‘`போட்டோகிராபி என்பதை நான் வெறும் கலையா பார்க்கலை. அழகான தருணங்களி லிருந்து சுவாரஸ்யமான கதைகளை உருவாக்கும் முயற்சி அது. நான் எடுக்கும் படங்களில் கேமராவின் பங்கு வெறும் 25 சதவிகிதம்தான். என் கிரியேட்டிவிட்டியும் எடிட்டிங்கும் 75 சதவிகிதம். இன்னிக்கு மொபைல் கேமரா வெச்சிருக்கிற எல்லோரும் போட்டோஸ் எடுக்கிறாங்க. அழகழகான தருணங்களைப் படம் பிடிக்க அது நல்ல வாய்ப்பா மாறியிருக்கு. அதேநேரம் புரொஃபஷனல் போட்டோகிராபர்களுக்கு அவங்க எந்த வகையிலும் போட்டியாளர்களாகிறதில்லை....’’ - அடக்கமாக, அமைதியாகச் சொல்கிறார், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான போட்டோகிராபர், ஜெயஸ்ரீ.

எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீயரான ஜெயஸ்ரீ, சாஃப்ட்வேர் வேலையைப் புறந்தள்ளிவிட்டு, முழுநேர போட்டோ கிராபரானதன் பின்னணியில் இருப்பது அழகான கதை.

‘`ப்ரெக்னன்ட் ஆனதும் வேலையை விட்டுட்டேன். என் மகன் அபிஜெய் பிறந்தபோது அவனுடைய ஒவ்வோர் அசைவையும் போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சேன். குழந்தையின் சிணுங்கல்களை ரசிக்கிற சராசரி அம்மாவா இருந்த எனக்கு ஒரு கட்டத்துல போட்டோகிராபியில தீவிரமான ஆர்வம் வந்தது. என் குழந்தையின் அழுகை, சிணுங்கல், சிரிப்புனு எல்லாத்தையும் பதிவு பண்ணத் தொடங்கினேன். அதுவரைக்கும் எனக்கு போட்டோகிராபி தெரியாது. ஆர்வத்தின்பேரில் இன்டர்நெட்டிலும் யூடியூபிலும் கத்துக்கிட்ட விஷயங்களை வெச்சு போட்டோகிராபியில ஸ்பெஷலைஸ் பண்ண ஆரம்பிச்சேன்’’ - கேமரா காதல் கதை பகிர்பவர், ஆரம்பத்தில் குழந்தைகளை மட்டுமே போட்டோ எடுத்திருக்கிறார்.

‘`குழந்தைகளை போட்டோ எடுக்கிறது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. புது முகங்களைப் பார்த்ததுமே சில குழந்தைங்க அழ ஆரம்பிச்சிடுவாங்க. சிலர் பயப்படுவாங்க. அவங்களை சகஜநிலைக்குக் கொண்டு வரணும். குழந்தைங்களுக்குப் பழகிய இடத்துல, வசதியான சூழல்ல வெச்சுதான் போட்டோஷூட் பண்ண முடியும். ஒரே ஒரு க்யூட் எக்ஸ்பிரஷனுக்காக மணிக்கணக்கா, நாள் கணக்கா காத்திருக்க வேண்டியிருக்கும். பிறந்த குழந்தைகளை எடுக்கிறதைவிடவும் சவாலானது ஓரளவு வளர்ந்த குழந்தைகளை எடுக்கிறது. முதல் சந்திப்பிலேயே அவங்க என்கிட்ட ஒட்ட மாட்டாங்க. நாம கேட்கற போஸ்களுக்கு ஒத்துழைக்க மாட்டாங்க. அவங்களுக்கு முதல்ல என்மேல நம்பிக்கை வரணும். அதுக்காக அவங்களோடு நிறைய பேசி, விளையாடுவேன். அவங்களுக்குப் பிடிச்ச சாக்லேட்ஸ், பொம்மைகளைக் கொடுத்து ஓர் அந்நியோன்யத்தை வரவழைப்பேன். அப்புறம் தான் போட்டோஷூட். குழந்தைகளைப் பெற்று, வளர்க்கிறதைவிடவும் அதிகமான பொறுமை தேவைப்படற வேலை இது’’ - அழகியல் கலையின் பின்னாலுள்ள அசௌகர்யங்கள் சொல்பவர், சமீப காலமாக மெட்டர்னிட்டி எனப்படுகிற பேறுகால புகைப்படங்களையும் எடுக்கிறார்.

‘`வெளிநாடுகளில் கர்ப்பகாலத்தின் ஒவ்வொரு வளர்ச்சியையும் போட்டோஸ் எடுத்துப் பதிவு பண்றாங்க. ஆனா, கர்ப்பமா இருக்கும்போது போட்டோ எடுக்கக் கூடாது என்கிற நம்பிக்கை இன்னும்கூட நம்மூர்ல முழுசா மாறலை. நான் ஒரு பெண்ணா இருக்கிறதால போட்டோஷூட் பண்ண நினைக்கிறவங்களுடைய தயக்கம் குறையுது. நான் ப்ரெக்னன்ஸி போட்டோஷூட் பண்ண ஆரம்பிச்சபோது நிறைய பேர் அதுக்குத் தயாரா இல்லை. ஆனா, இன்னிக்கு நிலைமை மாறியிருக்கு. இன்னும் சொல்லப் போனா கர்ப்பமான வயிற்றை உடையால் மறைக்காம அப்படியே எடுக்கச் சொல்ற அளவுக்கு பலருடைய மனநிலை மாறியிருக்கு. அந்தப் படங்கள் அவங்களுடைய தனிப்பட்ட ரெக்கார்ட்ஸுக்காக என்ற கண்டிஷனையும் மதிக்கணும்.

கர்ப்பம் சுமக்கும் பெண், அவருடைய கணவர்னு ரெண்டு பேருடைய எதிர்பாராத எக்ஸ்பிரஷன்ஸை போட்டோ எடுக்கிறதுதான் இதுல பெஸ்ட் பார்ட். அதுவும் ரெடி சொன்னதும் வந்துடாது. பலமணி நேரம் காத்திருக்கணும்’’ - பொறுமையே முதல் திறமை என உணர்த்துகிற ஜெயஸ்ரீ, சமீப காலமாக `ரியலிஸ்ட்டிக் ஸ்கெட்ச்சஸ்' என்கிற கலையிலும் பிரபலமாகி வருகிறார். அவருடைய புகைப்படங்களைப் போலவே ஓவியங்களும் கொள்ளை அழகு!

ஆர்.வைதேகி, படங்கள் : ஜெயஸ்ரீ