Published:Updated:

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்

Published:Updated:
14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

தென்கொரிய அரசியான இந்திய இளவரசி!

தென்கொரிய அதிபரின் மனைவியான கிம்-ஜங்-சூக் சமீபத்தில் அரசுமுறைப் பயணமாக அயோத்தி நகருக்கு வந்தார். `இந்துக் கடவுளான ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் அயோத்தி, சூரி ரத்னா எனப்படும் கொரிய அரசி பிறந்த மண்ணும்கூட' என்று திடமாக நம்புகின்றனர் கொரிய மக்கள். ஹியோ-ஹுவாங்-ஓக் எனப்படும் அயோத்தி நாட்டைச் சேர்ந்த இளவரசி, கி.பி.48-ம் ஆண்டு கொரியா சென்று அங்கு கிம் சுரோ என்ற மன்னனைக் கரம்பிடித்து அரசியாகி, `கரக்' எனப்படும் அரசகுல வம்சத்தைத் தோற்றுவித்ததாக நம்புகின்றனர் கொரிய மக்கள். கொரிய மன்னன் கிம் சுரோவுக்குத் திருமணம் செய்துகொடுக்கச் சொல்லி தன் கனவில் கடவுள் தோன்றி சொன்னதால், கொரிய நாட்டுக்குக் கப்பலில் 16 வயதேயான தன் மகளை அயோத்தியின் மன்னன் அனுப்பிவைத்ததாகச் சொல்கின்றன சீனக் கதைகள். `சம்யுக் யூதா' எனப்படும் காப்பியம், அரசி ஹுவாங்-ஓக் `அயுத்தி' நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறுகிறது. இந்தத் தம்பதிக்கு 10 மகன்கள் பிறந்ததாகவும், 150 ஆண்டுகள் தம்பதி ஆட்சி புரிந்ததாகவும் சொல்கிறது சம்யுக் யூதா!

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பி.பி.சி-யின் டேவிட் கன், இதை நம்ப மறுக்கிறார். வாய்வழி வந்த காவியத்தை வரலாறு என்று கூறுவது தவறு, என்கிறார் இவர். கிம்-பியூ-மோ என்ற மானுடவியல் ஆய்வாளரோ, அயுத்தி மற்றும் அயோத்தி இரண்டும் ஒன்றே என்று கூறுகிறார். இன்றும் `கிம்' என்ற பெயர்கொண்ட கரக் வம்சாவழியினர் 10% பேர் கொரியாவில் உள்ளனர். இவர்கள் அனைவரும் அரசி ஹியோவின் வழித்தோன்றல்களே. முன்னாள் கொரிய அதிபர் கிம்-தே-ஜங் மற்றும் பிரதமர் கிம்-ஜாங்-பில் ஆகியோர் இந்த வம்சாவழியினர். கிம் சுரோ ஆண்ட கிம்மே நகரில் இன்றும் இந்தியர்கள் போன்ற தோற்றம் கொண்டவர்கள் வசிக்கின்றனர். அயோத்தி நகரையும், கிம்மே நகரையும் இரட்டை நகரங்களாக மேம்படுத்த, இந்திய மற்றும் கொரிய அரசுகளிடையே 2000-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. 2001-ம் ஆண்டு அயோத்தியின் சரயு நதிக்கரையில் அரசி ஹியோவுக்கு நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டது. இதை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில்தான் கொரிய அதிபர் மனைவியின் சமீபத்திய இந்தியப் பயணம் அமைந்துள்ளது என்று தெரிவிக்கின்றன ஊடகங்கள்.

கதைகளும் காவியங்களும் வரலாற்றையே தூக்கிச் சாப்பிடும் காலம் போல!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருநங்கைக்குக் கைகொடுத்த திருநங்கை அர்ச்சகர்!

தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் அருண்குமார். இவர் வசித்த பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரீஜா. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை பயின்று வந்தார். கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்துவந்த இவர்கள் 377-வது சட்டப்பிரிவு திருத்தத்துக்குப் பின்னர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அருணின் வீட்டில் திருமணத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பவே, இருவரும் நண்பர்கள் உதவியுடன் தூத்துக்குடியை அடுத்த சிவன் கோயிலில் திருமண ரசீது பெற்றுக்கொண்டு, சட்டப்படி திருமணத்தைப் பதிவு செய்ய முடிவு செய்தனர். திருமணத்துக்கு முந்தைய தினம் மாலையே, திருமணக் கட்டணம் ரூபாய் 600 செலுத்தி, சரியான ஆவணங்களையும் தந்து, கோயிலில் ரசீது கேட்டுள்ளனர் இவர்களின் நண்பர்கள். திருமணத்துக்கு அனுமதி அளிக்கத் தயங்கிய நிர்வாகம், மறுநாள் காலை வந்து ரசீது பெற்றுக்கொண்டு, திருமணத்தை நடத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது.

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

மறுநாள் தம்பதியினர் நண்பர்கள் சூழ கோயிலை அடைய, அவர்கள் கட்டிய 600 ரூபாயைத் திருப்பித் தந்த நிர்வாகம், ஸ்ரீஜாவின் அடையாள அட்டையில் `திருநங்கை' என்று பாலினம் குறிக்கப்பட்டிருந்ததால், திருமணம் செய்விக்க இயலாது என்று கைவிரித்துவிட்டது. வேறு வழியின்றி தவித்த ஜோடிக்கு, தக்க நேரத்தில் வந்து உதவினார் அதே கோயிலில் சிறிது காலம் குருக்களாகப் பணியாற்றிய திருநங்கையான பரணி. திருமணத்தை அங்கேயே பரணி நடத்திவைக்க, ரசீது இல்லாவிட்டாலும், திருமணத்தை நோட்டரி பப்ளிக் கடிதம் ஒன்று கொண்டு பதிவு செய்துகொள்ளலாம் என்று முன்வந்தார் சார்பதிவாளர். ஒரு வழியாக திருமணம் பதிவு செய்யப்பட்டுவிட, மணமக்களும் நண்பர்களும் மகிழ்வுடன் சென்றனர். திருமணத்தை நடத்தி வைக்க கோயில் நிர்வாகம் ஒப்புக்கொள்ளாதது மன வேதனை தருவதாக மணமக்களின் நண்பர்கள் தெரிவித்தனர்.

இணைந்த இதயங்கள்!

`மீடூ'... குற்றச்சாட்டும் நடவடிக்கையும்!

இந்தியாவில் #மீடூ பாலியல் குற்றச்சாட்டுகள் கடந்த ஒரு மாதமாகத்தான் இந்த ஹேஷ்டேக்கில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 24 வயதான மாணவி ராயா சர்க்கார் வெளியிட்ட `லோஷா' எனப்பட்ட... கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டவர்கள் பட்டியல், அதன் மீதான விசாரணை மற்றும் தண்டனை இப்போது என்ன நிலையில் இருக்கிறது? அதில் குறிப்பிடப்பட்ட நபர்கள் மீது துறை ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? இதுபற்றி ஆங்கில நாளேடான ஹஃபிங்க்டன் போஸ்ட் ஆய்வு செய்திருக்கிறது. இதில் புகார் கூறிய பெண்களின் பாதுகாப்பு கருதி அவர்களின் பெயரை வெளியிட மறுத்த ராயா, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, இப்போதும் மனநல சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்.

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ராயாவின் லிஸ்ட்டில் இருக்கும் 23 நிறுவனங்களைத் தொடர்புகொண்டு அதில் பணிபுரியும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான நடவடிக்கை குறித்து விசாரிக்கையில், பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தெரிகிறது என்று தகவல் வெளியிட்டுள்ளது ஹஃபிங்க்டன் போஸ்ட். 23 நிறுவனங்களை இ-மெயில் மூலமும், தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டதில், 21 நிறுவனங்கள் பதில் எதுவும் தரவில்லை. கொல்கத்தாவின் சி.எஸ்.எஸ்.எஸ், நேரடியான புகார் இல்லாத காரணத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தகவல் அனுப்பியது. அஷோகா பல்கலைக்கழகம் நான்கு கமிட்டிகள் ஏற்படுத்தியும் குற்றம் நிரூபிக்கப்படாததால், குற்றம்சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பதில் அனுப்பியது. மொத்தத்தில் ஓரிருவர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, “மீடூ இயக்கம் அனைத்து தரப்பு பெண்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பகுஜன் பெண்களின் குரல்களும் கேட்கப்பட வேண்டும்” என்று மீண்டும் கூறியிருக்கிறார் ராயா.

இரண்டாவது மீடூ அலையாவது பெண்களைக் கரைசேர்க்குமா?

பெண்கள் கலக்கிய அமெரிக்க இடைக்காலத் தேர்தல்!

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் நிறைய புதுமுகங்கள். வெற்றி பெற்ற பெண்களில் சிலர் கறுப்பினத்தவர், சிலர் புலம் பெயர்ந்த முஸ்லிம்கள், சிலர் பழங்குடி அமெரிக்கர்கள். முதன்முறையாக இரண்டு முஸ்லிம் பெண்கள் அமெரிக்க காங்கிரஸுக்குத் தேர்வாகியுள்ளனர்.

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

மசாசுஸெட்ஸ் நகரின் முதல் கறுப்பின பெண் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அயன்னா ப்ரெஸ்லி. “இன்று வாக்காளர்களாகிய நாமே சக்தி படைத்தவர்கள். நீதிக்கும் சமத்துவத்துக்கும் போராடும் வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ள அயன்னா, போட்டியே இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்! 29 வயதே ஆன அலெக்சாண்ட்ரியா ஒகேசியோ கார்டஸ், அமெரிக்காவின் மிகவும் இளவயது காங்கிரஸ் உறுப்பினர் என்ற பெருமையைப் பெறுகிறார். இதுவரை நடைபெற்ற அமெரிக்க காங்கிரஸுக்கான தேர்தல்களில், இந்த தேர்தலில்தான் அதிக அளவு பெண்கள் (94 பேர்) வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!

வரலாறு படைக்கும் பெண்கள்!

கைக்குழந்தையுடன் பணியாற்றிய பெண் கான்ஸ்டபிள்!

உத்தரப்பிரதேசம் ஜான்சி நகரின் காவல் நிலையத்தில், வழக்கம்போல இரவுப் பணியில் இருந்தார் கான்ஸ்டபிள் அர்ச்சனா ஜயந்த். அவருக்கு முன்னால் இருந்த ரிசப்ஷன் மேஜையில் தூங்கிக்கொண்டிருந்தாள் ஆறு மாதமே ஆன அவரின் கைக்குழந்தை அங்கிதா. இதைப் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் இன்னொரு காவல்துறை நண்பர் வெளியிட, வைரல் ஆனது புகைப்படம். மாநிலத்தின் உயர் காவல்துறை அதிகாரியான ராகுல் ஸ்ரீவாஸ்தவ், “தாய்மையும் கடமை உணர்வும் மிக்க காவல்துறை கான்ஸ்டபிள் அர்ச்சனா மரியாதைக்குரியவர்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதன்பின்தான் விழித்துக்கொண்டது காவல்துறை. உடனடியாக அர்ச்சனாவின் உயர் அதிகாரி அவரைப் பாராட்டி, 1,000 ரூபாய் பரிசு அறிவித்தார்.

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ட்விட்டர் மக்களோ விடுவதாக இல்லை! கைக்குழந்தைகளுடன் பணியாற்றும் பெண்களுக்குப் பணியிடங்களில் சரியான வசதிகள் செய்து தரக்கோரி வரிசையாக விண்ணப்பங்களும், அறிவுரைகளும் குவியத் தொடங்கின. அர்ச்சனாவின் மன உறுதியைப் பாரட்டும் அதே வேளையில், காவல்துறை போன்ற கடினப் பணிகளில், பணியிடங்களிலேயே `க்ரெச்' அமைத்தால் உதவியாக இருக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர். ஒருவழியாக செய்தி மாநிலத்தின் டி.ஜி.பி-யான ஓம் பிரகாஷ் சிங்கை எட்ட, அர்ச்சனாவிடம் நேரடியாகப் பேசிய அவர், அவருக்கு கணவர் பணியாற்றும் குர்காவுக்கு அருகில் பணியிட மாற்றம் தருவதாக உறுதியளித்தார்.

ஒருவழியாக தன் 10 வயது மகன், வயோதிக பெற்றோர், கைக்குழந்தை, கணவர் என்று குடும்பமாக செட்டில் ஆகியிருக்கிறார் அர்ச்சனா.

ஒற்றைப் புகைப்படத்தால் இணைந்த குடும்பம்!

அவள் அப்டேட்

`14 நாள்கள்' பகுதியில் வெளியான கேரள மாநில பெண்களின் `உட்கார உரிமை கோரும் போராட்டம்' குறித்து சமீபத்தைய அப்டேட்: 1960-ம் ஆண்டு இயற்றப்பட்ட கேரளா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தில் அரசு கொண்டுவந்த திருத்தங்கள் மாநில ஆளுநரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்ட வடிவைப் பெறுகின்றன. அதன்படி, கேரள மாநில வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் பெண்கள் அனைவருக்கும் உட்காரும் வசதி சட்டப்படி செய்துதர வேண்டும் என்றும், சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

*   96 வயதான கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி கார்த்தியாயினி அம்மாள் நான்காம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதியது பற்றியும் இதே பகுதியில் வெளியிட்டிருந்தோம். தேர்வில் 98% பெற்று தேர்ச்சியடைந்த கார்த்தியாயினி அம்மாள், கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பரிசும் பாராட்டும் பெற்றிருக்கிறார்.              

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism