``சந்தோஷங்களில் திளைக்கிறேன்!’’

நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜசிந்தா ஆர்டென் தன் முதல் பெண் குழந்தை பிறந்து ஆறு வாரப் பிரசவ விடுப்புக்குப்பின் மீண்டும் பணியில் சேர்ந்தார். 38 வயதான ஜசிந்தா, தான் சூப்பர் ஹியூமன் இல்லை என்றும், குழந்தை வளர்ப்பின் சிரமங்களை மறைக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார். பதவியில் இருக்கும்போது குழந்தைப்பேறு அடைந்த இரண்டாவது பிரதமர் ஜசிந்தா. முதலாமவர் பெனாசிர் பூட்டோ.

“குற்ற உணர்ச்சி என்பது பெண்களுக்குக் கண்டிப்பாக இருக்கும். குழந்தைக்கு இன்னும் அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு நிச்சயம் உண்டு” என்று தெரிவித்த ஜசிந்தா, “பெண்கள் தங்கள் மனதுக்கு நெருக்கமான முடிவுகளை எடுத்து குடும்பம், அலுவலகம் என இருபுறமுமே திருப்தியை அடையும் காலம் என்றாவது வரும்” என்றார். பிரதமர் என்பதாலேயே தன்மீது உலகின் பார்வை தேவையற்று விழுந்திருக்கிறது என்பதை உணர்ந்துள்ள ஜசிந்தா, இப்போதைக்கு குழந்தைக்குப் பால் புகட்டுவது, நேப்பி மாற்றுவது, தூங்குவது எனச் சின்னச் சின்ன சந்தோஷங்களில் திளைப்பதாகத் தெரிவித்தார்.

அம்மான்னா சும்மாவா!

என் நிலவே... என் நட்சத்திரமே!

`பம்பாய்’, `காதலர் தினம்’ உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்த பாலிவுட் நடிகையான சோனாலி பெந்த்ரே, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவருகிறார். அண்மையில் இந்தியாவில் இருக்கும் அவர் மகன் ராக்கி என்ற ரன்வீர் பெல்லின் 13-வது பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சோனாலி. “ரன்வீர்… என் கதிரவனே, என் நிலவே, என் நட்சத்திரமே, என் வானமே… ஓகே… கொஞ்சம் நாடகத்தனமாகத்தான் இருக்கிறது. ஆனால், இது உன் பதின்மூன்றாவது பிறந்தநாள். வாவ்... நீ ஒரு டீன்ஏஜர்! இதை நம்ப எனக்கு இன்னும் கொஞ்சம் நாள்கள் ஆகும். என்னை மிகவும் பெருமைகொள்ளச் செய்திருக்கிறாய் நீ. உன் நகைச்சுவை உணர்வு, உன் பலம், உன் அன்பு, உன் சேட்டை… எல்லாவற்றையும் நான் ரசிக்கிறேன். நாம் ஒன்றாக இல்லாத முதல் பிறந்தநாள் இது. உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன். நிறைய அன்பும் அணைப்பும்” என்று பிறந்தநாள் வாழ்த்தை மகனுக்குச் சொல்லியிருக்கிறார்.

“அவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கக் கூடாது என்று எண்ணினாலும், எப்போதுமே அவனுடன் வெளிப்படையாகவே எல்லாம் விவாதித்து வந்திருக்கிறோம். இப்போதும் அப்படித்தான். மிகுந்த மெச்சூரிட்டியுடன் கேன்சர் செய்தியைக் கேட்டுக்கொண்டான். அடுத்த நொடியே என் வலிமைக்கு அஸ்திவாரமாக, என் தன்னம்பிக்கையின் ஊற்றாக மாறிப்போனான்” என நெகிழ்ந்து எழுதியிருக்கிறார்.

மனதார வாழ்த்துகிறோம்... ஹேப்பி பர்த்டே ராக்கி!

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி

சமீபத்தில் சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார் நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமானி. இதற்கு முன் அப்பதவியை வகித்த நீதிபதி இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் செல்வதால், அந்தப் பதவிக்கு வந்திருக்கிறார் விஜயா. நீதிபதி துரைசாமியுடன் இணைந்து, டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க வேண்டிய மகளிர் உரிமை சம்பந்தப்பட்ட பொதுநல வழக்குகள், கிரிமினல் மேல்முறையீட்டு மனுக்கள், கிரிமினல் வழக்குகள் ஆகியவற்றை இவர் விசாரிப்பார் என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இவை தவிர, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் மேல்முறையீட்டு வழக்குகளையும் இவர் விசாரிப்பார்.

1958-ம் ஆண்டு பிறந்த விஜயா, 1982-ம் ஆண்டு மகாராஷ்டிரம் மற்றும் கோவா மாநிலங்களின் பார் கவுன்சிலில் பதிவு செய்த பின், மும்பை சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றம் போன்றவற்றில் வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்கிறார். கடந்த 2001-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். இவை தவிர 1987 முதல் 1993 வரை கே.சி. சட்டக்கல்லூரியில் பகுதிநேர விரிவுரை யாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக (ஆக்டிங்) செயல்பட்டு வந்திருக்கிறார் விஜயா.

வாழ்த்துகளும் வணக்கமும்... விஜயாம்மா!

96 வயதில் தேர்வெழுதி வென்ற பாட்டி!

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாதை அடுத்த சேப்பாது கிராமத்தைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி கார்த்தியாயினி அம்மாள், கேரள மாநில அரசு சமீபத்தில் நடத்திய தேர்வில் வெற்றிபெற்றிருக்கிறார். கேரள அரசு 16 முதல் 75 வயது வரையுள்ள எழுத்தறிவற்றவர்களுக்குக் கல்வி தர `அக் ஷரலக் ஷம்’ என்னும் திட்டத்தைச் செயல் படுத்துகிறது. இதன்படி சமீபத்தில் 40,363 பேர் கேரள மாநில எழுத்தறிவு இயக்கம் நடத்திய தேர்வை எதிர்கொண்டனர். கார்த்தியாயினி அம்மாளும், சேப்பாது காணிச்சனெல்லூர் அரசுப்பள்ளியில் தேர்வெழுதினார். வாசிப்புத் திறன், எழுதும் முறை, கணக்கு என மூன்று பிரிவுகளில் 100 மதிப்பெண்ணுக்கு நடைபெற்ற தேர்வில் 30 மதிப்பெண் எடுத்தால் தேர்வாகலாம். இதில் வாசிப்புத்திறன் பிரிவில் 100 மதிப்பெண் எடுத்துக் கலக்கிவிட்டார் கார்த்தியாயினி அம்மாள்.

ட்விட்டரில் இந்தச் செய்தியைப் பதிவு செய்த ஒருவர், மஹிந்த்ரா நிறுவனத்தின் தலைவரான தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவை அதில் `டேக்’ செய்தார். கார்த்தியாயினி அம்மாவைப் பற்றிக் கேள்விப்பட்டதும், “இது உண்மை என்றால், இவர்தான் இனி என் ரோல் மாடல். இவரைப் போல புதியதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால், என் மூளைக்கு மரணமே கிடையாது” என்று கருத்து வெளியிட்டார் ஆனந்த். பாட்டிக்கோ ஒரே ஒரு கவலைதான். அவரின் ஆசிரியையான சுவாதி, `படித்த அத்தனை கேள்விகளுக்கும் வரவில்லை. நான் நிறையப் படித்திருக்கத் தேவை இல்லையோ?’ என கார்த்தியாயினி அம்மா கவலைப்பட்டதாகத் தெரிவித்தார்!

சூப்பர் டூப்பர் டாப்பர் பாட்டி!

சீரிய முயற்சி... பெரிய சாதனை!

தமிழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகச் சென்னையைச் சேர்ந்த ஷீலா ஸ்டீஃபனை நியமித்து ஆணைப் பிறப்பித்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இதன்மூலம், இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் ஆகியிருக்கிறார் ஷீலா. தேசிய மற்றும் சர்வதேச ஆய்வுப் பதிப்புகளில் ஷீலாவின் 70 ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மனவளம் குன்றிய சிறுவர்களின் உடல், உணர்ச்சி, அறிவாற்றல், கண்டுணர்திறன் ஆகியவற்றின் மீது `மூவ்மென்ட் தெரபி’ எனப்படும் அசைவு சிகிச்சையின் பலன், சர்வதேச அளவில் தரமான உடற்கல்வி பயிற்சி பற்றிய ஆய்வுகள் என பல ஆய்வுகளில் ஈடுபட்டு அறிக்கைகள் அளித்திருக்கிறார் ஷீலா.

லண்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் நகரின் ஸ்ப்ரிங்ஃபீல்டு உடற்கல்வி கல்லூரி, லண்டன் வார்சஸ்டர் பல்கலைக்கழகம் உள்பட உலகெங்கும் உள்ள 14 உயர்கல்வி நிலையங்களில் கல்வித்தொடர்பு கொண்டுள்ளார் ஷீலா. இதுவரை 110 எம்.ஃபில் மற்றும் 10 பிஹெச்.டி. மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார். இன்னும் மூன்றாண்டுகளுக்கு இவர் இப்பணியில் தொடர்வார் என்றும் ஆளுநர் இல்ல செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

புதிய துணைவேந்தருக்கு வாழ்த்துகள்!

1,000 ஆண்டுகளுக்கு முன்பே சுனாமி!

பெங்களூரு இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தின் பேராசிரியரும், ‘சீஸ்மாலஜிஸ்ட்’ எனப்படும் நிலநடுக்க ஆய்வாளருமான குசலா ராஜேந்திரன் இந்த ஆண்டு புதிதாக அரசு ஏற்படுத்தியிருக்கும் `தேசிய பெண் விஞ்ஞானி விருது' பெற்று சாதனை புரிந்திருக்கிறார். காதல் கணவர் ராஜேந்திரனுடன் நில அதிர்வுகளை ஆய்வு செய்து பல ஆய்வறிக்கைகளை அளித்துள்ள குசலா, “பெண்கள் முழுமூச்சுடன் எவ்வளவுதான் பணிபுரிந்தாலும், அதற்கான சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. தங்கள் வீடு, அலுவலகம், சமுதாயம் என்று மும்முனையிலும் போரிட்டுக்கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

“என் கணவரும் இதே பணியில் இருப்பதால், மிகவும் வசதியாக உணர்கிறேன். ஆனால், பிற பெண்களால் அத்தனை எளிதில் களப்பணி செய்ய முடிவதில்லை. இந்தியாவிலும், பல பின்தங்கிய நாடுகளிலும், பெண்கள் பயணித்துக் களப்பணி செய்வதென்பது அத்தனை எளிதாக இல்லை. இந்தியாவில் உடன்பணிபுரியும் ஆண்களுடன் நீண்ட பயணங்கள் மேற்கொள்ள பெண்களால் முடிவதில்லை” என்கிறார். 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியபின் காவிரிப்பட்டினம் வந்த இந்த ஜோடி, கடலில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் மண்ணில் தோண்டி, கடல் மணலை வெளிக்கொணர்ந்தது. `மணிமேகலை’ காப்பியத்தில் ஆழிப்பேரலை குறித்த குறிப்புகள் இருந்ததையடுத்து, அதை ஊர்ஜிதம் செய்ய, இன்னும் அதிகம் தோண்டியதில், 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கடல் மணல் மற்றும் களிமண் பானைத் துண்டுகளை மண்ணுக்கு அடியில் இருந்து எடுத்தனர். ஆக, 1,000 ஆண்டுகளுக்கு முன் காவிரிப்பட்டினத்தில் சுனாமி ஏற்பட்டதை நிரூபித்துள்ளனர் இருவரும்!

குட்லக் குசலா!

- நிவேதிதா லூயிஸ்