Published:Updated:

என் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை!

என் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
என் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை!

என் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை!

என் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை!

என் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை!

Published:Updated:
என் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
என் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை!

சென்ற வாரம் செய்திகளிலும் விவாதங்களிலும் அதிகம் இடம்பெற்ற பெயர்களில் ஒன்று ம.ஆ.சிநேகா. ‘சாதி, மதமற்றவர்’ என்று சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் என்பதாலேயே கவனம் குவித்தவர். பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும்போது, ‘சாதி, மதம் குறிப்பிட விருப்பமில்லை’ என்று எழுதுவதற்கான உரிமை தமிழகப் பெற்றோர்களுக்கு உண்டு. ஆனால் ‘சாதி, மதமற்றவர்’ என்று ஒருவருக்குச் சான்றிதழ் அளிக்கப்படுவது இதுதான் முதல்முறை.   

என் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை!

சிநேகாவின் இந்த முற்போக்கு முடிவுக்குக் காரணம், அவரது குடும்பப் பின்னணி. தாய் மணிமொழி, தந்தை ஆனந்தகிருஷ்ணன் இருவருமே சாதி, மதத்தில் நம்பிக்கையற்ற முற்போக்காளர்கள். மூன்று மகள்கள். மூவருக்குமே வெவ்வேறு மதப்பெயர்கள்.

சிறுவயதிலிருந்தே தாய்ப்பாலுடன் சாதியுணர்வை ஊட்டி வளர்க்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் சிநேகாவின் தாய் மணிமொழி, ஓர் அபூர்வ அம்மா.

 “என் குழந்தைகளுக்குச் சாதி, மதம் இல்லைன்னு குறிப்பிட்டுத்தான் பள்ளியிலே சேர்த்தோம். இதனால நிறைய சிக்கல்களைச் சந்தித்திருக்கிறோம். சாதிவிவரம் சொல்லியிருந்தா, இட ஒதுக்கீட்டில சிநேகா நீதிபதியாகியிருப்பா. அப்படி வர்ற பதவி தேவையில்லைன்னு அவ சொல்லிட்டா” எனப் பெருமிதத்தோடு பேசுகிற மணிமொழி, 1982-ல் டாக்டர்.அவ்வை நடராஜன் தலைமையில் தாலியணிந்து சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டவர். பிறகு ‘தாலி என்பது ஆணாதிக்கம் அணிவிக்கும் விலங்கு’ என்பதை உணர்ந்து, பின்னாளில் தாலியைக் கழற்றிவிட்டார்.

பிரியம் காட்டி வளர்த்த, பெற்ற மகளையே சாதித் தூய்மை காக்க ஆணவக்கொலை செய்யும் அப்பாக்களுக்கு மத்தியில், முற்போக்கு முகம் காட்டும் சிநேகாவின்  தந்தை ஆனந்தகிருஷ்ணன், தமிழ்ச்சமூகத்திற்கான நல்லுதாரணம்; முன்னுதாரணம்!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை!

“சிலபேர், இது இட ஒதுக்கீட்டை பாதிக்குமேன்னு சொல்றாங்க. நாங்க எப்பவுமே இட ஒதுக்கீட்டு ஆதரவானவங்க. ஆனால் சாதி, மதமற்றவள் என்று இந்தச் சமூகத்தில் அடையாளப்படுத்திக்கிறதும் அதுக்கான அதிகாரபூர்வ அங்கீகாரம் கிடைக்கிறதும் முக்கியமான விஷயம்னு நினைக்கிறோம்” என்கிறார். இவரும் இவரின் சகோதரர்களும் அன்றைய முதல்வர் ஜெயலலிதா தஞ்சையில் நடத்திய உலகத்தமிழ் மாநாட்டுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்கள். இந்த இணையரின் முதல் மகள் பெயரை அறிந்தவர்கள், ‘மதம்வேணாம்னு சொல்லிட்டு, இந்துமதப் பெயரை வச்சிருக்கியே’ எனக் கூற, அடுத்து பிறந்த குழந்தைகளுக்கு இந்த இணையர் சூட்டிய பெயர்கள், ‘மும்தாஜ் சூரியா’, ‘ஜெனிஃபர்.’
 
“தெலங்கானா போலீஸ் கஸ்டடியில் இறந்த போராளி சிநேகலதா நினைவாகத்தான் அப்பா எனக்குப் பெயர் வைச்சார்” - எனச் சொல்லும் சிநேகா. பெயரைச் சொல்வதன் வழியாகவே இந்தக் குடும்பம் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. சிநேகாவுக்கும் திருப்பத்தூரைச் சேர்ந்த பேராசிரியரும் நாடகக் கலைஞருமான பார்த்திபராஜாவுக்கும் சீர்திருத்தத் திருமணத்தை நடத்தி வைத்தவர், கவிஞர் இன்குலாப்! சிநேகாவின் இணையர் பார்த்திபராஜா, ஏறத்தாழ 10,000 நூல்களைச் சேகரித்து, திருப்பத்தூரில் தான் பணிபுரியும் கல்லூரியில் மாமேதை அம்பேத்கர் பெயரிலே சொந்த நூலகம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.  “சட்டக்கல்லூரியில சிநேகா படிக்கும்போது அவங்க அப்பா அம்மா நாடகம் பார்க்க வருவாங்க. ரெண்டு பேருக்கும் என்னைப் பிடிச்சிருச்சு. கருத்தியல் பொருத்தம்தான், எங்கள் காதலுக்கு முதல் காரணம்” என்கிறார் பார்த்திபராஜா.

பெயர்வழியான பிரசாரம் அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது, “எங்களுக்கு மூன்று குழந்தைகள். பகவான் புத்தர், தாத்தா அம்பேத்கர், பெரியார்னு பெரியவங்களோட வாழ்க்கையைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர்றோம்” என்பவர்கள், தமது பிள்ளைகளை அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்த்திருக்கின்றனர். ஆதிரை  நஸ்ரின் 6-ம் வகுப்பும், ஆதிலா ஐரின் 2-ம் வகுப்பும், ஆரிஃபா ஜெஸ்ஸி யூ.கே.ஜி-யும் படிக்கின்றனர். பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவப் பெயர்கள் இவை.

“ரயிலில் பயணிக்கிறப்போ பக்கத்தில இருக்கிறவங்க நல்லா பேசத்தொடங்கி, பேரைக் கேட்பாங்க. பிள்ளைங்க பெயரையும் சேர்த்துச் சொல்வேன். வித்தியாசமா முழிப்பாங்க. காரணங்களை சத்தமா பேசி விளக்குவேன். பேச்சை கம்பார்ட்மென்ட்டே கவனிக்கும். இறங்கும்போது, கூட்டிப்போக வந்த கணவரை அறிமுகம் செய்துவைப்பேன். ஜன்னல் வழியே எல்லோரும் கையசைப்பாங்க.” பெயர் வெறும் பெயர் அல்லவே என, தான் போகுமிடமெங்கும் பொழிப்புரை நிகழ்த்துகிறார், சிநேகா.

எப்படியோ சாதி, மத ஒழிப்பைத் தமிழ்ச்சமூகத்தில் பேசுபொருளாய் மாற்றியிருக்கும் சிநேகா, மானுடம் காக்கும் மகத்தான நகர்வு ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.

மு.முத்துக்குமரன் - படங்கள்: ச.வெங்கடேசன்

இட ஒதுக்கீட்டை பாதிக்குமா? 

சி
நேகாவின் இந்தச் செயல் நிச்சயமாய் ஒரு மைல்கல்தான். வாழ்த்துகள். ஆனால், சாதியின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட இழிவை, சாதியின் பெயரால்தான் துடைத்துக்கொள்ள முடியும். பறிக்கப்பட்ட உரிமையையும் அதன்வழிதான் பெறமுடியும். சிநேகா செய்ததை எல்லோரும் செய்வார்கள் என்றால் அதுவே பொதுப்போட்டிக்கு அடிக்கோலிட்டுவிடும். மாறாக, சாதியற்றவருக்கு, சாதிமறுப்புத் திருமணம் செய்தவருக்குத் தனி இட ஒதுக்கீடு தேவை. இதனால் சாதியக் கட்டமைப்பு காலப்போக்கில் காணாதுபோய்விடும்.”
 
- சுப.வீரபாண்டியன்    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism