Published:Updated:

14 நாள்கள்

14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...பெண்கள் உலகம்

14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...பெண்கள் உலகம்

Published:Updated:
14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் இயக்குநர்!

சாம் மாநிலத்தின் கலத்ரியா கிராமத்தில் இருந்து புறப்பட்டு சினிமா காதலால் மும்பை வந்தவர் ரீமா தாஸ். கையடக்க கேமரா, லோ பட்ஜெட் என்ற தடைகளை மீறி அவர் எடுத்த அசாமிய மொழிப் படமான `வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’, இந்தியா சார்பாக ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது. அசாம் மாநிலத்தின் சிறு கிராமத்தில் இருக்கும் 10 வயது சிறுமி ஒருத்திக்கு ராக் பேண்ட் ஒன்று தொடங்கும் ஆசை இருக்கிறது. அந்த ஆசையால் அவள் ஒரு எலெக்ட்ரிக் கிட்டாரைத் தேடியலைந்து தன் கனவை நனவாக்கத் துடிக்கிறாள். கிராமம் அவள் கனவை என்ன செய்கிறது என்பதுதான் கதை.

14 நாள்கள்

படத்தில் முக்கிய சிறுமி வேடத்தில் நடித்திருக்கும் பனிதா தாஸ், ரீமாவின் உறவினர். சிறந்த நடிகைக்கான தேசிய விருதை இந்தப் படத்துக்கு வென்றிருக்கிறார் பனிதா. பூப்படையும் சிறுமிகளைச் சட்டென ஒடுக்கும் கிராம வாழ்வியல் குறித்து இந்தப் படம் அலசுகிறது. இந்தியாவுக்கு ரீமா ஆஸ்கர் பெற்றுத் தருவாரா என்பது வரும் 2019 பிப்ரவரியில் தெரிந்துவிடும்.

இந்திய ராக்ஸ்டார் - ரீமா தாஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

14 நாள்கள்

``32 ஆண்டுகளுக்குப் பிறகே மனம் திறக்கிறேன்!”

அமெ
ரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஹாலிவுட் நடிகையான பத்மலட்சுமி எழுத்தாளர் மற்றும் சமையல்கலை நிபுணரும்கூட. அண்மையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்ட பத்மலட்சுமி, 16 வயதில் தன்னுடன் படித்த தோழன் ஒருவனால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அவன் மிரட்டிய காரணத்தாலும் பயத்தாலும் அதை யாரிடமும் தெரிவிக்கவில்லை என்றும் எழுதியுள்ளார்.

14 நாள்கள்``ஏழு வயதில் உறவினர் ஒருவர் என்னிடம் அத்துமீறி தொல்லை கொடுத்தார். பெற்றோரிடம் அதை உடனடியாகத் தெரிவித்துவிட்டேன். ஆனால், பாதுகாப்பு கருதி, இந்தியாவில் இருந்த என் பாட்டியிடம் அனுப்பப்பட்டேன். உண்மையைச் சொன்னதற்காக ஓர் ஆண்டு அம்மாவைப் பிரிந்து வாழ நேர்ந்தது. மன உறுதியுடன் உண்மையைப் பேசினால் தூக்கி எறியப்படுவோம் என்று தவறான கற்பிதம் மனதில் தோன்றிவிட்டது. ஆனால், இதைச் சொல்லாமலே போனால், பெண்ணின் உடல் மீதான வன்முறையைத் தொடர நாமும்தானே வழிவகுக்கிறோம்? 18 வயதுக்குள்ளான ஆண்களில் ஆறில் ஒருவரும், பெண்களில் நான்கில் ஒருவரும் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்கள். இந்த வக்கிரங்களை எதிர்த்து நாம் அனைவருமே உடைத்துப் பேச வேண்டும். நம் பெண் குழந்தைகளுக்குப் பயத்தைப் போக்க வேண்டும்... ஆண் பிள்ளைகளுக்கு பெண்களின் உடல்கள் அவர்கள் இச்சையைத் தீர்த்துக்கொள்ள மட்டுமல்ல என்பதும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு தண்டனை உண்டு என்பதும் புரிய வேண்டும்” என்று விரிவாக எழுதியிருக்கிறார் பத்மலட்சுமி.

உடைத்துப் பேசுவோம்... உண்மையைப் பேசுவோம்!

14 நாள்கள்

மரணத்துக்குப் பின் திசு, எலும்புகள் தானம்!

மு
ம்பை அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 20 அன்று இறந்தார் கார்கர் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி ஜவஹர் என்ற 66 வயதுப் பெண்மணி. கண் தானம் செய்ய ஏற்கெனவே அவர் விரும்பியதால், குடும்பத்தினர் மருத்துவர்களுக்குத் தகவல் தந்தனர். மோகன் ஃபவுண்டேஷன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் கலைச்செல்வியின் மகன் செல்வகுமாரைத் தொடர்புகொண்டு கண் தானத்தோடு, பிற உறுப்புகள், எலும்புகள் மற்றும் திசு தானம் செய்வது குறித்து விளக்கினார்கள். “என் அம்மா எப்போதும் பிறருக்கு உதவுவதையே பெரிதும் விரும்புபவர். அவர் இருந்திருந்தால், யாருக்காவது உதவுமே என்று நிச்சயம் எல்லா தானத்துக்கும் ஒப்புக்கொண்டிருப்பார்” என்று கூறுகிறார் செல்வகுமார்.

கடந்த 2016-ம் ஆண்டு இடியோபதிக் பல்மனரி ஃபைப்ரோசிஸ் என்ற கடுமையான நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டார் கலைச்செல்வி. கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்த கலைச்செல்விக்குச் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பலனின்றி இறந்தார்.

எலும்புகளை எடுக்கும்போது எந்த விதத்திலும் உடல் வடிவம் மாறாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வதாக மருத்துவர் குழு உறுதியளித்தது. மோகன் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த ஜெயா ஜெயராம் இது குறித்து அளித்த பேட்டியில், கண் தானம் செய்ய முன்வருபவர்கள்கூட, உறுப்பு மற்றும் திசு, எலும்புகள் தானத்துக்கு அத்தனை எளிதாக ஒப்புக்கொள்வதில்லை. இது பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

உறுப்பு தானம் பிறரது உயிர்காக்கும்!

14 நாள்கள்

மனம் நெகிழவைக்கும் மகளிர் அமைப்பு!

கே
ரள மாநிலம் சமீபத்தில் சந்தித்த இயற்கைப் பேரிடர் பெரும் உயிர்ச் சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது. எர்ணாகுளத்தைச் சேர்ந்த குடும்பஸ்ரீ அமைப்பைச் சேர்ந்த குமாரி வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோது தொற்று நோய் தாக்கி இறந்திருக்கிறார். ஆனாலும், நலிந்த நிலையில் இருக்கும் பெண்கள் பலரும் நிவாரணப் பணிகளில் தீவிரம் காட்டினர். வெள்ளம் வடியத் தொடங்கியதும், ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்த இந்த அமைப்பின் பெண்கள் பகுதிவாரியாக தங்கள் உதவிகளை ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட 7,000 பெண்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த அமைப்பு சுத்தம்செய்த பொது இடங்களின் எண்ணிக்கை மட்டுமே 11,300. நான்கு லட்சம் பெண்களின் ஒருங்கிணைந்த உதவி குடும்பஸ்ரீ மூலம் இந்தப் பேரிடர் காலகட்டத்தில் கேரளாவுக்குக் கிடைத்தது. 38,000 குடும்பஸ்ரீ பெண்கள் வெள்ளத்தின்போது தங்கள் வீடுகளில் பொதுமக்கள் தங்க அனுமதித்தனர். முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு 7.4 கோடி ரூபாய் பணமும் குடும்பஸ்ரீ அமைப்பு வழங்கியது. 1998-ம் ஆண்டு சி.பி.ஐ (எம்) அரசால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பிற மாநிலங்களில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போல பொருளாதார முன்னேற்
றத்தை மட்டுமே கருத்தில்கொள்ளாமல், இன்னும் பரந்த பார்வையில் மகளிர் சுயாட்சி மற்றும் உரிமைக்கான களமாகச் செயல்படுவது பெரும் மகிழ்ச்சியைத் தருவதாக எழுதியிருக்கிறார் பிருந்தா காரத்.

ஆச்சர்ய குடும்பஸ்ரீகள் இவர்கள்!

14 நாள்கள்

சுகாதாரம் காக்கும் கண்டுபிடிப்பு!

“71%
பொதுக் கழிப்பறைகள் சரியாகச் சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால் சிறுநீர் தொற்று மற்றும் பிற நோய்களால் அவதியுறுகிறார்கள். இதற்கு பயந்தே பலர் வெளியிடங்களில் சிறுநீர் கழிக்காமல் மணிக்கணக்காக அடக்கிக்கொள்ளும் அவலமும் நேர்கிறது. இதைத் தடுக்கவே இந்தச் சிறிய கையடக்க சான்ஃபே கப்” என்று கூறுகிறார்கள் இதை வடிவமைத்த டெல்லி ஐ.ஐ.டி மாணவர்களான ஹாரி ஷரவத் மற்றும் அர்சித் அகர்வால். ஆறு மாதங்களுக்கு முன் தங்கள் வகுப்பு தோழிகள் பொதுக் கழிவறைகளால் படும் அவஸ்தைகளைப் பற்றித் தெரிந்துகொண்ட மாணவர்கள், மக்கும் காகிதத்தாலான, ஒருமுறை பயன்படுத்தக் கூடிய கையடக்க சிறுநீர் பாய்ச்சும் குழாய் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

விரைவில் இ-காமர்ஸ் தளங்களில் விற்பனைக்கு வருகிறது சான்ஃபே. ஒன்றின் விலை பத்து ரூபாய்.  “பொதுக் கழிவறைகளில் மட்டுமல்லாமல், முட்டுவலி மற்றும் முதுகுவலியால் அவதிப்படும், உட்கார இயலாத பெண்களும் இதை உபயோகிக்கலாம்” என்றும் கூறுகிறார்கள்.

அப்பாடா… நிம்மதி!

நிவேதிதா லூயிஸ் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism