Published:Updated:

எல்லாம் நல்லபடியா நடக்கும்! - டிஃபனி பிரார்

எல்லாம் நல்லபடியா நடக்கும்! - டிஃபனி பிரார்
பிரீமியம் ஸ்டோரி
எல்லாம் நல்லபடியா நடக்கும்! - டிஃபனி பிரார்

தடைகளை உடைத்த தங்கம்கு.ஆனந்தராஜ்

எல்லாம் நல்லபடியா நடக்கும்! - டிஃபனி பிரார்

தடைகளை உடைத்த தங்கம்கு.ஆனந்தராஜ்

Published:Updated:
எல்லாம் நல்லபடியா நடக்கும்! - டிஃபனி பிரார்
பிரீமியம் ஸ்டோரி
எல்லாம் நல்லபடியா நடக்கும்! - டிஃபனி பிரார்

கேரளாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம், டிஃபனி பிரார். பிறப்பி லேயே பார்வைத்திறன் இழந்த இவர் எதிர்கொண்ட புறக்கணிப்புகள் மிக அதிகம். அவற்றில் இருந்தெல்லாம் தன்னை மீட்டெடுத்தவர், இப்போது பார்வைத்திறனற்ற மாற்றுத் திறனாளி களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி பிறக்க உறுதுணையாக இருக்கிறார்.

எல்லாம் நல்லபடியா நடக்கும்! - டிஃபனி பிரார்

‘`நான் பிறந்தது சென்னையில். அப்பா, மிலிட்டரி ஆபீஸர். அதனால டெல்லி, டார்ஜிலிங், ஊட்டி, கேரளானு பல இடங்கள்ல படிச்சேன். பள்ளியில் படிக்கும்போதே சமூக நிகழ்வுகளைத் தெரிஞ்சுக்கிறதுலயும் ஆர்வமா இருப்பேன். அப்படி நான் தெரிஞ்சுகிட்ட ஒரு விஷயத்தை மத்தவங்களுக்கும் தெரியப்படுத்த விரும்புவேன். ஆனா, ‘நீ பெருசா என்ன சொல்லிடப் போற?’ என்கிற மனநிலையிலேயே எல்லோரும் அணுகுவாங்க. ‘ஃபீல்டு விசிட், பி.இ.டி பீரியடுக்கு எல்லாம் நீ வர வேண்டாம்... க்ளாஸ்லேயே இரு’னு சொல்லிட்டுப் போவாங்க. மாற்றுத்திறனாளியான என்னை மேலும் தனிமைப்படுத்திய பால்யமே எனக்குக் கிடைச்சது. காலேஜ் முடிக்கிறவரைக்குமே இதே நிலைதான். இப்படி என் மனசுல சேர்ந்துட்டே வந்த வேதனைகள்தான், ‘இந்தப் புறக்கணிப்புகள் மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் நிகழாம இருக்க, நாம ஏதாவது செய்யணும்’கிற உந்துதலைக் கொடுத்தது’’ என்கிறவர், பள்ளிப் பருவத்தில் ஒரு பேரிழப்பையும் சந்தித்திருக்கிறார்.

‘`நான் எட்டாவது படிச்சப்போ எங்கம்மா இறந்துட்டாங்க. அப்போ அப்பா கார்கில் போரில் இருந்தார். நான் ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சேன். ஊட்டியில ப்ளஸ் டூ முடிச்சுட்டு, கேரளாவில் பி.ஏ ஆங்கிலம் படிச்சேன். தொடர்ந்து, ஒரு டிரஸ்ட்ல ரிசப்ஷனிஸ்டா வேலைக்குச் சேர்ந்தேன். கோயம்புத்தூர்ல பி.எட் ஸ்பெஷல் எஜுகேஷன் முடிச்சேன்.

படிப்பு, வேலை ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம், என் மனசுல இருந்த சமூகச் செயல்பாட்டு எண்ணத்தை நிறைவேற்ற நினைச்சேன். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு, அவங்க வீடுகளுக்கே சென்று பாடங்களைக் கற்றுக்கொடுத்தேன். சமூகத்திலிருந்து நாம ஒதுங்காமலும், ஒதுக்கப்படாமலும் எப்படிச் சேர்ந்து பயணிக்கணும் என்பதை என் அனுபவத்தில் இருந்து சொல்லிக்கொடுத்தேன். மாலை நேரங்கள், விடுமுறை தினங்களெல்லாம் இப்படித்தான் கழிந்தன. அதனால பலன் பெற்றவங்க தங்கள் வாழ்க்கையில் ஓர் அடி முன்னாடி எடுத்து வைக்கும்போதெல்லாம், எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்’’ என்பவர், 2015-ம் ஆண்டு ‘ஜோதிர்கமயா ஃபவுண்டேஷன் (jyothirgamayaindia.org)’ என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். அந்த முயற்சிக்குத் தூண்டுகோல், அப்துல் கலாமுடன் டிஃப னிக்கு வாய்த்த அந்த மணித் துளிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லாம் நல்லபடியா நடக்கும்! - டிஃபனி பிரார்

“2014-ம் வருஷம். கேரளாவில் நான் வேலைபார்த்த பள்ளியில ஒரு நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினரா முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வந்திருந்தார். அவர் மேடை ஏறும்போது, நான் எழுந்து நின்னு வணக்கம் சொன்னேன். என்னை மேடைக்கு அழைத்த கலாம் சார்கிட்ட, என் வேலை, சமூகச் செயல்பாடுகள் பற்றியெல்லாம் சொன்னேன். நெகிழ்ந்து, மகிழ்ந்து வாழ்த்தியவர், ‘உங்க சேவையை மேலும் விரிவுபடுத்துங்க’னு சொன்னார். அப்புறம்தான், இனி வேலையை விட்டுட்டு முழுநேர சமூகப் பணியில இறங்கிடலாம்னு முடிவெடுத்தேன். மூணு வருஷமா டிரஸ்ட் நல்லபடியா ரன் ஆகுது” என்கிறார் டிஃபனி. இவரது தொண்டு நிறுவனத்தில் பார்வைத்திறன் இழந்த ஏழை மாற்றுத்திறனாளிகள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இலவசப் பயிற்சி பெற்று நல்ல நிலைக்கு உயர்ந்திருக்கின்றனர்.

“கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகள், கல்வி, சுயமாகச் செயல்படுவது, சமூகத்துடன் இணைந்து செயல்படுவது, ஸ்டிக் பயன்படுத்தி தனியாகவே வெளியிடங்களுக்குச் சென்று வருவது, தன்னம்பிக்கைப் பயிற்சிகள், தொழில்முனைவோர் பயிற்சிகள், ஃபீல்டு விசிட், மாற்றுத்திறனாளி களுக்கான புறக்கணிப்புகளை எதிர்கொண்டு இயங்குவது உள்ளிட்ட பல விஷயங்களையும் நாங்க சொல்லிக்கொடுக்கிறோம். இரு பாலரும் பயிற்சி எடுத்துக்கிறாங்க. பயிற்சியை முடிச்சவங்க எல்லாம் சுயசார்புடன் வாழ ஆரம்பிச்சிருக்காங்க.

எல்லாம் நல்லபடியா நடக்கும்! - டிஃபனி பிரார்

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அதிக உதவி செய்து ஊக்குவித்தால் இன்னும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்” என்கிற டிஃபனி, கேரள அரசின் ‘சிறந்த சமூக சேவகர்’ விருது, தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பின் ‘சிறந்த ரோல் மாடல்’ விருது, சமீபத்தில் ஜனாதிபதியிடம் பெற்ற ‘சிறந்த ரோல் மாடல் 2017’  தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்றிருக்கிறார்.

“டிரஸ்ட் ஆரம்பிக்க நினைச்சப்போ, பொருளா தாரம்தான் பெரிய தடையா இருந்துச்சு. ஆனாலும், `முதல்ல தொடங்கிடலாம்; அப்புறம் எல்லாம் நல்லபடியா நடக்கும்’ என்கிற எண்ணம் மனசுல இருந்தது. அது உண்மையாகவும் மாறியது. நல்ல முயற்சிகளுக்குச் சின்னச் சின்னப் பிரச்னைகள் வருமே தவிர, பெரிய தடைகள் வராதுனு உறுதியா நம்பறேன். தொடர்ந்து பயணிப்போம்” என நம்பிக்கையுடன் சிரிக் கிறார் டிஃபனி பிரார்!