Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பிரீமியம் ஸ்டோரி
பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

கின்னஸ் சாதனை படைத்த 7,000 நாட்டியக் கலைஞர்கள்!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

சிதம்பரம் நடராஜர் கோயிலின் நாட்டியாஞ்சலி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7,000 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற கின்னஸ் முயற்சிக்கான குழு நடனம் நடைபெற்றது. பிரபல பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். ஐந்து முதல் 40 வயது வரையிலான கலைஞர்கள் 7,190 பேர் கலந்து கொண்டனர். இதற்கு முன் சென்னையில் 2017-ம் ஆண்டு, குழுவாக பரதநாட்டியம் ஆடிய நிகழ்ச்சியில் 4,525 பேர் கலந்துகொண்டதே கின்னஸ் சாதனையாகப் பதிவாகியிருந்தது.

ஐந்து நிமிடங்களேனும் தொடர்ச்சியாக ஆட வேண்டும் என்பது விதி. இந்தக் கலைஞர்களோ 14 நிமிடங்கள் ஆடி அசத்திவிட்டனர். 100 பங்கேற்பாளர்களுக்கு ஓர் ஒருங்கிணைப்பாளர் வீதம் நியமிக்கப்பட்டு, சில மாதங்களாகப் பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் கலைஞர்கள் வந்திருந்தனர்.

கலைஞர்களுக்குக் கனிவான வாழ்த்துகள்!

சுகாதார மேம்பாட்டில் சாதனை படைக்கும் தமிழ்ப் பெண்!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

புதிதாக உருவாக்கப்படும் ஒரு துறையின் தலைமை விஞ்ஞானியாக, சௌமியா சுவாமிநாதனை உலக சுகாதார நிறுவனம் நியமித்திருக்கிறது. ஏற்கெனவே, அந்த நிறுவனத்தின் துணைப் பொது இயக்குநர் பதவியைக் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வகித்துவந்தார் இவர். அந்தப் பதவியை வகித்த முதல் இந்தியப் பெண் என்கிற பெருமையையும் பெற்றார். ``எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பு, உலக சுகாதார நிறுவனத்தின் அடிப்படைப் பணிகளைப் பலப்படுத்தவும் பொது சுகாதாரத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், மருத்துவ நன்னெறியைப் பின்பற்றி மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளவும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுகாதார மேம்பாட்டுக்கு அடிக்கோலிடவும் உதவும்'' என்று தெரிவித்திருக்கிறார் சௌமியா.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்தப் புதிய பிரிவு, டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் புதுமைமூலம் பிற அறிவியல் புதுமைகள் மற்றும் முன்னேற்றத்துக்கு ஈடுகொடுத்து இயங்கும். மருத்துவ மேல்படிப்பு பயின்றிருக்கும் சௌமியா, காசநோய் மற்றும் ஹெச்.ஐ.வி பற்றிய ஆய்வு மற்றும் விழிப்புணர்வு திட்டங்களில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள்!

பதினாறடி பாயும் மகள்!

எல்.ஜி.பி.டி.க்யூர் மக்களுக்கான தனி மருத்துவமனை!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

லகம் முழுவதும் உள்ள எல்.ஜி.பி.டி.க்யூர் (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer) மக்கள் தொடர்ச்சியான மனித உரிமை மீறல் மற்றும் பாகுபாட்டுக்கு உள்ளாகிவருகின்றனர். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. முதன்முறையாக, மும்பை நகரில் இதுபோன்ற மக்கள் ஹெச்.ஐ.வி-க்கான இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ள தனி `ஆர்ட்' (ஆன்டி ரெட்ரோவைரல் தெரப்பி) சென்டர் மார்ச் 8 அன்று திறக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாகத் தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கையர் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றிவரும் `ஹம்சபர் டிரஸ்ட்' தொண்டு நிறுவனம், இந்த மருத்துவமனையைத் தொடங்கி வைத்திருக்கிறது. ``எல்.ஜி.பி.டி.க்யூர் மக்களுக்கான தனிப்பட்ட மருத்துவமனையாக இயங்கும். ஆனால், ஹெச்.ஐ.வி பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள மக்களும் இந்த மருத்துவமனையின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்'' என்று டிரஸ்ட்டின் நிறுவனர் அஷோக் ராவ் கவி கூறியுள்ளார்.

ஆர்ட் சென்டரில் பணியாற்றும் மாலினி, ``சான்டா குரூஸில் உள்ள இந்த மையம், ஹெச்.ஐ.வி தாக்க அதிகம் வாய்ப்புள்ள மக்களுக்கு மிகவும் பயனளிக்கும். இங்கு தரப்படும் மருந்துகள் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம். மதியம் 12.30 முதல் இரவு 8.30 வரை இந்த மையம் செயல்படும். எல்.ஜி.பி.டி.க்யூர் மக்களைக்  குறித்த சமூகத்தின் தவறான புரிதல் மற்றும் அணுகுமுறை, அவர்களை இன்னும் அதிகம் பாதிக்கிறது. ஆகவே, அவர்களுக்கு அதற்கான ஆலோசனையும் வழங்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

சீரிய முன்னெடுப்பு!

மகளிர் மட்டும் குழுவின் விண்வெளி நடை!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

களிர் வரலாற்று மாதமான மார்ச் மாதத்தில், `மகளிர் மட்டும்' குழு ஒன்றை விண்வெளிக்கு அனுப்பி, விண்வெளி நடை ஒன்றை நிகழ்த்தவிருக்கிறது, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா. `எக்ஸ்பெடிஷன் 59' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நடையை வரும் மார்ச் 29 அன்று மூன்று பெண்களைக்கொண்டு நடத்துவது என்று தீர்மானித்திருக்கிறது. சுமார் 7 மணி நேரம் விண்வெளியில் நடைபெறவிருக்கும் இந்த நடையை, ஆன் மாக்லேன், கிறிஸ்டினா கோச், ஜாக்கி கேகி என்ற மூன்று பெண்கள் நிறைவேற்றவுள்ளனர். இவர்கள் தவிர, ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திலிருந்து இவர்களை வழிநடத்த உள்ள `பிளைட் கன்ட்ரோல்' குழுவில் பிளைட் இயக்குநர் மேரி லாரன்ஸ், நாசா பொறியாளர் கிர்ஸ்டென் பாக்சியோல் ஆகியோரும் உள்ளனர்.

``பெண்கள் மட்டுமே நடத்தப்போகும் விண்வெளி நடைக்கு உதவி வழங்கும் கன்சோலில், நான் இருப்பேன் என்பதை இப்போதுதான் அறிந்தேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்!'' என்று பாக்சியோல் எழுதியிருக்கிறார். செயற்கைக்கோள் அல்லது விண்கலத்தின் வெளிப்பகுதியில் ஏற்படும் சேதத்தை அறியவோ, அதைச் சரிசெய்யவோ இதுபோன்ற விண்வெளி நடைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாசாவின் இந்தப் புதிய முயற்சியைப் பற்றிப் பேசிய நாசாவின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன், ``செவ்வாய்க் கிரகத்தில் காலடி எடுத்து வைக்கப் போகும் முதல் மனிதன் என்ற பெருமையைப் பெண் ஒருவர் பெறப்போகிறார். அதேபோல, அடுத்து நிலவில் கால் வைக்கப்போவதும் பெண் ஒருவரே'' என்றும் கூறியுள்ளார்.

உயர உயரப் பறக்கும் பாவைகள்!

`நாரி சக்தி புரஸ்கார்' வென்ற தமிழகப் பெண்கள்

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

வ்வோர் ஆண்டும் சர்வதேசப் பெண்கள் தினமான மார்ச் 8-ம் தேதி, சாதனைப் பெண்களைப் பாராட்டி `நாரி சக்தி புரஸ்கார்' விருதை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் மார்ச் 8 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்தியா முழுவதுமிருந்து 44 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு குடியரசுத் தலைவர் கையால் விருதுகள் வழங்கப்பட்டன. விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், சூழலியல் ஆர்வலர்கள், விவசாயிகள், கட்டடத் தொழிலாளிகள், கலைஞர்கள், பெண் கமாண்டோ பயிற்சியாளர்கள் எனப் பல துறைகளைச் சேர்ந்த, வேறுபட்ட பொருளாதாரப் பின்னணி கொண்ட பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை ராஜன் கண் மருத்துவமனையின் செயல் இயக்குநர் சுஜாதா மோகனுக்கு கண் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கும், மக்களுக்கு சிறந்த கண் சிகிச்சை சென்று சேர உழைப்பதற்கும் இந்த விருது வழங்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த `ஹ்யூமேன் அனிமல் சொசைட்டி' என்கிற விலங்குகள் பாதுகாப்புக்காகப் பணியாற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மினி வாசுதேவனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. நிறுவனங்களுக்கான பிரிவில், தமிழ்நாடு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை விருது வென்றது. அரசின் `பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ' திட்டத்தைச் சரியான முறையில் முன்னெடுத்ததற்காகவே இந்த விருது.

-நிவேதிதா லூயிஸ்

சாதனை 'சக்தி'களுக்கு நம் அன்பும் வாழ்த்தும்!

 தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த தாய் சாந்தி லட்சுமியும் (47 வயது), அவரது மகளான தேன்மொழியும் (27 வயது), தமிழக அரசுப்பணி தேர்வாணையத்தின் குரூப்-4 பிரிவுக்கான தேர்வில் ஒரே நேரத்தில் வெற்றிபெற்று, அரசுப் பணியில் அமர்ந்துள்ளனர்!

 கரூர் மாவட்டம் சுக்காலியூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் நிறைமதி, அரசுப்பணி தேர்வாணையத்தின் குரூப்-1 பிரிவுக்கான தேர்வில் வெற்றிபெற்று, துணை ஆட்சியர் பணிக்கான ஆணையைப் பெற்றார். 2007-ம் ஆண்டு முதல் இதற்காகப் பயிற்சி எடுத்து வந்திருக்கிறார், இந்த தன்னம்பிக்கைப் பெண்மணி!

 மனைவியைக் கைவிட்ட 45 வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் ரத்து செய்திருப்பதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். இந்தப் பெண்கள் நலனுக் காக அவரது அமைச்சகம் கொண்டுவந்துள்ள சட்ட முன்வரைவு, நாடாளுமன்ற மேலவையில் தேங்கியிருப்பதாக வருத்தம் தெரிவித்தார் மேனகா.

 மத்தியப்பிரதேச அரசு, தன் முதல் மூன்றாம் பாலின அரசு அலுவலராக 36 வயது சஞ்சனா சிங்கை, சமூக நீதி மற்றும் ஊனமுற்றோர் நலத்துறை இயக்குநரின் செயலாளராக நியமித்துள்ளது.

 சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று மத்தியப்பிரதேச மாநிலத்தில், மகளிர் மட்டுமே பணியாற்றும் `பிங்க் ஸ்டேஷன்' ரயில் நிலையமாக ஜபல்பூர் மாற்றப்பட்டது.

 60-வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் பார்பி பொம்மை நிறுவனம், 20 சாதனைப் பெண்களின் மாதிரி பொம்மைகளை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா, கிரீஸ் நாட்டைச் சேர்ந்த நாசா விஞ்ஞானி எலெனி அந்தோனியாதோ, இத்தாலிய செஃப் ரொசான்னா மார்சியேல், போலந்தின் டிரக் ஓட்டுநர் ஐவோனா ப்லெசார்க்சிக் போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர். பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியப் பெண், ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு