‘`நான் மன அழுத்தத்தில் இருந்தபோது, சாக்பீஸ் ஆர்ட் கலையை ஒரு வடிகாலாகக் கையில் எடுத்தேன். அதுதான் இன்று என்னை உலக சாதனை அளவுக்குக் கொண்டுவந்துள்ளது’’ என்கிறார், கர்நாடகா மாநிலம் சிந்தாமணியில் வசிக்கும் மஞ்சுளா ஸ்ரீநிவாஸ் குப்தா... சாக்பீஸில் நுணுக்கமான உருவங்களைச் செதுக்கி ‘இந்தியா ஸ்டார் பேஷன் அவார்டு’, ‘வஜ்ரா வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் அவார்டு’, ‘அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ எனப் பல சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்தவர்.

‘`என் தந்தை சிறிய மளிகைக் கடை நடத்தினார். தாய், குடும்ப நிர்வாகி. ஓர் அக்கா. தவிர, பெரியப்பா, சித்தப்பா எனப் பெரிய கூட்டுக் குடும்பம் எங்களுடையது. சொந்தங்கள் சூழ வாழ்ந்ததால், திருமணத்துக்குப் பின் தனிக்குடித்தனத்துக்குப் பழக்கப்பட சிரமப்பட்டேன். பொருளாதாரச் சிக்கல்களும் சேர்ந்துகொண்டன. எங்கள் இரண்டு ஆண் குழந்தைகளையும் வளர்க்க மிகவும் அல்லல்பட்டோம். நான் படிக்கவில்லை என்பதால், வேலைக்குச் சென்று கணவருக்கு உதவ முடியவில்லையே என்று வருந்தினேன். என் இயலாமை, ஒருகட்டத்தில் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அதிலிருந்து விடுபட, சாக்பீஸில் உருவங்களைச் செதுக்க ஆரம்பித்தேன். அப்போதுதான், ஒரு மின்னல் வெட்டியது. படிப்பில்லை என்றாலும், என் அப்பாவும் தாத்தாக்களும் பல தொழில்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தவில்லையா? இனி நமக்கு சாக்பீஸ் கலைதான் தொழில் என்று முடிவு செய்தேன்.

என் கணவர், தேவையான பொருள்களை வாங்கிக்கொடுத்தார். ‘இதில் என்ன செய்துவிட முடியும் என்று நினைக்காதே. இதில் என்னவெல்லாம் செய்யலாம் என்று பெரிதாக யோசி’ என்று சொல்லி எனக்கு உற்சாகம் தந்தார். உள்ளூரில் நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் என் தயாரிப்புகள் குறித்து வாய்வழி விளம்பரம் கிடைத்து பல ஊர்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்தன. முகநூலில் ஒரு பக்கத்தை ஆரம்பித்து என் படைப்புகளை புகைப்படங்களாகப் பதிவிட்டேன். ஃபார்வர்டுகள், என்னைப் பிரபலமாக்கின. இதனால் மிகக் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கானோர் என் தயாரிப்புகளை வாங்கி ஆதரவளித்தனர்.

வண்ண வண்ண சாக்பீஸ்களில் பறவைகள், தெய்வ, மனித உருவங்கள், பல்லாங்குழி, விளையாட்டுச் சாதனங்கள், விமானம், உலக அதிசயங்கள், இசைக் கருவிகள், இந்தி, ஆங்கில, கன்னட மொழி எழுத்துகள் எனப் பலவற்றையும் விரும்பி வாங்குகின்றனர். நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு மணமகன் - மணமகள் பெயர்களைச் செய்துகொடுத்தும் வருமானம் ஈட்டுகிறேன். நிறைய பயிற்சி வகுப்புகளை நடத்தி இந்தக் கலையை இளம் தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பதே என் லட்சியம்!” என்கிறார் 41 வயதாகும் மஞ்சுளா.

- ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்