இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய ஆண்களின் எண்ணிக்கைக்கு சரிசமமாக இருக்கிறார்கள் பெண்கள். ஆனால், இன்றைக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. தற்போது குடும்பத்தினரின் தேவைகளை மட்டுமே நிறைவேற்றுகிற பெண்கள், வேலைக்குச் சென்று சம்பாதிக்கத் தொடங்கினால், நம் நாட்டின் பொருளாதாரம் எந்த அளவுக்கு வளர்ச்சியடையும், இதனால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எப்படி சரிசமமான நிலை உருவாகும் என்பது குறித்து சென்னையில் உள்ள மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் ஒரு கருத்தரங்கை நடத்தியது. இதில், பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தில் பொருளாதாரத்தில் பெண்களும் கலந்துகொள்ளும் பட்சத்தில் எவ்வளவு வலிமை (Power of Parity) பெற முடியும் என்பது குறித்த தகவலை மெக்கென்ஸி நிறுவனம் வெளியிட்டது.

மெக்கென்ஸி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் சுருக்கமான வடிவம் இதுதான்.

* வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்கு மிகவும் குறைவாக இருக்கிறது. ஆசியா பசிபிக் பகுதியில் பெண்களின் பங்களிப்பை உயர்த்து வதன்மூலம் 2025-ம் ஆண்டில் இந்த பிராந்தியத்தில் 4.5 லட்சம் டாலர் அளவுக்கு ஜி.டி.பி மதிப்பை உயர்த்த முடியும். இந்தியாவில் பெண்களின் பங்களிப்பை உயர்த்துவதன் மூலம் 77,000 கோடி டாலர் அளவுக்கு ஜி.டி.பி மதிப்பு உயரும். இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பு 25 சதவிகிதம்தான். இந்திய ஜி.டி.பி-யில் பெண்களின் பங்களிப்பு 11 சதவிகிதம்தான். இது மிகவும் குறைவு.

* கீழ்நிலைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருந்தாலும், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராவது இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் இயக்குநர் குழு அளவில் பெண்களின் பங்களிப்பு ஒப்பீட்டு அளவில் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.

* பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆண்களின் வருமானம் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கான காரணங்கள் குறைவாக இருக்கிறது. தவிர, எங்கு வேண்டு மானலும் வேலை செய்ய வேண்டிய சூழல், நேரம், பெண்களுக்கான முன்உதாரணம் இல்லாமல் இருப்பது உள்ளிட்ட சில காரணங்களால் பெண்களின் பங்கு குறைவாக இருக்கிறது.

* பெண்களின் பங்களிப்பை உயர்த்த வேண்டுமெனில், அரசாங்கமும் நிறுவனங்களும் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பெண் தொழில்முனை வர்களை ஊக்குவிப்பது, பணியிடத்தில் பெண்களின் உரிமை, பாதுகாப்பை உறுதிசெய்வது உள்ளிட்ட விஷயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

* நிறுவனங்களும் பெண்களை வேலைக்கு எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தவிர, பெண்களின் மதிப்பீட்டை வேலை நேரத்தின் அடிப்படையில் முடிவு செய்யக்கூடாது. எப்போது வருகிறார்கள், எப்போது கிளம்பு கிறார்கள், எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்னும் அடிப்படையில் வரையறை செய்யாமல், பணி திறமை எப்படி இருக்கிறது, வேலையைச் சிறப்பாக செய்கிறார்களா என்பதன் அடிப்படை யில் முடிவு செய்ய வேண்டும் என மெக்கென்ஸி நிறுவனத்தின் பிரதிநிதி குறிப்பிட்டார்.

காக்னிசென்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லஷ்மி நாராயணன் இது தொடர்பாக பேசினார்.

‘‘ஒரு நாட்டின் வளர்ச்சியைக் குறிப்பிட ஜி.டி.பி மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றைக் கணக்கிடுகிறோம். தற்போதைக்கு இவைதான் சரியான ஒப்பீடாக இருந்துவருகிறது. ஆனால், இவை மட்டுமே போதுமான என்பதைப் பரிசீலனை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது.

தனிநபர் வருமானத்தைப் பொறுத்தவரை, வளர்ந்த நாடுகளில் பெரிய வித்தியாசம் இருப்ப தில்லை. உதாரணமாக, அமெரிக்காவில் அதிகம் வளர்ச்சியடைந்த மாகாணத்தின் தனிநபர் வருமானத்துக்கும் வளர்ச்சி குறைந்த மாகாணத்தின் தனிநபர் வருமானத்துக்கும் இடையேயான வித்தியாசம் 2.5 மடங்குதான். அதனால் இந்தியாவில் தனிநபர் வருமானத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கோவா, கேரளா ஆகிய மாநிலங்களின் தனிநபர் வருமானத்துக் கும், பீகார், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங் களின் தனிநபர் வருமானத்துக்கு இடையேயான வித்தியாசம் 9 முதல் 11 மடங்காக இருக்கிறது.

கேரளாவில் தனிநபர் வருமானம் அதிகமாக இருப்பதற்கு கல்வி முக்கியமான காரணம், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப் பட்டுள்ளதுதான். அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக 45 லட்சம் பெண்கள் வேலைகளில் உள்ளனர். அதனால் தனிநபர் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்றால் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

மேலும், ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த மாநிலத்தில் குறைவாக இருக்கிறது. அதனால் அனைத்து பிராந்தியத்திலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

இப்போதே பெண்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையெனில், வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்னும் கேள்வி இயல்பானதே. ஆனால், எதிர்காலத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சியடையும்போது, வேலையில் ஒரு சமத்துவம் உருவாகும். ஆண்களுக்கான பிரத்யேக சாதகங்கள் இல்லாமல் போகும். அனைவரும் சமம் என்னும் நிலைமை உருவாகும். சர்வதேச அளவில் டிரோன் பைலட் பிரிவில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் தொழில்நுட்ப மாற்றத்தால் பெண்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். இருப்பினும் அனைத்துப் பெண்களுக்கும் ஏற்ற வகையில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். அது இடஒதுக்கீடு அல்லது அரசாங்க ஆணை மூலம் அல்லாமல் இயல்பாக இருக்க வேண்டும். இதுகுறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும்’’ என்றார்.

லஷ்மிநாராயணன் பேசியதைத் தொடர்ந்து மெக்கென்ஸி குழு, மற்றும் பெண் தொழில்முனை வர்கள் இதுகுறித்து விவாதித்தார்கள். குழு விவாதத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள் இனி...

நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு எடுப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். அதற்காக பெண்களுக்கு இட ஒதுக்கீடோ அல்லது பெண் என்னும் பரிவோ தேவையில்லை. ஒரு வேலையில் பெண்ணைத் தேர்வுசெய்ய முடிந்தால், அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் இவ்வளவு பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என நிறுவனங்கள் தங்களுக்கு தாங்களே இலக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

பெண்கள் பணிபுரிவதற்கு இருக்கும் தடைகளை நீக்க வேண்டும். நேரம், பணிச்சூழல் ஆகியவை மேம்பட வேண்டும். அதைவிட பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றின்போது பெண் அலுவலகத்தில் இருந்த நேரத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், பெண்ணின் பணியைப் பொறுத்து மதிப்பிட வேண்டும்.

பெண் தொழில்முனைவர்கள் உருவாக வேண்டும். அப்போது பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தவிர, பெண்கள் தொழில் தொடங்குவதற்குப் பல சலுகைகளை அரசு வழங்கியிருக்கிறது. இதனைத் தெரிந்துகொள்ள வேண்டும் எனப் பரிந்துரைத்தார்கள். சமநிலை யின் வலிமையைக் கவனத்தில்கொண்டு அரசு களும் நிறுவனங்களும் தங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

- வாசு கார்த்தி, படங்கள்: வீ.நாகமணி