Published:Updated:

அமைச்சர் வழங்கிய விலையில்லா மாடுகள் சேல்! - 17 பெண்கள் மீது வழக்கு!

அமைச்சர் வழங்கிய விலையில்லா மாடுகள் சேல்!  - 17 பெண்கள் மீது வழக்கு!
அமைச்சர் வழங்கிய விலையில்லா மாடுகள் சேல்! - 17 பெண்கள் மீது வழக்கு!

விருதுநகர்: விருதுநகர் அருகே, அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கிய அரசின் இலவச மாடுகளை விற்ற 17 பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் அருகேயுள்ள கோவில்வீரார்பட்டி, மீனாட்சிபுரம், அர்ஜூனாபுரம் கிராமங்களில் கடந்த சில மாதம் முன்பு, வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள அரசின் இலவச கறவை பசுமாடுகள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

அந்தப் பசுமாடுகளை பயனாளிகள் சரியாக பராமரிக்கிறார்களா என்று விருதுநகர் மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் சமீபத்தில் அந்த கிராமங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த கிராமங்களை சேர்ந்த 17 பெண்கள் அரசு வழங்கிய இலவச மாடுகளை வெளி சந்தையில் விற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கால்நடைத்துறை உதவி இயக்குனர் மோகன் வச்சக்காரப்பட்டி போலீசில் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 இலவச பசுமாடுகளை பயனாளிகள் வெளிச்சந்தையில் விற்றிருப்பதாக  புகார் செய்தார்.

##~~##
இதையடுத்து, மூன்று கிராமங்களை சேர்ந்த மாரியம்மாள், பழனியம்மாள், சின்னக்காள், பஞ்சவர்ணம், முத்துலட்சுமி உள்பட 17 பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எம்.கார்த்தி