Published:Updated:

ஆச்சர்யமும் ஆளுமையும்: 5 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 10 அசத்தல்கள்!

ஆச்சர்யமும் ஆளுமையும்: 5 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 10 அசத்தல்கள்!
ஆச்சர்யமும் ஆளுமையும்: 5 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 10 அசத்தல்கள்!

ஆச்சர்யமும் ஆளுமையும்: 5 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 10 அசத்தல்கள்!

இந்த இதழ் அவள் விகடன்:  https://bit.ly/2AEYk8f

ஆச்சர்யமும் ஆளுமையும்: 5 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 10 அசத்தல்கள்!

தொன்மையான கலாசாரம், அழகிய கட்டடக்கலை, அருமையான சமையல்... அனைத்துக்கும் பெயர்பெற்ற செட்டிநாட்டு ஊர்களுள் ஒன்று நெற்குப்பை. சோமலெ, தமிழண்ணல் போன்ற தமிழறிஞர்கள் பிறந்த மண். இங்கு, ஒரு குடும்பத்தின் வாரிசுகள் அனைவரும், கிட்டத்தட்ட 75 பேர் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக பொங்கல்வைத்துக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

நெற்குப்பையில் `ராம.சா.ராம' குடும்பம் என்று அழைக்கப்படும் குடும்பத்தின் சகோதரர்கள் நால்வர். இவர்களின் வழிவந்த பிள்ளைகள், பேரன்மார்கள், அவர்களின் குடும்பத்தினர் என 28 குடும்பங்கள் சேர்ந்த பெரிய வீடு அது.  இந்த மெகா பொங்கல் கொண்டாட்டத்துக்கான வித்தை விதைத்தவர்கள் சென்னை, திருவொற்றியூரில் இருக்கும் கரு.சுந்தரம் - வசந்தா சுந்தரம் தம்பதி...

ஆச்சர்யமும் ஆளுமையும்: 5 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 10 அசத்தல்கள்!

"இந்த வருஷம் எங்க குடும்பத்தினரைவிட, எங்க பொங்கல் விழாவைப் பார்த்து ரசிக்க வரும் ஊர்ப் பிரமுகர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்போல! இதுதான் டாக் ஆஃப் தி கிராமம்! நீங்களும் வந்துடுங்க" என்று செட்டிநாட்டுக்கே உரிய விருந்தோம்பலுடன் அழைத்தார் நித்யா.

- ஆச்சரியமும் இனிமையும் ஊட்டும் அருமையான பின்புலத்தை விவரிக்கிறது 'ஒரு வீடு, 24 குடும்பங்கள், மெகா பொங்கல்!' எனும் கவர் ஸ்டோரி.

ஆச்சர்யமும் ஆளுமையும்: 5 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 10 அசத்தல்கள்!

இந்த உலகத்துல நிறைய நல்ல மனிதர்கள் இருக்காங்க. நாம சந்திக்கிற ஒவ்வொருத்தரும் நமக்கு ஏதோ பாடம் கத்துக்கொடுத்துட்டுப் போவாங்க. இந்தப் புத்தகம் எழுதினது மூலமா  இந்தப் பெண்களின் அனுபவங்கள்லேருந்து நான் அப்படி நிறைய பாடங்கள் கத்துக்கிட்டேன்" - கனவுகளைத் துரத்தியவர்களை விரட்டிப்பிடித்த கதை சொல்லும் ஷோபா, புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் 14 பெண்களுக்கும் ஓர் ஒற்றுமை இருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்.

"அத்தனை பேருக்கும் கனவுகள் இருந்திருக்கு. அந்தக் கனவுகள் விரட்டியிருக்கு.  ஆனா, பலருக்கும் அந்தக் கனவுகள் இருந்ததே தெரிஞ்சிருக்கலை. எதிரில் வந்த தடைகளைத் தகர்த்தெறிஞ்சிட்டுதான் கனவுகளை நனவாக்கியிருக்காங்க.."

- பிரபல பத்திரிகையாளர் ஷோபா வாரியரின் 'ட்ரீம் சேஸர்ஸ்' புத்தகம் கனவுகளால் விரட்டப்பட்டவர்களின், வெற்றிபெற்றவர்களின் அனுபவத் தொகுப்பு. 'ஒரு விஷயம் குறித்து நம்மால் கனவு காண முடிகிறது என்றால் அதை அடையவும் முடியும்' என்பதையே அத்தனை பெண்களின் வாழ்க்கைக் கதைகளும் சொல்கின்றன. புத்தகம் எழுதியதன் பின்னணி முதல் 'ட்ரீம் சேஸர்'ஸின் மூன்றாம் பாக வேலைகள் வரை எண்ணங்கள் பகிர்கிறார் ஷோபா வாரியர். 'கனவு காண முடிகிறது என்றால் அதை அடையவும் முடியும்!' எனும் அவரது அனுபவப் பகிர்வைத் தவறவிடாதீர்கள். 
 

ஆச்சர்யமும் ஆளுமையும்: 5 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 10 அசத்தல்கள்!

சுனிதாவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட கொடூர விபத்து அது... முகம் இருக்கவேண்டிய இடத்தில் ஒரு வட்டம், அதன் நடுவில் சுவாசிக்க இரண்டு துளைகள்... மழிக்கப்பட்ட தலை, நொறுங்கிப்போன பற்கள், மொத்தத்தில் உருக்குலைந்துபோன தோற்றம், 25 வயதில் 27 அறுவை சிகிச்சைகள்... விலகிப்போன நட்புகள், வெறுத்து ஒதுக்கிய சுற்றம்... இத்தனைக்குப் பிறகும் பீனிக்ஸ் மனுஷியாக எழுந்து நின்றிருக்கிறார் சுனிதா அடினஸ். 

ஓசூரில் `ஐபிஎம்'மில் சர்வீஸ் மேனேஜராக இருக்கும் சுனிதாவை சூப்பர் வுமன் எனக் கொண்டாடலாம். சுனிதாவுடன் ஐந்து நிமிடங்கள் உரையாடினால் போதும்... வாழ்வின்மீது பேரன்பும் பெரும் நம்பிக்கையும் பிறக்கும் யாருக்கும்...

"...'நானே பெரிய கஷ்டத்துல இருக்கேன். எவ்வளவு நாள் உயிரோடு இருப்பேன்னே தெரியலை. என்ன வேணா ஆகலாம். ஓரளவு செட்டிலான பிறகு யோசிக்கலாம். அதுவரைக்கும் ஒரு ஃப்ரெண்டா என்கூடவே இரு. வாழ்க்கை எப்படியிருக்குனு பாரு'னு சொன்னேன். கொஞ்ச நாள் கழிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்..."

- உறவுகள்... உணர்வுகளின் மேன்மையை தன்னம்பிக்கையுடன் சேர்த்துப் பகிரும் சுனிதா அடினஸ் குறித்த 'கீழே விழுவோம்... எழுந்திருக்கத் தெரிஞ்சிருக்கணும்... அதுதான் வாழ்க்கை!' சிறப்புச் செய்திக் கட்டுரை மகத்தான அனுபவம் தரக் கூடியது. 

ஆச்சர்யமும் ஆளுமையும்: 5 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 10 அசத்தல்கள்!

> ஆங்கில இணையதளப் பத்திரிகையாளர் அனு பூயான், மணிப்பூர்  மாநிலத்தில் நடந்த போலி என்கவுன்டர்கள் குறித்து ஆய்வுசெய்து கட்டுரை வெளியிட்டதற்காக 2018-ம் ஆண்டுக்கான சிறந்த பத்திரிகையாளர் விருதினைப் பெற்றவர். அத்தகைய துணிச்சலான பத்திரிகையாளர்,  சக ஆண்  பத்திரிகையாளரான மயாங் ஜெயினால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதை வெளிப்படையாக முன்வைத்தார். 

> கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் சுயசரிதையை எழுதிய 30 ஆண்டுக்கால பத்திரிகையாளர் சாரதா உக்ராவுக்கு, இந்தியப் பத்திரிகைத்துறையில் தனி இடம் உண்டு. விளையாட்டுத்துறையில்  வீராங்கனைகளுக்கு எதிராக நடந்தேறும் பாலியல் வன்முறைகளை, தொடர்ந்து அம்பலப்படுத்துகிறார் சாரதா. பிசிசிஐ செயலதிகாரி ராகுல் ஜொக்ரி மீதான பாலியல் புகார்கள் முறையாக விசாரிக்கப் படவில்லை எனத் தைரியமாக எழுதினார்...

- தினமும் தலைப்புச் செய்தி கொடுக்கும் பத்திரிகையாளர்களே தலைப்புச் செய்தியாகும் நிகழ்ச்சியும் அவ்வப்போது அரங்கேறும். பெண்ணுரிமை குறித்தும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் குறித்தும் தினம் தினம் எழுதிக்கொண்டிருந்த பெண் பத்திரிகையாளர்கள் 2018-ம் ஆண்டில் திடீரென தாங்களே அத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்வதைப் பகிரங்கமாகத் தலைப்புச் செய்தியாக்கினார்கள். அந்தப் பட்டியலை கச்சிதமாகத் தொகுத்திருக்கிறது 'உயிருக்கும் மேலாக பணியை நேசிக்கும் பெண்கள்!' எனும் செய்திக் கட்டுரை. 

ஆச்சர்யமும் ஆளுமையும்: 5 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 10 அசத்தல்கள்!

2005-ம் ஆண்டு, கற்பு குறித்து நான் கூறிய கருத்தைப் பலரும் பலவிதமா புரிந்துகொண்டு, அதைப் பெரும் பிரச்னையாக்கினார்கள். அது இந்தியா முழுக்கப் பரவியது. நிறைய அச்சுறுத்தல்கள், வார்த்தைக் கணைகள், வழக்குகளை எதிர்கொண்டேன். அதுவரை மக்கள்கிட்ட நான் சம்பாதிச்சு வெச்சிருந்த அன்பையெல்லாம் அழிக்கிற வகையில, எனக்கு எதிராகப் பலரும் பலவிதமாகச் செயல்பட்டாங்க. என்னை ஒடுக்கணும்னு நினைச்சாங்க. ஆனா, நான் யாரையும் நாடிப் போகலை. காரணம், நான் தவறா எதையும் பேசலை. அதைவிட முக்கியம், என் கருத்தில் கடைசிவரை உறுதியா இருந்தேன். சமூகத்துல இன்னும் தைரியமா செயல்படணும், அரசியல்ல ஈடுபடணும்னு முடிவெடுத்தது அந்தத் தருணத்துலதான்...

- தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80'ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் புதிய தொடரில் தன் அனுபவத்தை அப்படியே பகிர்ந்திருக்கிறார் குஷ்பு.

ஆச்சர்யமும் ஆளுமையும்: 5 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 10 அசத்தல்கள்!

"இனி எல்லாமே வளர்ச்சிதான்னு நினைச்சுடாதீங்க. இதுதான் ரொம்பச் சவாலான காலகட்டம்" என்கிற ஜெயலட்சுமி, தோல்வியின் விளிம்புக்குச் சென்று, அபார நம்பிக்கையுடன் மீண்டு வந்திருக்கிறார். "30 ஊழியர்கள் இருந்தாங்க. ஆர்டர்களும் வந்துட்டு இருந்தது. ஆனா, வருவாயைவிட உற்பத்திச் செலவு அதிகம். மேலும், அந்நியச் செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையில்லாத தன்மைனு புதுப்புதுச் சிக்கல்கள். இதனால, 50 லட்சம் ரூபாய் வரை கடன் சுமை ஆகிடுச்சு. வீட்டுக்கடன், சொத்துக்கடன்னு பல வகையிலும் கடன்சுமை தலையை இறுக்கும் அளவுக்குப் பண நெருக்கடி" என்று சொல்லும் ஜெயலட்சுமி, இவ்வளவு பிரச்னைகளையும் எப்படிச் சமாளித்தார்?

“ரொம்ப இக்கட்டான சூழல், பெரிய சுமையாகத்தான் இருந்துச்சு. ஆனா, நஷ்டம் வரலை. நஷ்டம்னு பிசினஸையே கைவிட்டுட்டுப் போனால், கடனை அடைக்கவே வாழ்வின் பெரும் பகுதி வேறு நிறுவனங்கள்ல ஊழியரா உழைக்கணும். அப்பவும் சிக்கல் எளிதில் சரியாகிடாது. 'இந்தத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை, இதிலேயே சரிசெய்யணும்; லாப பாதைக்கு வந்தாகணும்'னு முடிவெடுத்தேன்.."

- 'தொழிலாளி to முதலாளி' புதிய தொடரில் தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் வரிசையில், சென்னையைச் சேர்ந்த தோல் பொருள்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான 'சாஸ்தா லெதர் கிராஃப்ட்ஸ்'ஸின் உரிமையாளர் ஜெயலட்சுமி தன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஆச்சர்யமும் ஆளுமையும்: 5 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 10 அசத்தல்கள்!


'உங்க குடும்பத்தின் நெட் வொர்த் என்ன?'

'நெட் வொர்த்தா? அப்படீன்னா?'

'குடும்பத்தின் மாதச் சேமிப்பு எவ்வளவு?'

'அதெல்லாம் என் கணவருக்குத்தான் தெரியும்.'

'சேமிப்பை எப்படி முதலீடு செய்கிறீர்கள்?'

'என் கணவர்தாங்க அதெல்லாம் பாக்கறார்.'

'உங்க கணவருக்கு எவ்வளவு ஆயுள்காப்பீடு இருக்கு?'

'தெரியலீங்க... எல்.ஐ.சி-யில ஏதோ பாலிசி எடுத்திருக்கார். என் பேர்ல, பிள்ளைங்க பேர்லகூட இருக்கு. மத்த விவரமெல்லாம் அவருக்குத்தான் தெரியும்.'

'சரி, உங்க வங்கிக் கணக்கின் ஆன்லைன் பாஸ்வேர்டு தெரியுமா?'

'தெரியாது. அவர் சொல்லவும் இல்லை. எனக்கும் கேக்கணும்னு தோணலை.'

- இந்தியாவில் பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான். இவர்களிடம் கேட்க இன்னொரு கேள்வி இருக்கிறது. 'எதிர்பாராவிதமாக கணவருக்கு  ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்துவிட்டால்... உங்கள் பிள்ளைகள் தலையெடுக்கும்வரை அடுத்த 15 - 20 ஆண்டுகளுக்கு எப்படிக் குடும்பம் நடத்துவது? யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?' இந்தக் கேள்வியையே பெண்கள் அபசகுனமாக நினைத்துப் பதறுவார்கள். பின்னர் இதற்கு விடை காண முயற்சி செய்வது எப்படி? 

-  பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பு இன்னமும் பேசாப் பொருளாகவே இருந்து வருகிறது. அதையும் பெண்கள் அறிந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறுவதுடன் உரிய வழிகாட்டுதலை வழங்குகிறது 'இன்றே நீங்கள் அறிய வேண்டிய அவசியமான விஷயங்கள்!' எனும் கட்டுரை.

ஆச்சர்யமும் ஆளுமையும்: 5 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 10 அசத்தல்கள்!


”காதலின் பிற்போக்குதனங்களைக் கண்டிக்கிற இதேநேரத்தில், முற்போக்கு என்று கூறிக்கொண்டு சிலர் செய்துவரும் காரியங்களும் எனக்குப் பயத்தை ஏற்படுத்துகிறது. லிவிங் டுகெதர் என்கிற நிலையிலிருந்து அடுத்தகட்டமாக இப்போது ஃப்ளிங் ரிலேஷன்ஷிப்பில் வந்து நிற்கிறார்கள் சிலர். இது என்ன மாதிரியான உறவு... வெறுமனே உடல்சார்ந்த தேவைகளுக்காக மட்டுமே சுயநலமாக இருவர் சேர்ந்து வாழ்வதும், தேவை தீர்ந்த பின்னர் இருவரும் வெவ்வேறு வழியில் பிரிந்து செல்வதுமான இந்த வாழ்க்கையை எந்தவகையில் சேர்ப்பதென்றே தெரியவில்லை!"

- 'என் காதல் சொல்ல வந்தேன்' பகுதியில் தன் பப்பி லவ் முதல் மெச்சூர்டு காதல் வரை அனுபவங்களைப் பகிரும் சின்னதிரை நாயகி ஃபரினா, காதலின் பரிமாணங்கள் குறித்த தன் பார்வையும் பதிவு செய்திருக்கிறார். 

ஆச்சர்யமும் ஆளுமையும்: 5 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 10 அசத்தல்கள்!

கறிவேப்பிலை குழம்பு

தேவை:  கறிவேப்பிலை – 2 கப், சின்ன வெங்காயம் – கால் கப், பூண்டு - 10 பல், சீரகம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10, மிளகு – அரை டீஸ்பூன், தேங்காய்ப்பல் – 2 டேபிள்ஸ்பூன்  புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு  மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்  எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க:  கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன்.

செய்முறை:  ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு சீரகம், காய்ந்த மிளகாய், மிளகை வறுத்து எடுத்துக்கொள்ளவும். இவற்றுடன் புளி, கழுவிய கறிவேப்பிலை, தேங்காய்ப்பல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பூண்டு, வெங்காயம் தோல் நீக்கி, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் மீண்டும் எண்ணெய்விட்டு தாளிப்புப் பொருள்களைத் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். சற்று வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்துவரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

- இதுபோல் அசத்தலான 30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பிகளை சமையல் இணைப்பில் தந்திருக்கிறார் லக்‌ஷ்மி வெங்கடேஷ். 

ஆச்சர்யமும் ஆளுமையும்: 5 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 10 அசத்தல்கள்!

மார்கழி மாதத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்று, வாசல்தோறும் பூத்துக்கிடக்கும் வண்ணக்கோலங்கள். அந்தக் கோலங்களுக்கான கலர் பொடி தயாரிக்கும் மக்களின் வாழ்க்கைக் கோலத்தைப் பார்வையிடுவதற்காக, கலர் கோலப்பொடி தயாரிக்கப்படும் திண்டிவனம் அருகே உள்ள இருதயபுரம் கிராமத்துக்குச் சென்றோம். கேமராவைப் பார்த்ததும், 'யாரு, என்ன எழுதி எங்க பொழப்பு விடியப்போகுது? எதுவும் வேணாம்...' என்று அந்த ஊர்ப் பெண்கள் விரக்தியுடன் பேசினார்கள். நாம் காத்திருக்க, சிறிதுநேரம் கழித்து மௌனம் உடைத்தார்கள்.

“நாலு தலைமுறையா கோலப்பொடி தயாரிக்கறதுதான் எங்களுக்குக் குடும்பத் தொழில். இதுல கிடைக்குற காசு வாயிக்கும் வயித்துக்குமே போதலைன்னாலும், எங்களுக்கு வேற வழியும் தெரியல" எனச் சொல்லும்போதே கண்கள் கலங்கி அமைதியாகிறார் ஆரோக்கியமேரி. “அக்கா... போயி வியாபாரத்தைப் பாரு. அழுது எதுவும் மாறப்போறதில்ல" என்று அவரைச் சமாதானப் படுத்தி பேச ஆரம்பித்தார் சுகன்யா...

- கோலங்களுக்கான கலர் பொடி தயாரிப்போரின் வாழ்க்கைக் கோலம் குறித்த கள நிலவரத்தை நேரடி அனுபவமாகத் தருகிறது 'மார்கழி மாசம்தான் எங்களுக்குத் தீபாவளி!' எனும் செய்திக் கட்டுரை.

இந்த வார அவள் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2M13v6O

அடுத்த கட்டுரைக்கு