Published:Updated:

``என்னோட சர்வீஸ்ல விபத்தே ஏற்பட்டதில்லை’’ - வேன் ஓட்டும் பிரியா அக்கா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``என்னோட சர்வீஸ்ல விபத்தே ஏற்பட்டதில்லை’’ - வேன் ஓட்டும் பிரியா அக்கா
``என்னோட சர்வீஸ்ல விபத்தே ஏற்பட்டதில்லை’’ - வேன் ஓட்டும் பிரியா அக்கா

``என்னோட சர்வீஸ்ல விபத்தே ஏற்பட்டதில்லை’’ - வேன் ஓட்டும் பிரியா அக்கா

மக்கு ஒரு விஷயம் தெரியுமா... அது சரி வருமா என்பதையெல்லாம் நின்று நிதானிக்கக் காலம் விடுவதில்லை. கையில் முடிவை மட்டும் விட்டுவிட்டுப் பறந்து சென்றுவிடுகிறது. அப்படித்தான் பிரியாவும். வேன் ஓட்டுறதா... நாமளா... என்று தயங்கியவரை விடவில்லை வறுமை. குடும்பத்தின் வறுமையைப் போக்க வேன் ஓட்டுநராகத் தன் பயணத்தைத் தொடங்கியவர், இன்று லாரி, டிராக்டர் என்று கனரக வாகனங்களை இயக்குவதில் கில்லாடியாகி இருக்கிறார். 

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை அடுத்த எம்.வல்லாளபட்டியைச் சேர்ந்தவர் ரதிப்பிரியா. 10 ஆண்டுகளுக்கு மேலாக தன் டிரைவர் பயணத்தைத் தொடர்ந்துவரும் ரதிப்பிரியாவிடம் பேசினேன். ``நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போச்சு. அதனால, தொடர்ந்து ஸ்கூலுக்குப் போக முடியாமப் போச்சு. ஒருவழியா உடல்நிலை தேறி கஷ்டப்பட்டு பத்தாவது படிச்சு முடிச்சேன். இந்த இடைப்பட்ட காலகட்டங்களில் கார் ஓட்டணும்னு ஆசை வந்தது. அப்பா எனக்குக் கார் ஓட்டக் கத்துக்கொடுத்தாங்க. 18 வயசுக்கு அப்புறம் முறையா கார் ஓட்டக் கத்துக்கிட்டேன்.

ஒருகட்டத்துல குடும்பத்துல வறுமை. வேலைக்குப் போக முடிவெடுத்தேன். கூல்டிரிங்ஸ் கம்பெனில லோடு ஏத்திட்டு போய் அவங்க சொல்ற ஸ்பாட்ல இறக்குற வேலை. வேன் டிரைவரா என்னை அவங்க ஏத்துக்கிட்டதே பெரிய விஷயம்தான். நல்லா ஓட்டுவேன், சொன்ன நேரத்துல லோடை இறக்கிருவேனு உறுதிமொழி கொடுத்த பிறகே, என்னை எடுத்துக்கிட்டாங்க. அங்க வேலை செஞ்சுக்கிட்டே ஹெவி லைசென்ஸுக்கு அப்ளை பண்ணினேன். வெற்றிகரமா லைசென்ஸ் வாங்கினேன். அதுக்கப்புறம் பஞ்சு மில் ஒன்றுக்காக வேன் ஓட்டுநர் வேலை பார்த்தேன். அதுகப்புறம்தான் குழந்தைங்களை ஸ்கூல்ல கொண்டுபோய் விட்டுட்டு, கூட்டிட்டு வர்ற ஸ்கூல் வேன் டிரைவர் வேலை கிடைச்சது. குழந்தைங்க இருக்கிறதுனால ரொம்ப பத்திரமா, கவனமா ஓட்டிட்டுப்போவேன். ஸ்பீட் பிரேக்லகூட கவனமா இருப்பேன். அதனால குழந்தைகளுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். பிரியா அக்கா, பிரியா அக்கானு செல்லமா கூப்பிடுவாங்க'' என்பவருக்குச் சந்தோஷம் அள்ளுகிறது.

``ஸ்கூல் லீவ் நாள்கள்ல ஆக்டிங் டிரைவரா வெளியிடங்களுக்குப் போவேன். நார்மல் கியர் வண்டில ஆரம்பிச்சு புல்லட் வரைக்கும் அத்தனையும் எனக்கு அத்துபடி. மேலூர் ஆர்.டி.ஓ ஆபீஸ்க்கு யார் லைசென்ஸ் போட வந்தாலும் என்னைத்தான் பிராக்டிஸ் கொடுக்கச் சொல்வாங்க. நான்தான் அவங்களுக்கு எப்படி எட்டுப் போடணும்னு சொல்லிக்கொடுப்பேன். எனக்கு அது ரொம்ப பெருமையா இருக்கும்.''  

``பொதுவா நான் ஓட்டுற வேனை மத்தவங்க அவ்வளவு எளிதில் ஓட்ட முடியாது. அதே மாதிரி திடீர்னு இன்ஜின்ல கோளாறா, டயர் பஞ்சரா, பிரேக் செக் பண்ணனுமா, ஆயில் அடிக்கிறதுனு அத்தனையையும் தனி ஆளா செய்து முடிப்பேன். இப்படி எல்லா விஷயத்தையும் நானே கத்துக்கிடுறதுனால எங்க தெருவுல என்ன பிரச்னைனாலும் என்னைத்தான் கூப்பிடுவாங்க. இத்தனை வருஷ சர்வீஸ்ல ஒரு விபத்தைக்கூட ஏற்படுத்தினதில்லை. செய்யுற வேலையை அவ்வளவு சிரத்தையோட பண்றேன். காலையில 5 மணிக்கெல்லாம் எழுந்து வீட்டு வேலையை முடிச்சுட்டு 6 மணிக்கு வேனை கிளப்ப ஆரம்பிச்சா வீட்டுக்கு வர சாயந்திரம் ஆகிடும். பொண்ணுங்க இந்த வேலை மட்டும்தான் செய்வாங்க... கடுமையான வேலைகள் செய்யமாட்டாங்கங்கிற எண்ணத்தை உடைக்கணும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு