திறமையை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு போகப் பொருளாதார வசதியும் சரியான வழிகாட்டுதலும் மிகமிக அவசியம். அவை கிடைக்கப் பெறுகிறவர்களால் மட்டுமே ஸ்டார்ட்அப்புகளில் சாதிக்க முடிகிறது. திறமையை மட்டும் நம்பிக்கொண் டிருக்கும் இளைஞர்களுக்கு?

அப்படிப்பட்டவர்களுக்கு வழிகாட்டுகிறது ‘பாரதிய யுவசக்தி டிரஸ்ட் (பி.ஒய்.எஸ்.டி)'. ஜே.ஆர்.டி டாட்டாவின் உதவியால் உருப்பெற்ற இந்த டிரஸ்ட்டின் பிரதான நோக்கம் வேலை தேடுவோரை வேலை உருவாக்குபவர்களாக மாற்றுவது. இதன் முனைப்பினால் லட்சக்கணக்கான இளைஞர்கள் தொழிலதிபர்களாகத் தலை நிமிர்ந்திருக்கிறார்கள். தேசிய, சர்வதேச அளவில் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை வென்றுகொண்டிருக்கிறார்கள்.

டிரஸ்ட்டின் சிறப்பான செயல்பாடுகளுக்குப் பின்னணியில் இருப்பவர் லட்சுமி வெங்கடேசன். பி.ஒய்.எஸ்.டி-யின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலரான இவர், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனின் மகள்.

‘`இன்ஜினீயரிங் முடிச்சிட்டு அமெரிக்காவில் டெலி கம்யூனிகேஷன்ஸ் துறையில வேலை பார்த்திட்டிருந்தேன். அமெரிக்காவில் வேலை பார்த்திட்டிருந்தபோதே இந்தியாவுக்காக ஏதாவது பண்ணணும் என்கிற எண்ணம் பெரிசா இருந்தது. 1990-ல் ஒருமுறை அப்பாவோடு அமெரிக்கா போயிருந்தபோது, வேல்ஸ் இளவரசரைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. பள்ளிக்கூடப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினவங்களைத் தேடிக்கண்டுபிடிச்சு, தொழிலதிபர்களாக்கும் அவருடைய முயற்சி பற்றி என்கிட்ட பேசிட்டிருந்தார். அது என்னைக் கவர்ந்தது. வேலையை விட்டுட்டு, அதே மாதிரியான ஒரு திட்டத்தை ஆரம்பிக்க நினைச்சேன். 90-களில் சுயதொழில் தொடங்கும் ஆர்வத்துக்குப் பெரிய வரவேற்பு இல்லை. நிலையான வேலையோடு அதை ஒப்பிட முடியாதுங்கிற கருத்து பலருக்கும் இருந்தது. ஆனாலும், சுயதொழில் முயற்சி வெற்றிபெறும் என்கிற நம்பிக்கையில் என் புராஜெக்ட்டுக்கான ஐடியாவை ஜே.ஆர்.டி டாட்டாவிடம் கொடுத்தேன். எனக்கு மென்ட்டராகவும் ஃபவுண்டிங் சேர்மனாகவும் இருக்க சம்மதிச்சார். 1992-ல் பி.ஒய்.எஸ்.டி ஆரம்பமானது.

18 முதல் 35 வயசு இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமப் போகும்போது வாழ்க்கையின் மீதான நம்பிக்கையும் போயிடுது. சிறுதொழில் ஆரம்பிக்கலாம் என்றால் செக்யூரிட்டி இருக்கா, யார் கியாரண்டி கொடுப்பாங்கனு வங்கியில் கடன் வாங்குவதில் ஏகப்பட்ட கெடுபிடிகள். பெண்களின் நிலை இன்னும் மோசம். அவங்க பெயரில் சொத்துகள் எதுவும் இருக்காது.

பி.ஒய்.எஸ்.டி மூலமா கிராமங்கள் அல்லது சிறுநகரங்களுக்குச் சென்று சிறுதொழிலுக்கான ஐடியா வைத்திருப்பவர் களைக் கண்டுபிடிக்கிறோம். சாதாரண கைவினைப் பொருள் தயாரிப்போ, ஹைடெக் தொழில்நுட்பம் தேவைப்படும் பிசினஸோ... அவங்களுடைய ஐடியாக்களுக்கு சப்போர்ட் பண்றோம். கிராமப் பஞ்சாயத்து அளவுல ‘பிசினஸ் ஐடியா கன்டெஸ்ட்’ என்கிற பெயரில் போட்டிகள் நடத்தியும் ஐடியாக்களை வரவழைக்கிறோம். சொத்து இருக்க வேண்டியதில்லை, செக்யூரிட்டி தேவையில்லை. பயிற்சி கொடுப்பதில் தொடங்கி, வங்கிக் கடன் வாங்கித் தருவது, கவுன்சலிங், மென்ட்டரிங் செய்வது வரை எல்லாவற்றையும் நாங்க செய்கிறோம். தமிழ்நாட்டில் திறமைகள் கொட்டிக்கிடக்கு. அவங்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறதுதான் எங்க வேலை.

சண்முகதேவினு ஒரு பெண் எங்ககிட்ட வரும்போது ரெண்டு பெண் உதவியாளர்களை வெச்சுக்கிட்டு வீடுகளைச் சுத்தம் செய்து கொடுக்கிற வேலை, பெஸ்ட் கன்ட்ரோல்னு ஏதேதோ பண்ணிட்டிருந்தாங்க. அவங் களுக்குச் சரியான மென்ட்டரிங் கொடுத்து வழிநடத்தினதால இன்னிக்கு அவங்க ‘ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட்’ என்ற பெயர்ல ஹவுஸ்கீப்பிங் கம்பெனி நடத்தறாங்க. டைடல் பார்க்ல உள்ள பல கம்பெனிகளும் அவங்களுடைய கஸ்டமர்ஸ். அவங்களுடைய டர்ன் ஓவர் ரூ.2 கோடி. இப்படி எங்ககிட்ட நிறைய நிஜக் கதைகள் உண்டு...’’ - நீண்ட விளக்கம் தருபவர், இந்த ஒட்டுமொத்தத் திட்டத்தின் ஹைலைட்டான மென்ட்டார்ஷிப் பற்றித் தொடர்கிறார்.

‘`தொழிலதிபர்களை உருவாக்கும் இந்தத் திட்டத்தின் முதுகெலும்புகளே மென்ட்டார்ஸ் தாம். தொழில் தொடங்கும் ஆர்வத்தோடு வர்றவங்களுக்கு வழிகாட்ட மென்ட்டார்ஸ் நியமிக்கப்படுவாங்க. அவர்களைப் பெரிய நிறுவனங்கள், இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்ஸ், ரோட்டரி, லயன்ஸ் கிளப் மாதிரியான அமைப்புகள் எனப் பல பின்னணியிலிருந்து தேடிக் கண்டுபிடிச்சுக் கூட்டிட்டு வருவோம். வருங்காலத் தொழிலதிபர்களுக்கு வழிகாட்டப் போகும் அவங்களுக்கும் ‘ட்ரெயினிங் ஆஃப் தி ட்ரெயினர்ஸ்’ என்கிற பெயரில் பயிற்சி அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட ஆணோ, பெண்ணோ பிசினஸ் ஆரம்பிச்ச பிறகும் இரண்டு வருஷங்களுக்கு மென்ட்டார்ஸின் சப்போர்ட் தொடரும்.

பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்டின் முயற்சிகளால் இன்னிக்கு ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களை உருவாக்கியிருக்கோம். அவங்க மூலமா லட்சக்கணக்கானவங்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேலை வாய்ப்புகள் கிடைச்சிருக்கு. 42 நாடுகளில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கோம்.

சிறுதொழில் என்பதை யாரும் இரண்டாம் பட்சமாக நினைக்கக் கூடாது. பிசினஸ்ல ஜெயிக்கணும்னா பெரிய பின்புலம் வேணும்னு பொதுக்கருத்து இருக்கு. அதை உடைக்கிறதுதான் எங்க நோக்கம். சாதாரண குடும்பத்துப் பின்னணியிலேருந்து வரும் ஆணோ, பெண்ணோகூட தொழிலதிபர்களாகலாம், அவங்க ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கலாம்னு நிரூபிச்சிட்டிருக்கோம். உதாரண மனிதர்களை உங்க கண் முன்னாடி நிறுத்தியிருக்கோம். நீங்களும்கூட அந்த உதாரண மனிதர்களில் ஒருவராகலாம்...’’ - நம்பிக்கை ஊற்றெடுக்கிறது லட்சுமியின் பேச்சில்!

- சாஹா