``பித்தளைத் தாம்பாளத்தின் மேல் இரு பாதங்களையும் பதித்து உடல், மனம் ஒருங்கிணைந்து, குதிகால்களின் பிடிமானத்தில் தாம்பாளத்தை நகர்த்தி ஆடும்போது கேட்கும் கை தட்டலே என் ஆன்மாவுக்கான இசை’’ - லயித்துப்பேசுகிறார் அயனா முகர்ஜி. மகாராஷ்டிர அரசின் நடனக்கலைத் துறையின் ‘கிங்கணி பாரம்பர்ய நடன விழா’வில் தனி ஆவர்த்தனம்மூலம் தன் திறமையைப் பறைசாற்றியவர். கனடாவில் மிக முக்கிய 10 நகரங்களில் குச்சுப்புடி நடன நிகழ்ச்சிகளை நடத்தி உலக அளவில் கவனம் ஈர்த்தவர். இத்துறையில் 15 வருடங்களுக்கும் மேலாக, கலைக் காதலுடன் பயணித்து, 31 வயதில் தனக்கென ஓர் இடம் பிடித் திருக்கிறார். டெல்லியில் வசிக்கும் அயனாவிடம் பேசினோம்.

‘`மேற்கு வங்கத்தில் பிறந்து வளர்ந்தேன். பத்தாம் வகுப்பு முடித்தபின், தந்தையின் நண்பரான குச்சுப்புடி நடனக்கலைஞரிடம் குச்சுப்புடி நடனம் கற்றேன். கொல்கத்தாவில் உள்ள ரபீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் என் 11-வது வயதில் சேர்ந்து, குச்சுப்புடி நடனக்கலையைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். சென்னையில் பத்மபூஷண் வேம்பட்டி சின்ன சத்யம் அவர்களின் குச்சுப்புடி டான்ஸ் அகாடமியில் இரண்டாண்டுகள் பயிற்சிபெற்றேன். குருகுலவாசத்தில் பெற்ற பயிற்சி என்னை மேலும் மெருகேற்றியது. அப்போது மியூசிக் அகாடமி, கிருஷ்ண கான சபா, திருமலை திருப்பதி தேவஸ்தானம் எனப் பல சபாக்களில் ருக்மிணி கல்யாணம், கிருஷ்ண பாரிஜாதம், கோபிகா கிருஷ்ணர் போன்ற முக்கிய நடன நிகழ்ச்சிகளில் முதன்மை நடனக்கலைஞராகத் தலைமையேற்றேன்’’ என்கிறவர், குழுவை மிகச் சிறந்த முறையில் ஒருங்கிணைத்து ரசிகர்களைப் பிரமிக்கச் செய்வதில் விற்பன்னர். இப்போது, குச்சுப்புடி நடன வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை உலகம் முழுக்க நடத்திவருகிறார்.

``பரதநாட்டியம், கதக், மோகினியாட்டம் போல கடுமையான போட்டி, குச்சுப்புடி துறையில் இல்லை.
வாய்ப்புகள் அதிகம் உண்டு. தனி ஆவர்த்தனம் செய்வதற்கு முக்கியத்துவம் அளித்தால் திறமையை மேம்படுத்திக்கொள்ள முடியும். முழுத் திறனையும் வெளிப்படுத்தி ஈடுபாட்டுடன் நடன நிகழ்ச்சிகளை நடத்தினால், எளிதில் புகழ் ஏணியின் உச்சிக்கு வர முடியும்'' என்று ஆர்வமூட்டுகிற அயனாவின் லட்சியம் குச்சுப்புடி நடனத்துக்கென பிரத்யேகக் குருகுலம் ஒன்றை மேற்கு வங்கத்தில் உருவாக்குவதே!

- ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்