“எனக்கு 33 வயசுதாங்க ஆகுது. இந்த வயசிலே விதவை ஆகிட்டேன். ரெண்டு பெண் குழந்தைங்கள வெச்சுக்கிட்டு கஷ்டப் படுறேன். வீட்டு வாடகைகூட கொடுக்க முடியல. என் கணவர் கட்டிய வீட்டுக்குள் என்னையும் என் குழந்தைகளையும், என் மாமனார் அனுமதிக்க மாட்டேங்குறார். தி.முக நிர்வாகி ஒருத்தர் என்னை மிரட்டுறார்” என்று நம் அலுவலகம் வந்து கண்ணீர் விட்டுக் கதறினார் விஜயலட்சுமி.

“நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்தான் என்னோட ஊர். என் கணவர் பெயர் சிவராமன். 2006-ல் எங்களுக்குத் திருமணம் நடந்தது. என் கணவரின் குடும்பம் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பம். என் கணவர் தலையெடுத்து நூல் வியாபாரம் செய்து, லட்ச லட்சமாகச் சம்பாதித்தார். அதில், 2004-ல் குமாரபாளையம் ஐயந்தோட்டம் பகுதியில் பெற்றோர் பெயரில் என் கணவர் நிலம் வாங்கினார். அந்த நிலத்தில் வீடுகட்டுவதற்கு, வயதானவரின் பெயரில் வங்கிக் கடன் கிடைக்காது என்பதால், தான செட்டில்மென்டாக என் கணவரின் பெயருக்கு நிலத்தை மாற்றினர். வங்கி லோன், என் கணவர் கையில் வைத்திருந்த பணம், என் நகைகள் என எல்லாவற்றையும் வைத்துச் சுமார் 70 லட்சம் ரூபாய் செலவில் என் கணவர் வீடு கட்டினார். நானும் என் கணவரும், அந்த வீட்டின் மாடி போர்ஷனில் ஐந்து வருடங்கள் வசித்தோம்.

என் கணவருக்கும் அவரின் பெற்றோருக்கும் சண்டை சச்சரவு இருந்துவந்தது. என் மாமனார் ஜெகநாதன் தி.மு.க-வை சேர்ந்தவர். அதனால், தி.மு.க மாவட்டத் துணைச் செயலாளர் சேகர் என்பவரைக் கூட்டிவந்து கட்டப்பஞ்சாயத்து செய்தனர். பொது பாக விடுதலைப் பத்திரத்தில் என் கணவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு, வீட்டைவிட்டு எங்களை வெளியேற்றினர். நாங்கள் வாடகை வீட்டுக்குப் போனோம். வீடு கட்ட வாங்கிய வங்கிக்கடனுக்கு வட்டி சேர்ந்துவிட்டது. என் கணவரிடம் இருந்த இரு கார்களையும், நூல் மெஷினையும் விற்றுக் கடனை அடைத்தோம். வீட்டு வாடகைகூடக் கட்ட முடியாத அளவுக்குப் பெரும் கஷ்டம் ஏற்பட்டது. எனவே, தான் கட்டிய வீட்டுக்குச் செல்ல என் கணவர் முயற்சி செய்தார். ஆனால், பொது பாக விடுதலைப் பத்திரத்தைக் காட்டி, வீட்டுப் பக்கம் வரக்கூடாது என்று என் மாமனார் போலீஸில் புகார் கொடுத்துவிட்டார். அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு, மாரடைப்பால் என் கணவர் இறந்துவிட்டார்.

இப்போது இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு, வீட்டு வாடகைகூடக் கட்ட முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். என் கணவர் கட்டிய வீட்டில் எங்களுக்கான உரிமையைத் தர மறுக்கிறார்கள். அந்த வீட்டின் மாடி போர்ஷனில், தி.மு.க மாவட்டத் துணைச் செயலாளர் சேகர், கட்சிக் கொடியைக் கட்டி அங்கு அலுவலகம் வைத்துக்கொண்டு, என்னை மிரட்டுகிறார். நாமக்கல் எஸ்.பி., ஆர்.டி.ஓ ஆகியோர் அந்த வீட்டில் நான் குடியிருக்க அனுமதிக்குமாறு சொல்லியும், என்னை அவர்கள் வீட்டுக்குள் விடவில்லை. ‘ஒரு தொகையைக் கொடுக்கிறோம்... வாங்கிட்டு ஓடிவிடு’ என்று சேகர் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். தி.மு.க தலைவர் ஸ்டாலினை என் கூடப் பிறந்த அண்ணனாக அவரை நான் மதிக்கிறேன். அவர்தான், எனக்கும் என் குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும்’’ என்றார் கண்ணீருடன்.

ஜெகநாதனிடம் பேசினோம். ‘‘நான், ரியல் எஸ்டேட் தொழிலில் சம்பாதித்த பணத்தில் இந்த வீட்டைக் கட்டினேன். அவன் (மகன்) என்னையும் என் மனைவியையும் மதிக்காமல் எங்களிடம் சண்டை போட்டான். அவனுக்குத் திருமணம் செய்துவைத்தோம். அந்தப் பெண்ணும் எங்களை மதிக்கவில்லை. வீட்டின் மீது 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளோம். வீட்டை விற்றுக் கடனைக் கட்டிவிட்டு, மீதிப் பணத்தை மூன்று பாகங்களாகப் பிரித்துக்கொள்ளலாம் என்று கேட்டால், அந்தப் பெண் ஒப்புக்கொள்ள வில்லை. தி.மு.க மாவட்டத் துணைச் செயலாளர் சேகர் என் குடும்ப நண்பர். அவருக்கும் இந்தப் பிரச்னைக்கும் சம்பந்தம் இல்லை’’ என்றார்.

நாமக்கல் எஸ்.பி அருள்அரசுவிடம் பேசியபோது, ‘‘தன் பெயரில் இருந்த நிலத்தில் வீடு கட்ட, ஜெகநாதன் தன் மகன் சிவராமன் பெயரில் ‘தான செட்டில்மென்ட்’ செய்துள்ளார். அங்கு சிவராமன் வீடு கட்டியுள்ளார். பிறகு, தான செட்டில்மென்ட்டை கேன்சல் செய்துவிட்டு, முதலில் தன் மனைவி பெயரிலும், பிறகு தன் மகள் பெயரிலும் ஜெகநாதன் அந்த நிலத்தை எழுதிவைத்துள்ளார். அந்த வீட்டில் குடியேற விஜயலட்சுமி முயற்சி செய்கிறார். ‘தான செட்டில்மென்ட்டை ரத்துசெய்தது செல்லாது; அந்த வீட்டில் குடியிருக்க விஜயலட்சுமியை அனுமதிக்க வேண்டும் என்று ஆர்.டி.ஓ கூறியிருக்கிறார். தி.மு.க-வை சேர்ந்த சேகர், அங்கு கட்சி அலுவலகம் நடத்துவது தவறானது’’ என்றார்.

சேகரிடம் கேட்டபோது, ‘‘ஜெகநாதன், நீண்ட காலமாக தி.மு.க-வில் இருப்பவர். அவரின் மகன், பொது பாக விடுதலைப் பத்திரம் கொடுத்து விட்டார். மனிதநேயத்தின் அடிப்படையில் பணம் தருவதாக ஜெகநாதன் சொல்கிறார். அந்த வீட்டில் 11 மாதங்கள் கட்சி அலுவலகம் நடத்திக் கொள்ள ஒப்பந்தம் போட்டுள்ளோம்’’ என்றார்.

கட்சி அலுவலகம் நடத்த இதைத்தவிர வேறு இடம் இவர்களுக்குக் கிடைக்காதா?

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: தனசேகர்