Published:Updated:

என்னால் முடியும்... உங்களாலும் முடியும்!

என்னால் முடியும்... உங்களாலும் முடியும்!
பிரீமியம் ஸ்டோரி
என்னால் முடியும்... உங்களாலும் முடியும்!

தனியே... தன்னந்தனியே..

என்னால் முடியும்... உங்களாலும் முடியும்!

தனியே... தன்னந்தனியே..

Published:Updated:
என்னால் முடியும்... உங்களாலும் முடியும்!
பிரீமியம் ஸ்டோரி
என்னால் முடியும்... உங்களாலும் முடியும்!
என்னால் முடியும்... உங்களாலும் முடியும்!

120 நாள்கள்... 10 நாடுகள்... பெங்களூரு முதல் சிட்னி வரை 28,000+ கிலோமீட்டர் தொலைவு... அதுவும் பைக் பயணமாக... கேண்டிடா லூயிஸ் முன்னெடுத்திருக்கும் சமீபத்திய தனிப்பெரும் சாதனை இது!

பெங்களூரைச் சேர்ந்த கேண்டிடா, பைக் காதலி; பயணங்களின் ப்ரியை. வெறித்தனமான இந்தக் காதலின் பின்னணியில் காரணம் இல்லாமலில்லை.

``சுற்றிலும் நீர்வீழ்ச்சிகள், கூப்பிடும் தூரத்தில் கோவானு நான் வளர்ந்த சூழல்தான் பைக் ஓட்டும் ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்துச்சு. அப்பாவோடும் என் ஃப்ரெண்ட்ஸோடும் நிறைய பைக் ரைடு போயிருக்கேன். கடந்த பத்து வருஷத்துல 14 நாடுகளை பைக்கில் கடந்திருக்கேன்'' - அநாயாசமான சாதனையைச் செய்துகொண்டே, அமைதியாக, அடக்கமாகப் பேசுகிறார்.

``வழக்கமா வெளிநாடுகளுக்குப் போகும்போது ஃப்ளைட்ல போய் இறங்கி, அங்கே பைக்கை வாடகைக்கு எடுத்துக்கிட்டு சுற்றுவேன். இந்த முறை பெங்களூர் டு லண்டன் போகிறதா ப்ளான். `சேஞ்ச் யுவர் வேர்ல்டு' ஃபண்ட் டிராவல் புராஜெக்ட்ல என்னை செலெக்ட் பண்ணியிருந்தாங்க. பைக்கர் அலிஸ்டர் ஃபார்லண்டு நினைவாக நடந்த புராஜெக்ட் அது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி அலாஸ்காவிலிருந்து சௌத் அமெரிக்காவுக்கு பைக்ல போயிட்டிருந்தபோது அலிஸ்டர் இறந்துட்டார். அதுக்காகத்தான் அவர் சார்பா நான் இந்த ட்ரிப்புக்கு சம்மதிச்சேன்'' - நீண்ட பயணத்தின் நோக்கம் சொல்கிறார்.

என்னால் முடியும்... உங்களாலும் முடியும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அலிஸ்டரின் கனவு தவிர, இந்தப் பயணத்தின் மூலம் நான் இன்னொரு விஷயத்தையும் சொல்ல நினைச்சேன். அது பயணத்தின் முக்கியத்துவம். மாறுபட்ட கலாசாரங்களையும், மக்களையும், அவங்களுடைய எண்ணங்களையும் பயணங்கள் கற்றுக்கொடுக்கிற மாதிரி எந்தக் கல்விமுறையும் சொல்லித் தராது. குறிப்பா பெண்களுக்கு, அதுவும் கிராமத்துப் பெண்களுக்குப் பயணத்தின் அவசியத்தைப் புரிய வைக்கிறதுதான் என் ஒவ்வொரு சோலோ ட்ரிப்பின் நோக்கமும்'' என்கிறவர், இந்த வருட இறுதிவரை பயணத்தில் பிஸி.

நாடுவிட்டு நாடு, கண்டம்விட்டு கண்டம், அதுவும் பைக்கில் தனியாகப் பயணிப்பது என்பது ஆண்களையே அலறவைக்கிற அசகாயச் செயல். இப்படியொரு நீண்ட பயணத்துக்கு உடலளவில் தயாராவது என்பது அதைவிட பெரிய சவால்.

``அது ஒண்ணும் எனக்குக் கஷ்டமா தெரியலை. வாரத்துல நாலஞ்சு முறை இப்படி எங்கேயாவது சோலோ ரைடு கிளம்பிடுவேன். போகிற இடங்கள்ல ட்ரெக்கிங் போகிறதை மிஸ் பண்ண மாட்டேன். எனக்கு ஜிம்மெல்லாம் தேவையில்லை. இந்த விஷயங்களே என்னை ஃபிட்டா வெச்சிருக்கு'' - கேண்டிடாவைப் போலவே அவரது ஃபிட்னெஸ் ரொட்டீனும் அவ்வளவு எளிமை.

`பயணம், பெண்களுக்குப் பாதுகாப்பான தல்ல' என்ற வார்த்தைகள், கேண்டிடாவையும் விட்டுவைக்கவில்லை.

என்னால் முடியும்... உங்களாலும் முடியும்!

``ஒவ்வொரு முறை சோலோ ட்ரிப் போகும் போதும் அதை நான் எதிர்கொள்கிறேன். குறிப்பா, நாடுவிட்டு நாடு கிளம்பும்போது, `இதெல்லாம் சரியே இல்லை. ரொம்ப ரிஸ்க். வேண்டாம்'னு என்னை டிஸ்கரேஜ் பண்றவங்க எக்கச்சக்கம். என்னைப் பொறுத்தவரை நாம எங்கே டிராவல் பண்றோம் என்பதில் தொடங்கி, பிரச்னைகள் வந்தா எப்படி ரியாக்ட் பண்ணணும்கிறது வரைக்கும் முன்கூட்டியே தயாரா இருந்தோம்னா பிரச்னைகளைத் தவிர்க்கலாம். என் அடுத்த பயணத்துக்கும் இந்த ப்ளானுடனும் கடவுள் நம்பிக்கையோடும்தான் கிளம்புவேன். இதையெல்லாம் தாண்டின பாதுகாப்பும் முக்கியம். என் பைக்ல ஜிபிஎஸ் ட்ராக்கர் பொருத்தியிருக்கேன். நான் எங்கே இருக்கேன், எங்கே போறேன்னு எல்லாம் என் பெற்றோருக்கு அப்டேட் ஆகிட்டே இருக்கும். நாம சரியா இருந்தா, நம் உலகமும் பாதுகாப்பானதா இருக்கும்'' - நம்பிக்கை தெறிக்கிறது வார்த்தைகளில்.

``பெங்களூரு மாதிரியான ஊர்லயே பைக் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை ரொம்பக் கம்மியா இருக்கு. தனக்குப் பிடிச்சதைச் செய்யற தைரியம் பல பெண்கள்கிட்ட இல்லை. சமூக வலைதளங்களில் நான் என் அனுபவங்களைப் பகிர்வதைப் பார்த்துட்டு நிறைய பெண்கள் தங்களுக்கும் அப்படி ஆகணும்கிற ஆசை இருக்கிறதா மெசேஜ் பண்றாங்க. இதுல சில ஆண்களும் இருக்கிறது ஆச்சர்யம். நான் ஒரு பெண்... என்னால இதெல்லாம் முடியுதுன்னா, மற்ற பெண்களாலும் முடியும்.''

ஆமாம்... அதுதான் பயணத்தால் வரும் தன்னம்பிக்கை!

- ஆர்.வைதேகி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism