Published:Updated:

ரயிலில் பயணிக்கும் பெண்களைக் காக்க, `ஜி.ஆர்.பி ஹெல்ப்' செயலி அறிமுகம்!

ரயிலில் பயணிக்கும் பெண்களைக் காக்க,  `ஜி.ஆர்.பி ஹெல்ப்'  செயலி அறிமுகம்!
ரயிலில் பயணிக்கும் பெண்களைக் காக்க, `ஜி.ஆர்.பி ஹெல்ப்' செயலி அறிமுகம்!
ரயிலில் பயணிக்கும் பெண்களைக் காக்க,  `ஜி.ஆர்.பி ஹெல்ப்'  செயலி அறிமுகம்!

சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்று வரை குழந்தைகள், பெண்கள் என யாரும் .சுதந்திரமாய், நிம்மதியாய்ப் பயணிக்க முடியவில்லை. ரயில் பயணங்களின்போது, ஆளில்லா பெட்டிகளில் பயணிப்பது மிகவும் அச்சுறுத்தலாக அமைகிறது. அதிகாலை பணிக்குச் செல்லும் பெண்கள், பணி முடிந்து இரவு வீடு திரும்பும் பெண்கள், கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் எனப் பெரியவர் முதல் சிறியவர் வரை  ஏதோ ஒரு தருணத்தில்-ரயில் பயணங்களின்போது தாங்கள் எதிர்கொண்ட சம்பவங்களை எங்கு, யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியாமல் அலைந்து திரிந்த கதைகள் ஏராளமாகக் கேள்விப்படுகிறோம்..எல்லா சமயங்களிலும் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்துவதும் சாத்தியமற்றது.இந்நிலையில் ,ரயில்வே போலீஸ் சார்பில் ஜி.ஆர்.பி கா ஹெல்ப் என்னும் செயலி வடிவமைக்கப்பட்டு, சென்னை‌ சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் செயலியைப் பயன்படுத்துவதன்மூலம் தாங்கள் அன்றாடம் ரயிலில் சந்திக்கும் பிரச்னைகள், மர்ம நபர்கள் , பாலியல் சீண்டல்கள்,ஆயுதங்கள், தங்களுக்குத் துன்பம் தரும் நிகழ்வுகள் பற்றிப் பதிவிடலாம். இத்துடன்‌, முடிந்தால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவுசெய்யலாம். குறிப்பிட்டுள்ள பிரச்னையின் தன்மைக்கேற்ப , அருகில் உள்ள ரயில்நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனே நடவடிக்கை‌ எடுக்கப்படும். இந்த ஆப்பை ப்ளே ஸ்டோரில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த ஆப்பில், ரயில்வே துறையின் உயர் அதிகாரிகளின்  தொடர்பு எண்கள் இணைக்கப்பட்டுள்ளன .இந்த ஜிஆர்பி ஹெல்ப்  ஆப், பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கருதலாம்.

நம் ஸ்மார்ட்போனில், அவசியமான இந்த ஆப்பை பதிவிறக்கி , நம் எண்ணைப் பதிவுசெய்துகொள்வதன் லம் ஏதேனும் ஒரு தருணத்தில் நமக்கு இல்லை என்றாலும்‌, நம்முடன் பயணிக்கும் ஏதேனும் ஒருவருக்கு உதவியாக இருக்கும்.