Published:Updated:

`பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம்!' - ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

`பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம்!' - ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
`பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம்!' - ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

பெண்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் இடம் தொடர்பான ஆய்வில் ஐ.நா அதிர்ச்சிகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

கடந்த வருடத்தில் உலகம் முழுவதிலும் இறந்த பெண்களில் பாதிப் பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் அதிகமானவை தங்கள் காதலன், கணவர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் மூலமாகவே நடந்தவை என ஐ.நா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தாங்கள் இருக்கும் வீடே பெண்களுக்கு ஆபத்தான இடமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

பெண்களுக்கு எதிரான வன்முறையை அகற்றும் சர்வதேச நாளில் இதன் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஐ.நா-வின் போதை மருந்து மற்றும் குற்றங்கள் தடுக்கும் பிரிவுக்கு 2017-ம் ஆண்டு மட்டும் பெண்கள் தொடர்பாக சுமார் 87,000 புகார்கள் வந்துள்ளதாகவும் அவற்றில் 58 சதவிகிதம் வழக்குகளில் தங்கள் குடும்ப உறுப்பினர்களே குற்றவாளிகளாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 34 சதவிகிதம் வழக்குகளில் தங்களில் கணவர், காதலன் மற்றும் நண்பர்களின் மூலம் மட்டுமே கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆய்வு ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் நடத்தப்பட்டது. உலகளவில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் சுமார் 6 பெண்கள் வீதம் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். 

`` பாலின பாகுபாடு, சமத்துவமின்மை போன்ற காரணங்களால்தான் பெண்கள் அதிகளவில் கொலை செய்யப்படுகின்றனர். அதுவும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களால் இந்தக் கொலை சம்பவங்கள் அதிகம் அரங்கேற்றப்படுகிறது. எனவே, பெண்களுக்கு அவர்களில் வீடே மிகவும் ஆபத்தான இடமாக உள்ளது. உறவுகள் மற்றும் குடும்பத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்படும் சூழல் இன்னும் உருவாகவில்லை ” என ஐ.நா-வின் போதைப் பொருள் மற்றும் குற்றப்பிரிவு தடுப்பு தலைமை அதிகாரி யுரி ஃபெடோடொவ் (Yury Fedotov) கூறியுள்ளார்.