Published:Updated:

`மாமியாருக்காக உயிரைவிட்ட மருமகள்!` - சென்னையில் நடந்த சோகம்

`மாமியாருக்காக உயிரைவிட்ட மருமகள்!` - சென்னையில் நடந்த சோகம்
`மாமியாருக்காக உயிரைவிட்ட மருமகள்!` - சென்னையில் நடந்த சோகம்

சென்னை மடிப்பாக்கம், பாலையா கார்டன், பரத் தெருவை சேர்ந்தவர் சாரதி (30) இவருக்கு அநாதைகள் காப்பகத்தில் வளர்ந்த பிரசாந்தி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது.

 இந்தநிலையில் சாரதியின் தாயார் திடீரென மரணமடைந்ததால் கடந்த சில நாள்களாக மன உளைச்சலுடன் இருந்து வந்துள்ளார். சாரதியின் தம்பி, தங்கைகள், இருவரும் கோவிலம்பாக்கத்தில் வாடகை வீடு ஒன்றில் தனியே வசித்து வருவதால் சாரதிக்கு ஆறுதல் சொல்ல யாருமில்லை. இந்தநிலையில் சாரதியும் பிரசாந்தியும் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து மடிப்பாக்கம் போலீஸூக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மடிப்பாக்கம் போலீஸார் சடலங்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவர்கள் எழுதிய கடிதத்தில் எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும், எங்களை அடக்கம் செய்ய தேவையான பணம் எங்களுடைய ஏ.டி.எம் அட்டை மூலம் எடுத்துக்கொள்ளவும் எனவும் எழுதியாதாகப் போலீஸார் தெரிவித்தனர். 

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சாரதி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அவரின் அம்மா லலிதா கடந்த நவம்பர் மாதம் இறந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சாரதி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இந்தத் தகவலை மனைவி பிரசாந்தியிடம் சாரதி கூறியுள்ளார். உடனே பிரசாந்தி ``நீங்கள் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம் நானும் மாமியாருக்காக சாகத் தயார்'’ என்று கூறியுள்ளார். அதன் பிறகே இருவரும் தற்கொலை செய்துள்ளனர். பிரசாந்தி 4 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்" என்றனர். திருமணமாகி 5 மாதங்களில் புதுமண தம்பதி தற்கொலை செய்த சம்பவம் மடிப்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.