Published:Updated:

இந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் டெபுடி டைரக்டர் ஜெனரல், இந்திய வெதர் உமன்! - அன்னா மானி

இந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் டெபுடி டைரக்டர் ஜெனரல், இந்திய வெதர் உமன்! - அன்னா மானி
பிரீமியம் ஸ்டோரி
இந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் டெபுடி டைரக்டர் ஜெனரல், இந்திய வெதர் உமன்! - அன்னா மானி

முதல் பெண்கள்ஹம்சத்வனி - ஓவியம் : கார்த்திகேயன் மேடி

இந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் டெபுடி டைரக்டர் ஜெனரல், இந்திய வெதர் உமன்! - அன்னா மானி

முதல் பெண்கள்ஹம்சத்வனி - ஓவியம் : கார்த்திகேயன் மேடி

Published:Updated:
இந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் டெபுடி டைரக்டர் ஜெனரல், இந்திய வெதர் உமன்! - அன்னா மானி
பிரீமியம் ஸ்டோரி
இந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் டெபுடி டைரக்டர் ஜெனரல், இந்திய வெதர் உமன்! - அன்னா மானி

1918-ம் ஆண்டு இன்றைய கேரள மாநிலத்தின் பீர்மேடு மலைக் கிராமத்தில் பிறந்தார் அன்னா மானி. அவர் தந்தைக்கு அந்தப் பகுதியில் நிறைய ஏலக்காய்த் தோட்டங்கள் இருந்தன. எட்டு வயது நிரம்பிய அன்னாவுக்குப் பிறந்த நாள் பரிசாக வைரத் தோடு வாங்கி வந்தார் தந்தை. அதற்கு பதிலாக, 10 தொகுதிகள் ‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா’ புத்தகங்களை வாங்கித் தரக் கேட்டு அடம்பிடித்தார். வைரங்கள் புத்தகங்களாக மாறின. தன் பத்தாவது வயதில் பீர்மேடு பொது நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும் வாசித்து முடித்திருந்தார் சிறுமி அன்னா!

1925-ம் ஆண்டு, வைக்கம் போராட்டத்தில் பங்கெடுக்க வந்த காந்தியை முதன்முதலில் பார்த்த சிறுமி அன்னா, அவரால் பெரிதும் கவரப்பட்டார். எட்டு வயது முதல் இறுதி நாள்கள்வரை கதர் உடைகளையே அணிந்தார். இயற்பியல்மீது கொண்ட பெரும் ஆர்வத்தால், சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். முதல் இடத்தைப் பிடித்து, பட்டம் பெற்றார் அன்னா. மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் ஓர் ஆண்டு பணிபுரிந்தார்.

1942 - 1945 ஆண்டுகளில் பெங்களூரில் `சர் சி.வி.ராமனின் வைரங்கள்' குறித்த ஆய்வில் ஈடுபட்டு ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார் அன்னா. வைரங்களின் ஒளிர்வு குறித்த தன் பிஹெச்.டி படிப்புக்கான ஆய்வறிக்கையை 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். முதுகலைப் பட்டப்படிப்பு இல்லாத காரணத்தால், அன்னாவின் ஆய்வறிக்கையை ஏற்க மறுத்த பல்கலைக்கழகம், முனைவர் பட்டம் வழங்கவும் மறுத்துவிட்டது.

இந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் டெபுடி டைரக்டர் ஜெனரல், இந்திய வெதர் உமன்! - அன்னா மானி

வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், மனம் தளராத அன்னா, இங்கிலாந்து சென்று உதவித்தொகை பெற்று வானியல் துறையில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். இங்கிலாந்தின் டெட்டிங்டன் நிறுவனத்தில் ஓராண்டு படிப்புக்குப் பின் இந்தியா திரும்பினார். இந்திய வானியல் ஆய்வு நிறுவனம் அன்னாவை தன் புனே அலுவலகத்தில் ‘கிரேட் 2 மெட்ராலஜிஸ்ட்’ பதவியில் பணியமர்த்தியது. அதன் பின் அன்னாவுக்கு ஏறுமுகம்தான். 1945-ம் ஆண்டு வரை ஐரோப்பிய நாடுகளில் இருந்துதான் தன் வானியல் கருவிகளை இறக்குமதி செய்து வந்தது இந்தியா. `மேக் இன் இந்தியா’வைத் தன் குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்ட அன்னா, வானியல் கருவிகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் எண்ணத்தில் பணிகளைத் தொடங்கினார். 100 கருவிகளுக்கு மேல் மாடல் வரைபடங்களை வரைந்து, அவற்றை இங்கேயே தயாரிக்க வழிவகுத்தார். அவரது மேற்பார்வையில் அப்போது 121 ஆண்கள் பணிபுரிந்தனர். இதன் பிறகே, 1960-ம் ஆண்டு இந்தியா வானியல் கருவிகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது. இந்திய வானியல் துறையின் டெபுடி டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார் அன்னா. அந்தப் பதவியில் அமர்ந்த முதல் பெண் இவரே! இந்தியாவின் வானியல் நிலையங்கள் அன்னா வடிவமைத்த கருவிகளையே இன்றும் உபயோகிக்கின்றன.

உலக வானியல் அமைப்பின் மீது தன் கவனத்தைத் திருப்பினார் அன்னா. ஓசோன் சிதைவு குறித்த அன்னாவின் ஆய்வுகள், ஓசோன் சிதைவை அளக்கும் கருவியை இந்தியாவிலேயே உருவாக்கியது போன்ற அன்னாவின் பணிகள், உலகின் கவனத்தை ஈர்த்தன. சர்வதேச ஓசோன் கமிஷனில் உறுப்பினராக அன்னாவை நியமித்தது உலக வானியல் அமைப்பு. கமிஷன் ஃபார் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அண்டு மெத்தட்ஸ் ஆஃப் அப்சர்வேஷன்ஸ் அமைப்பின் முதல் பெண் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் அன்னா.

1963-ம் ஆண்டு விஞ்ஞானி  விக்ரம் சாராபாயின் வேண்டுகோளுக்கு இணங்க, தும்பா ராக்கெட் தளத்தில் வானியல் ஆய்வுக்கூடம் அமைத்துத் தந்தார் அன்னா. இந்திய கப்பற்படையின் கப்பல்களில் வானியல் கருவிகளை வடிவமைத்தார். இந்தியாவின் முக்கிய நகரங்களில் ‘லேண்டிங் கருவிகள்’ வடிவமைத்து, அவற்றை நிறுவியும் தந்தார்.

சோலார் கதிரியக்க ஆய்வகங்களை நாடு முழுதும் நிறுவினார். ‘சோலார் ரேடியேஷன் டேட்டா ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் இந்திய சோலார் கதிரியக்கத் தகவல்கள் குறித்து இரண்டு புத்தகங்களை எழுதினார். அன்னாவின் பெரும் முயற்சியால் 1975-ம் ஆண்டு இந்தியாவில் 35 கதிரியக்க அளவீட்டு நிலையங்கள் இயங்கத் தொடங்கின. தன் கவனத்தை ‘காற்று மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க வளங்கள்’ மீது திருப்பினார். அவரது பணிக்காலத்தில் 600 காற்று அளவீட்டுக் கருவிகள் நிறுவப்பட்டன. 1976-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற அன்னா, அதன் பின்னரும் தன் கல்விப்பணியைத் தொடர்ந்தார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றினார். 1994-ம் ஆண்டு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அன்னா, வீல்சேரில்தான் வீடு திரும்பினார். இறுதிவரை நாட்டு நலனுக்காக உழைத்து, திருமணம் செய்துகொள்ளாத அன்னா, தங்கைகளின் பராமரிப்பில் அடைக்கலம் புகுந்தார்.

2001-ம் ஆண்டு மரணமடைந்தார். `இந்தியாவின் வெதர் உமன்’ என்ற அடைமொழிக்கு முற்றிலும் தகுதியான பெண்மணி - அன்னா மானி. ஆணாதிக்கச் சமூகத்தில் படிப்பு ஒன்றையே தன் ஆயுதமாகக்கொண்டு, இந்திய வானியல் துறையின் தூணாக உயர்ந்து நிற்கிறார் இந்த முதல் பெண்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!