Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நம் கவனம் கவர்ந்த பெண்கள் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து மற்றும் கேரள வீராங்கனை பி.யூ.சித்ரா.

30 வயதான கோமதி மிகுந்த சிரமங்களுக்கிடையே போட்டியில் பங்கேற்றுள்ளார். தொடர் பயிற்சி, விடா முயற்சி - இவை இரண்டும் கைகொடுக்க, தங்கம் வென்றிருக்கிறார். திருச்சி மாவட்டத்திலுள்ள முடிகண்டம் என்னும் குக்கிராமத்திலுள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கோமதி. தினமும் அதிகாலையிலும், மீண்டும் மாலையிலும் 30 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து தடகளப் பயிற்சி பெற்று வந்தார். திருச்சிக்குப் பேருந்து பிடிக்கவே வீட்டிலிருந்து 3 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். இருப்பினும் உடல், மனநலப் பிரச்னைகளைக் காரணம்காட்டி, கோமதி ஒரு நாள்கூட பயிற்சிக்குச் செல்லாமல் இருந்ததில்லை. `ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவு’ என்று சொல்லியிருக்கிறார் கோமதி. அந்தக் கனவு மெய்ப்படும் என்கிற நம்பிக்கை நமக்கும் உண்டு.

கேரள மாநிலம் பாலக்காட்டில் விவசாயக் கூலிக் குடும்பத்தில் பிறந்த பி.யூ.சித்ராவின் வெற்றியும் பெரும் போராட்டத்துக்குப்பின் கிடைத்ததுதான். வீட்டில் எப்போதும் சூழ்ந்திருந்த வறுமை, கடுமையான பயிற்சி... இவற்றைத் தாண்டி, தகுதிகள் எல்லாம் இருந்தும், நீதிமன்றப் படியேறித்தான் போட்டிகளில் பங்கேற்க வேண்டிய சூழல் சித்ராவுக்கு. இருப்பினும் இன்னல்களைத் தாண்டி அவரும் ஜெயித்திருக்கிறார்.

உலகின் அதிவேகப் பெண் என்று அறியப்பட்ட அமெரிக்காவின் ஃப்ளாரன்ஸ் ஜாய்னர், குடும்பச் சூழல் காரணமாக  போட்டிகளில் அதிக கவனம் செலுத்தமுடியாமல் இருந்தார். அவரது திறமையை அடையாளம் கண்டுகொண்டு பயிற்சியாளர் பாப் கெர்சி, தொடர்ந்து ஊக்குவித்தார். ஜாய்னரும் பயிற்சியைப் பற்றிக்கொண்டார். அந்த ஆர்வம் இல்லை என்றால், அந்த உன்னத வீராங்கனையை உலகம் இழந்திருக்கும்.  ஃப்ளாரன்ஸுக்கு மட்டுமல்ல... சித்ரா, கோமதி போன்ற பெண்களுக்கும் புதுவிடியலைக் காட்டியிருப்பது இடையறாத அந்த ஆர்வம்தானே!

ஆர்வம் கொள்வோம்... அகிலம் வெல்வோம்!

நமக்குள்ளே...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz