் செய்துதரக் கூடாது.

ஒவ்வோர் உயிரும் எதிர்கொள்ளும் வாழ்க்கைத் திருப்பங்களைத்தான் நாம் கஷ்டம் என்று வகைப்படுத்துகிறோம். அப்படிப்பட்ட சோதனையான காலகட்டத்தைத் தாண்டி வெளியே வந்தபிறகு அதன்மூலம் கிடைத்த பாடங்களும் நம் கைவசம் இருக்கும். நம்மை வலிமையடைய வைக்கும் இந்த அனுபவப் பாடங்களை நம் குழந்தைகளுக்கும் பக்குவமாக எடுத்துச் சொல்லி உணரவைக்க வேண்டும்.

ரோஹித் வழக்கிலிருந்து மற்ற அம்மாக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்... வீட்டில் அடம்பிடிக்கும் தங்களது டீன்ஏஜ் பிள்ளைகளிடம், இந்தச் சம்பவத்தையே எடுத்துச் சொல்லி எச்சரிக்கை செய்யலாம். வயதுக்கு வந்த பிள்ளைகளைக் காயப்படுத்தாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், இதுபோன்ற உதாரணங்களைப் பக்குவமாக எடுத்துச் சொல்லித்தான் உணரவைக்க வேண்டும்’’ என்கிறார் தெளிவாக.

சாகசத் துடிப்பு என்பது பதின்பருவத்துக்கே உரிய சிறப்புதான். ஆனால், அது நல்லவற்றுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.

18 வயது வரட்டும்...

மோட்டார் வாகன விதிகள் குறித்துப் பேசும் ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகள், ‘`16 வயதிலிருந்து 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 50 சி.சி. திறன் கொண்ட வாகனங்களை மட்டும் ஓட்டலாம் என்ற விதி முன்பு இருந்தது.  இப்போதோ குறைந்தபட்சம் 70 சி.சி திறன் கொண்ட வாகனங்கள்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே, இன்றையச் சூழ்நிலையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பதே நல்லது’’ என்கின்றனர்.