Published:Updated:

கைவிட்டது அரசு; தவித்த மக்கள்! - கேரளாவைத் திரும்பிப் பார்க்கவைத்த பேராசிரியை

சிந்து ஆர்
கைவிட்டது அரசு; தவித்த மக்கள்! - கேரளாவைத் திரும்பிப் பார்க்கவைத்த பேராசிரியை
கைவிட்டது அரசு; தவித்த மக்கள்! - கேரளாவைத் திரும்பிப் பார்க்கவைத்த பேராசிரியை

கேரள மாநிலத்தில் பெய்த மழை காரணமாக வீடு இழந்த 11 ஏழைகளுக்கு தன்னந்தனியாக முயற்சி செய்து வீடு கட்டிக்கொடுத்து முன்னுதாரணமாக மாறியிருக்கிறார் பத்தணம்திட்டையைச் சேர்ந்த ஒரு கல்லூரி பேராசிரியை.

கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை காரணமாக மாநிலமே நொறுங்கிப்போனது. நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு காரணமாக 10 லட்சத்துக்கும் அதிகமானோர் முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகள் முற்றிலும் உருக்குலைந்தன. கேரளத்தை மீண்டும் புனரமைக்க நிதிப் பற்றாக்குறையால் அரசு திணறி வருகிறது. இந்த நிலையில், வீடு இழந்த ஏழைகளுக்கு ஒரு கல்லூரிப் பேராசிரியை தன்னந்தனியாக 11 வீடுகளைக் கட்டிக்கொடுத்து கேரளத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

பத்தணம்திட்டா கத்தோலிக்க கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரியும் எம்.எஸ்.சுனில், மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பாண்டநாடு, எழிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஏழைகளுக்கு 11 வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளார். கல்லூரி மாணவர்கள், சமூக அமைப்புகளின் உதவியுடன் இதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் பேராசிரியை எம்.எஸ்.சுனில். இதுகுறித்து பேராசிரியை எம்.எஸ்.சுனில் கூறும்போது, ``அரசு வீடு கட்டிக்கொடுக்க வாய்ப்பு இல்லாதவர்களைத் தேர்ந்தெடுத்து வீடு கட்டிக்கொடுத்துள்ளோம்.

அவர்களுக்கென்று நிலம் இருக்கும். ஆனால், அதற்கான ஆவணங்களில் குளறுபடி போன்ற காரணங்களால் அரசுத் திட்டத்தில் அவர்களுக்கு வீடு கிடைக்காமல் போயிருக்கிறது. வீடு மட்டும் அல்ல, வீட்டுக்குத் தேவையான பாத்திரங்கள் போன்ற பொருள்கள், மாணவர்களுக்குப் படிக்கத் தேவையான உபகரணங்களும் வழங்கியுள்ளோம்" என்றார்.