Published:Updated:

திறமையை தோற்றத்தின் அடிப்படையிலா பார்க்கப்போறீங்க? - மிரியம் சுஷ்மிதா

திறமையை தோற்றத்தின் அடிப்படையிலா பார்க்கப்போறீங்க? - மிரியம் சுஷ்மிதா
பிரீமியம் ஸ்டோரி
திறமையை தோற்றத்தின் அடிப்படையிலா பார்க்கப்போறீங்க? - மிரியம் சுஷ்மிதா

வித்தியாசம்

திறமையை தோற்றத்தின் அடிப்படையிலா பார்க்கப்போறீங்க? - மிரியம் சுஷ்மிதா

வித்தியாசம்

Published:Updated:
திறமையை தோற்றத்தின் அடிப்படையிலா பார்க்கப்போறீங்க? - மிரியம் சுஷ்மிதா
பிரீமியம் ஸ்டோரி
திறமையை தோற்றத்தின் அடிப்படையிலா பார்க்கப்போறீங்க? - மிரியம் சுஷ்மிதா

‘`நீங்க போட்டோகிராபரா? இவ்ளோ குண்டா இருக்கீங்க... கேமராவையும் ஸ்டாண்டையும் தூக்கிட்டு போட்டோ எடுக்கக் கிளம்பறீங்களே... எப்படி முடியுது... குள்ளமா இருக்கீங்களே... போட்டோ எடுக்க முடியுமா?

இந்தக் கேள்விகளை எத்தனை முறை எதிர்கொண்டிருப்பேன்னு தெரியலை. என் திறமையைப் பார்க்காம, உருவத்தைவெச்சு என்னை ஏன் எடை போடறாங்கனு தெரியலை. நான் இப்படித்தான். நான் குண்டுதான். குள்ளம்தான். என் உருவம் நான் எடுக்கிற படங்களில் பிரதிபலிக்கப் போறதில்லையே... இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பெண்களின் திறமையை தோற்றத்தின் அடிப்படையிலேயே பார்க்கப் போறீங்க?’’

ஆறாத சினத்துடன் ஆரம்பிக்கிறார் மிரியம் சுஷ்மிதா. இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபியில் கலக்கிக்கொண்டிருக்கும் இளம்பெண்... நம்ம சென்னைப் பெண்!

திறமையை தோற்றத்தின் அடிப்படையிலா பார்க்கப்போறீங்க? - மிரியம் சுஷ்மிதா

இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபி?

எந்திரங்களும் இரைச்சல்களும் நிறைந்த, இருட்டுக்கும் புகைக்கும் குறைவில்லாத தொழிற்சாலைகளை அழகியலுக்குள் அடக்கும் இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபியில் இருக்கும் ஆண்களையே விரல்விடாமல் எண்ணிவிடலாம். அப்படியொரு துறையில் அபூர்வமாக கவனம் ஈர்க்கிறார் மிரியம் சுஷ்மிதா.

‘`சுஷ்மிதா சென், மிஸ் யுனிவர்ஸ் டைட்டில் வென்ற வருஷம் பிறந்தேன். அதனால நான் மிரியம் சுஷ்மிதா’' - அழகாகச் சிரிப்பவர், சீக்கிரமே சுஷ்மிதா சென்னுக்கு இணையாக, புகழின் உச்சம்தொடுவார் என்பதில் சந்தேகமில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`எங்க வீட்டில் புகைப்படங்கள் மூலமா நினைவுகளைச் சேகரிக்கிற பழக்கம் எல்லாருக் கும் உண்டு. அம்மா கவர்ன்மென்ட் ஸ்டாஃப். தமிழ்நாடு அரசின் ‘வாழ்ந்து காட்டுவோம்’ புராஜெக்ட்டில் இருந்தபோது ஆபீஸுக்காக அம்மா ஒரு கேமரா வாங்கினாங்க. அதைப் பார்த்துப் பிடிச்சுப்போய் வீட்டுக்காகவும் ஒரு கேமரா வாங்கினோம். அதுக்கப்புறம் நிறைய போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சேன். ஐஏஎஸ் படிக்கணும்கிறதுதான் என் ஆர்வமா இருந்தது. ப்ளஸ் டூ முடிச்சதும் எம்.ஓ.பி காலேஜ்ல விஸ்காமுக்கும் அப்ளை பண்ணியிருந்தேன். அங்கே இடம் கிடைச்சதும் வேறு எதைப் பத்தியும் யோசிக்காம சேர்ந்துட்டேன். போட்டோகிராபிதான் என் ஸ்பெஷலைசேஷன். கோர்ஸ் முடிக்கிற டைம்ல என் புரொபசர்தான் என்னை ஊட்டி, `லைட் அண்டு லைஃப் அகாடமி'யில சேரச் சொன்னார். அங்கே போட்டோகிராபியில ஏதாவது ஸ்பெஷலைசேஷனைத் தேர்ந்தெடுக்கணும். நான் இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபி எடுத்தேன். எங்க புரொபசர் இக்பாலும் இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபியில ஸ்பெஷலிஸ்ட். அவருடைய போட்டோஸைப் பார்க்கும்போது இண்டஸ்ட்ரியைக் கூட இவ்வளவு அழகா எடுக்க முடியுமானு ஆச்சர்யமா இருந்தது. அவர்கூட டீ பேக்டரிக்கு டெமோ ஷூட்டுக்குப் போனேன். அவர் லைட்டிங் வைக்கிற ஸ்டைலும், ஒவ்வொரு ப்ரேமுக்குக் கொடுக்கிற முக்கியத்துவமும் ரொம்பப் புதுசா இருந்தது.  ‘இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபியில என்ன சார் சுவாரஸ்யம் இருக்கப் போகுது?’னு ஒருமுறை அவர்கிட்ட கேட்டேன். ‘அங்க உள்ள தூசையும் புகையையும் லைட்டிங் பண்றதுதான்’னு அவர் சொன்ன அந்த வரிகள் என் மனசுல ஆழமா பதிஞ்சு போயிருச்சு. அதுதான் இப்பவும் ஆர்வம் குறையாம என்னை இயக்கிட்டிருக்கு’’ - ஆர்வத்தின் காதலியான மிரியமுக்கு இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபி ஆரம்பத்திலேயே சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுவிடவில்லை.

திறமையை தோற்றத்தின் அடிப்படையிலா பார்க்கப்போறீங்க? - மிரியம் சுஷ்மிதா

``இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபின்னா என்னன்னு புரியவைக்கிறதே பெரிய போராட்டம். ‘இண்டஸ்ட்ரி நடத்தறோம்... அதை போட்டோ எடுத்து நாங்க என்ன செய்யப்போறோம்’னு கேட்பாங்க. டிஜிட்டல் மார்க்கெட்டிங்ல தொடங்கி, வெப்சைட்டுல போடவும், கிளையன்ட்டுகளுக்குக் காட்டவும் அப்படியொரு போட்டோ ஷூட் அவசியம்னு ரொம்பப் பக்குவமா புரியவெச்சா, அடுத்த கேள்வி வேற மாதிரி இருக்கும்.

‘எங்ககிட்டயே போட்டோகிராபர் இருக்காங்க. அவங்களைவெச்சே எடுத்துப்போமே... நீங்க எதுக்கு’னு கேட்பாங்க. அதைப் பேசிப் புரியவைக்கிறது கஷ்டம்.  ‘உங்க ஆட்களையும் போட்டோஸ் எடுக்கச் சொல்லுங்க. நானும் எடுத்துக் காட்டறேன். வித்தியாசத்தைப் பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும்’னு சொல்வேன். அப்படித்தான் புரியவைக்கவும் முடியும். நான் விரும்பின மாதிரி ஒரு ஷாட் எடுக்க அஞ்சு மணி நேரமெல்லாம்கூட ஆகியிருக்கு. முதல்ல ஒரு வாரம் டைம் கேட்டிருக்கேன். ‘ஒரு வாரமெல்லாம் தர முடியாது. பேக்டரியை மூடமாட்டோம். அதுபாட்டுக்கு இயங்கிட்டிருக்கும். ஒருநாள் டைம். ஒரு கேமரா, ஒரே ஆள் வந்து எடுக்கணும்னு கண்டிஷன்ஸ் போட்டிருக்காங்க. அந்த ஒரு நாளில் நான் எடுக்கிற படங்கள் அவங்களைக் கவரணும், அந்தப் படங்களைப் பார்த்துட்டு அவங்க எனக்கு நான் கேட்ட டைமைக் கொடுக்கணும்னு கடுமையா உழைச்சிருக்கேன்.

என்னுடைய முதல் அசைன்மென்ட் சென்னைத் துறைமுகம். காலேஜுக்காக போர்ட்போலியோ ரெடி பண்ணணும்னு அவங்ககிட்ட பர்மிஷன் வாங்கினேன். சூப்பரா வந்திருந்தது. யுகே-வில் என் உறவினர் வீட்டுக்குப்  போனபோது,  அங்கே உள்ள ஒரு யோகர்ட் பேக்டரியிலும் ஒயின் பேக்டரியிலும் போட்டோ ஷூட் பண்ணினேன். ஷூட் முடிச்சிட்டு வந்து, என் புரொபசர்கிட்ட படங்களைக் காட்டினபோது அவருக்குத் திருப்தியில்லைனு சொல்லிட்டார். வீட்டுல அத்தனை பேரும் ‘ஆஹா... பிரமாதம்’னு பாராட்டினபோது, இவர் மட்டும் இப்படிச் சொல்லிட்டாரேன்னு வருத்தமா இருந்தது.  ‘இன்னிக்கு ஒரு டீச்சரா நான் இந்தப் படங்கள் சரியில்லைனு சொல்றேன். நாளைக்கு உன் கிளையன்ட் அப்படிச் சொல்லிடக் கூடாது’னு சொன்னதோடு, படங்கள் ஏன் சரியில்லை, என்ன தவறுன்னு புரியவெச்சார். அந்தப் பாடம்தான் இப்போ வரை  கிளையன்ட்ஸ்கிட்ட எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திட்டிருக்கு’’ - ஆசான் பெயரை
யும் காப்பாற்றிக்கொண்டிருப்பவர், ஆர்.எஸ். கிராபிக்ஸ், செயின்ட் கோபின், கேன்ஸ் டெக்னாலஜி என ஏகப்பட்ட தொழிற்சாலைகளுக்கு போட்டோ ஷூட் செய்திருக்கிறார்.

திறமையை தோற்றத்தின் அடிப்படையிலா பார்க்கப்போறீங்க? - மிரியம் சுஷ்மிதா
திறமையை தோற்றத்தின் அடிப்படையிலா பார்க்கப்போறீங்க? - மிரியம் சுஷ்மிதா

``இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபி என்பதே நம்மூருக்குப் புதுசு. வெடிங் போட்டோகிராபி எடுத்திட்டிருக்கும் பெண்களையே வித்தியாசமா பார்க்கிற  பார்வை இன்னும் மாறலை. அந்த நிலையில இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபின்னா என்ன, அது ஏன் அவசியம்னு புரியவைக்கிறதே எனக்குப் பெரிய சவாலா இருந்தது.  அம்மா அப்பாகிட்ட  ‘இந்த வேலையே வேண்டாம்னு நினைக்கிறேன். விட்டுடவா’னு கேட்டேன். ‘பெண்கள் வேலை பார்க்கிற பாரம்பர்யம் உள்ள குடும்பத்துலேருந்து வந்திருக்கே... உனக்கு வீடு இருக்கு. நாங்க இருக்கோம். உன் தேவைகளைப் பார்த்துக்கத் தயாரா இருக்கோம். ஒரு வருஷம் வாய்ப்பே இல்லைன்னாலும் நீ வீட்டுல இரு. ஆனா, போராடு.  நிறைய பேரை மீட் பண்ணு. வாய்ப்பு தேடு. கத்துக்கோ. ஆனா, விட்டுடாதே’னு சொன்னாங்க. அதுதான் என் வாழ்க்கையின் முக்கியமான அட்வைஸ். அப்புறம்தான் மனிதர்களைச் சந்திக்கவும் பேசவும் பேஸ்புக்கிலும் இன்ஸ்டாவிலும் என் படங்களை போஸ்ட் பண்ணவும் ஆரம்பிச்சேன்.

அமெரிக்காவுக்கு ஒரு விசிட் போனேன். அங்கே இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபி எப்படியிருக்குனு ரிசர்ச் பண்ணினேன். நிறைய பெண்கள் இருக்கிறது தெரியவந்தது. இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபி என்பது வெறுமனே பேக்டரியை படம் எடுக்கிறது மட்டுமில்லை, அதைத் தாண்டி நிறைய இருக்குனு புரிஞ்சது. இழந்த நம்பிக்கை துளித்தது. வாய்ப்புகளும் வர ஆரம்பிச்சது’’ என்கிறவரின் படங்கள் சிலவற்றை விலை கொடுத்து வாங்கித் தன் அலுவலக இன்டீரியரில் வைத்திருக்கிறது தமிழ்நாடு இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் பண்டு மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன். விரைவில் ஆவின் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு சிமென்ட்ஸுக்கும் படங்கள் எடுக்கவிருக்கிறார் மிரியம்.

திறமையை தோற்றத்தின் அடிப்படையிலா பார்க்கப்போறீங்க? - மிரியம் சுஷ்மிதா

‘`இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபி பண்றது சாதாரண காரியமில்லை. லைட்டிங் பார்த்தோமா, ஆங்கிள் வெச்சோமா, எடுத் தோமானு பண்ற வேலையில்லை இது. எந்த இண்டஸ்ட்ரியை எடுக்கிறேனோ, அதைப் பத்தின அடிப்படை அறிவு அவசியம். ஒரு மெஷின் எப்படி வேலை செய்யுதுனு தெரிஞ்சுக்கிட்டு, அந்தக் கோணத்துலதான் எடுக்கணும். ஆங்கிள் நல்லாருக்கேனு மாத்தி எடுத்துட முடியாது. 21 வயசுல படிப்பை முடிச்சிட்டு இந்தத் துறைக்கு வந்தேன். வெடிங் போட்டோ ஷூட்டுக்கு நிறைய வாய்ப்புகள் வந்திருக்கு. அதுல கேண்டிட் ஷாட்ஸ் எடுக்கிறதுல மட்டும்தான் கிரியேட்டி விட்டியைக் காட்ட முடியும். பெரிய சுவாரஸ்யம் இல்லைனு என் போட்டோகிராபர் பிரெண்ட்ஸுக்கு அந்த வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்திருக்கேன்.  பேஷன் போட்டோகிராபியோ, வெடிங் போட்டோகிராபியோ பண்ற என் பிரெண்ட்ஸுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைச்சிட்டே இருக்கும். என் வாழ்க்கை போராட்டமானதாகவே தொடர்ந்தது.  தப்பு பண்ணிட்டோமோன்னு கூடத் தோணும்.

பேஷன் போட்டோகிராபியிலும், மாடல் போட்டோ ஷூட்டிலும் அழகான விஷயங்களையும் முகங்களையும் இன்னும் அழகா காட்ட முடியுது. இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபி அப்படியில்லை. அழுக்கான, மோசமான அந்தச் சூழலை அழகா படம் பிடிக்கிறதுதான் இதுல சவால். ஒரு ஷாட் எடுத்து முடிச்சதும் அது கொடுக்கிற சந்தோஷம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. ‘போட்டோகிராபியில மெஷின்களைப் பார்த்துக் குஷியாகிற ஒரே ஆள் நீயாதான் இருப்பே’ன்னு என் தம்பி கிண்டல் பண்ணுவான். இண்டஸ்ட்ரிக்குள்ளே நுழையும்போது பளிச்னு இருப்பேன். போட்டோ ஷூட் முடிச்சிட்டு வெளியே வரும்போது அடையாளமே தெரியாம மாறியிருப்பேன். அந்த வெயிலும் அழுக்கும் என்னை அடியோடு மாத்தியிருக்கும். ஆனாலும், அந்த ரிசல்ட் என் படங்களில் தெரியும்.

என்னை முதல்முறை சந்திக்கிறவங்க, ‘நீங்க லேடி இண்டஸ்ட்ரியல் போட்டோ கிராபர்தானே’னு கேட்கக் கூடாது. ‘மிரியம்னு ஒரு இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபர் இருக்காங்க’னு சொல்லணும். அப்படி அடையாளப்படுத்தப்படறதுதான் எனக்கான அங்கீகாரம்னு நினைக்கிறேன்’’ - கோரிக்கையோடு காத்திருப்பவருக்கு அப்படியே ஆகக் கடவது!

- ஆர்.வைதேகி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism