Published:Updated:

போட்டித் தேர்வுக்கு அனுமதி தாங்க: தொடர்ந்து போராடும் திருநங்கை! (படங்கள்)

போட்டித் தேர்வுக்கு அனுமதி தாங்க: தொடர்ந்து போராடும் திருநங்கை! (படங்கள்)
போட்டித் தேர்வுக்கு அனுமதி தாங்க: தொடர்ந்து போராடும் திருநங்கை! (படங்கள்)

மதுரை: மதுரையில் போட்டித் தேர்வுக்கு அனுமதி கேட்டு திருநங்கை ஒருவர் தொடர்ந்து போராடி வருகிறார்.

போட்டித் தேர்வுக்கு அனுமதி தாங்க: தொடர்ந்து போராடும் திருநங்கை! (படங்கள்)

மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்தவர் திருநங்கை சொப்னா. பி.ஏ., டி.சி.ஏ. படித்துள்ள இவர், சமீபத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்தார். அதில், பாலினம் என்ற இடத்தில் ஆண், பெண் என்று மட்டுமே இருந்ததால், இவரால் அதனை பூர்த்தி செய்ய இயலவில்லை. அதைக் காரணம் காட்டி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது தேர்வாணையம்.

போட்டித் தேர்வுக்கு அனுமதி தாங்க: தொடர்ந்து போராடும் திருநங்கை! (படங்கள்)

இதுகுறித்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நான்கைந்து முறை மனு கொடுத்துவிட்டார் சொப்னா. ஆனால் 'நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை' என்று கை விரித்தனர் அதிகாரிகள். இதனால் நேற்று திடீரென மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் சொப்னா. கண்ணீருடன் அவர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை சமாதானம் செய்து கலெக்டரை சந்திக்க ஏற்பாடு செய்தனர். அப்போது கலெக்டர், "இது அரசின் கொள்கை முடிவு என்பதால், மதுரை கலெக்டர் மட்டும் நினைத்தால் போதாது. அரசின் கொள்கை மாற வேண்டும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது" என்றார்.

இந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் திடீரென மதுரை ஆண்டாள்புரம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார் சொப்னா. மற்ற திருநங்கைகள் கேட்டுக் கொண்டும் அவர் போராட்டத்தைக் கைவிடவில்லை. "நாம் போராடினால் தான் அரசின் கொள்கை மாறும். இல்லை என்றால் என்ன படிப்பு படித்தாலும் நாம் அரசு வேலைக்குச் செல்ல முடியாது. கடைகடையாக கையேந்தியும், தப்பான தொழில் செய்தும் தான் பிழைக்க முடியும்" என்று சத்தம் போட்டார். உடனே போலீசார் அவரைப் பிடித்து டெம்போ வேனில் ஏற்றி காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். கண்ணீருடன் சென்ற அவர், தன்னுடைய பாடப்புத்தகங்களையும் சுமந்தபடி சென்றார்.

போட்டித் தேர்வுக்கு அனுமதி தாங்க: தொடர்ந்து போராடும் திருநங்கை! (படங்கள்)

உடல் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படுவதைப் போல இவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்குவது தான் நியாயம். சலுகை கொடுக்காவிட்டால் கூட பரவாயில்லை. அவர்களின் முன்னேற்றத்துக்கு தடை போடாத வகையிலாவது அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும்.

கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து