சமகாலப் பெண் எழுத்தாளர்கள் குடும்பம், உறவுகள் என்று பயணப்பட்டுக்கொண்டிருக்க, கள்ளச்சாராயம் காய்ச்சும் இடம், ஹிப்பிகளின் வாழ்க்கை என்று களங்களுக்குச் சென்று கதை எழுதியவர் சிவசங்கரி. தீவிர எழுத்துலகில் இயங்கிக்கொண்டிருந்தவர், அதைவிடுத்து இலக்கியம் மூலம் இந்திய இணைப்புக்காக இந்தியா முழுக்க வலம் வந்தார். எழுத்து, இயல்பு, நடை, உடை, பாவனை என அனைத்திலும் கம்பீர ஆளுமையுடன் இருக்கிற சிவசங்கரியை, ‘அவள் அரங்க’த்துக்காக வாசகிகளின் கேள்விகளுடன் சந்தித்தோம். மிகவும் உற்சாகத்துடன் பதிலளித்தார்.

எழுத்தின் மீதான ஆர்வம் எந்த வயதில் வந்தது?
- எஸ்.இந்துப்பிரியா, சேலம்

சொன்னா நம்புவீங்களான்னு தெரியலை. 25 வயசுலதான் எழுத்து மீதான ஆர்வம் வந்தது. அதுவரைக்கும் எழுத்தாள ராகணும்னு நான் நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. படிச்சது தமிழ் மீடியம் என்றாலும், விசேஷ பாடமா சம்ஸ்கிருதம் படிச்சதால எனக்குத் தமிழ் இலக்கணம், இலக்கியமெல்லாம் பரிச்சயமே கிடையாது. என் மனசை உடைச்ச ஒரு சம்பவம்தான் நான் எழுத்தாளரானதுக்குக் காரணம்.

எங்க சமூகத்துல ஒரு வழக்கம் இருக்குது. திருமணமாகிக் குழந்தை யில்லாத பெண்களின் கையில் ஒரு குழவிக்கல்லைக் கொடுத்து, அதைக் குழந்தையா நினைச்சுக்கிட்டு குளிப்பாட்டி, துடைச்சு, பொட்டுவெச்சு, தாலாட்டச் சொல்வாங்க. இந்த வழக்கம் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. அந்தச் சம்பவத்தால் மனமுடைந்து போனேன். இந்த வழக்கம் தொடர்பான என் மனக்குமுறலையெல்லாம் எழுதிட்டுப் படிச்சுப் பார்த்தா, அது ஒரு கதை மாதிரி இருந்தது. ‘அவர்கள் பேசட்டும்’கிற தலைப்பு வெச்சு, அதை உடனே கல்கி பத்திரிகைக்கு அனுப்பினேன்.

1968-ம்ஆண்டு, மே 12-ம் தேதி அந்தக் கதை கல்கியில் பிரசுரமாச்சு.

எழுத்தாளராவதற்கு முன்னால் நீங்கள் யார்?
- ஆர்.பிரபாவதி, சென்னை-13

எழுத்தாளராவதற்கு முன்னால நான் ஒரு பப்ளிக் ரிலேஷன்ஸ் ஆபீஸர். ‘ஃபர்ஸ்ட் நேஷனல் சிட்டி வங்கி’யில வேலை பார்த்துக் கிட்டிருந்தேன். என் கணவர் ‘பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ்’ஸில் ஜோனல் மேனேஜரா இருந்தார். பலதரப்பட்ட மனிதர்கள், உயர்தட்டு மக்கள், பார்ட்டி, ஃபங்ஷன் என்று பக்கா சிட்டி வாழ்க்கை வாழ்ந்துகிட்டிருந்தேன்.

எழுத்துதான் எதிர்காலம் என எப்போது முடிவெடுத்தீர்கள்?
- ஷைலஜா.டி, பெங்களூரு

என் மாமனார் தஞ்சாவூர்ல ஒரு தொழிற்சாலை நடத்திக்கிட்டிருந்தார். அதன் கிளையை விழுப்புரத்தில் ஆரம்பிச்சப்போ, என் கணவரை அதைப் பார்த்துக்கச் சொன்னார். அதனால, நாங்க ரெண்டு பேருமே சென்னையில் பார்த்துக்கிட்டிருந்த வேலையை விட்டுட்டு, விழுப்புரத்துல இருக்கிற வழுதரெட்டிங்கிற கிராமத்துக்குப் போனோம். அதுவரைக்கும் வீடு, ஆபீஸ் என்கிற நகர வாழ்க்கையை வாழ்ந்துகிட்டிருந்த நான், மிகப்பெரிய மைதானத்தில் நின்றபடி உலகத்தைப் பார்க்க ஆரம்பிச்சேன். வயல்கள், மேகங்கள், தெம்மாங்கு, கிளிகள், குடிசை மக்கள், உடை அணியாத குழந்தைகள்னு விழுப்புரம் வாழ்க்கை எனக்கு யதார்த்த உலகத்தோடு ஒரு நெருக்கத்தைக் கொடுத்தது. நிறைய கதைகள் எழுதவும் தூண்டுகோலா இருந்தது. அந்த ஊர்ல டிராக்டர்ல கரும்புகளை ஏத்திக்கிட்டுப் போகும்போது அதுலயிருந்து ஒரேயொரு கரும்புக்கழியை எடுக்கிறதுக்காக, சின்னப் பிள்ளைங்க டிராக்டர்ல தொத்திக்கிட்டே போவாங்க. அப்படி போறப்போ, ஒரு சிறுவன் டிராக்டர் சக்கரத்துல மாட்டி இறந்துட்டான். அந்தச் சம்பவம் பல நாள்கள் என்னைத் தூங்கவிடவே இல்லை. அதை ‘ஓர் உயிரின் விலை 10 காசு’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையா எழுதினேன். இனி எழுத்துதான் என் எதிர்காலம்னு தீர்மானிக்கப்பட்டது விழுப்புரத்துலதான்.

உங்கள் திருமணம்..?
- ஜே.சுஜாதா, திருச்சி

பெற்றோர்தான் நிச்சயம் செய்தாங்க. அவர் என் அண்ணியின் உடன்பிறந்த சகோதரர் என்கிறதால கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். இன்னும் சொல்லப் போனா எங்க ரெண்டு பேருக்கும் இடையில் நட்பைத் தாண்டிய அதீத அன்பும் இருந்துச்சு. அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாயிருக்கும்னு எனக்குத் தோணியிருக்கு. அவருக்கும் அப்படித்தான். ஆனா, அந்த உணர்வை நாங்க ரெண்டு பேருமே ஷேர் பண்ணிக்கலை. ஒருவேளை பெரியவங்க முடிவு வேற மாதிரி இருந்துட்டா என்ன பண்றதுங்கிற பயம்தான்!

நீங்கள் களத்துக்குச் சென்று ஆராய்ச்சி செய்து கதைகள் எழுதியவராயிற்றே... அவற்றில் சில அனுபவங்களைப் பகிர முடியுமா?
- எம்.ராஜேஸ்வரி, சென்னை-32

1971-க்குப் பிறகு, நிறைய கதைகளைக் களத்தில் இறங்கி ஸ்டடி பண்ணிதான் எழுதினேன். அதுல ரெண்டு அனுபவங்களை மட்டும் சொல்றேன். ‘ஒரு மனிதனின் கதை’ நாவலுக்காக, கடலூர்ல ஒரு சவுக்குத் தோப்புக்குள்ள கள்ளச்சாராயம் காய்ச்சுற இடத்துக்குப் போயிருந்தேன். எங்க விழுப்புரம் தொழிற்சாலையில வேலை பார்த்துக்கிட்டிருந்த ஒருத்தர்தான், நான் கேட்டுக்கிட்டதால் என்னை அங்கே அழைச்சுக்கிட்டுப் போயிருந்தார். பானைகளை அடுக்கடுக்காக வெச்சுக் காய்ச்சிக்கிட்டிருந்தாங்க. பக்கத்துல இருந்த அழுக்குக் குட்டையில தண்ணி மொண்டு அந்தப் பானைகள்ல ஊத்தினாங்க. அந்தக் குட்டையில் பேட்டரி, டயர்னு என்னென்னவோ இருந்துச்சு. அந்தச் சம்பவத்தை இப்ப நினைச்சுப் பார்த்தாலும், சாராயம் குடிக்கிறவங்க மேல பரிதாபம்தான் வரும்.

அடுத்ததா, ‘அவன்’ என்கிற கதைக்காக போதை மருந்து பயன்படுத்துறவங்களின் இயல்புகளைத் தெரிஞ்சுக்கிறதுக்காக கொடைக்கானலுக்குப் போயிருந்தேன். அங்கேயும் ஒரு நண்பர் மூலமாக ஒரு `drug den’-க்குப் போனேன். அவரைத் தவிர வேற யாருக்கும் என்னை எழுத்தாளர் சிவசங்கரின்னு தெரியாது. அங்கே போனப்போ ராத்திரி 7 மணி இருக்கும். ஒரு மர வீடு. ஒரேயொரு மெழுகுவத்தி வெளிச்சம். வீட்டுக்குள்ள ஆண், பெண் என்று ஏழெட்டு ஹிப்பிகள் இருந்தாங்க. நம்ம ஆள்களின் முகங்களும் அங்கங்கே தெரிஞ்சது. எல்லாரும் மேஜிக் மஷ்ரூமை சாப்பிட்டுட்டு போதையில கிடந்தாங்க. நான் புடவை கட்டாமல் சல்வார் கம்மீஸ் போட்டுக்கிட்டு போனதால அவங்களுக்கு எதுவும் வித்தியாசமா தெரியலை. அதனால, அன்னிக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கலை. அந்த போதை ஆசாமிகளில் ஒருத்தர் என்னை அடையாளம் கண்டுபிடிச்சிருந்தாலும் என் கதி அதோகதி ஆகியிருக்கும்!

கணவருடைய ஆதரவு?
- வி.ராமலஷ்மி, ஆற்காடு

ஒரு காரையும் டிரைவரையும் கொடுத்து, களங்களுக்குப் போய் கதைகள் எழுதத் தூண்டியவரே அவர்தான்.

நீங்கள் எழுதிய தொடர்கதை ஒன்றுக்கு ஹோர்டிங் வைத்து விளம்பரம் செய்தார்களாமே..?
- லதா பாண்டியன், விருகம்பாக்கம்

ஒன்றல்ல... ரெண்டு கதைகளுக்கு ஹோர்டிங் வெச்சாங்க. அதைச் செய்தது விகடன்தான்! ‘ஒரு மனிதனின் கதை’, ‘பாலங்கள்’ ஆகிய கதைகளுக்கு ஸ்பென்சர், சர்ச் பார்க், மியூசிக் அகாடமின்னு நாலைந்து இடங்கள்ல ஹோர்டிங் வெச்சாங்க. நான் பத்திரிகைகளில் கதைகள் எழுதிக்கிட்டிருந்த காலத்துல, எழுத்தாளர்களை மிகுந்த மரியாதையோடு பார்த்தாங்க. ஒரு சிலர் எங்களை சரஸ்வதியின் அம்சமாகூட பார்த்தாங்க. பேர், புகழ், மேடை, கௌரவம்னு கம்பீரமா வாழ்ந்தோம்மா நாங்க!

காதல், வாடகைத்தாய் பற்றியெல்லாம் ஒரு பெண் எழுத்தாளர் எழுதியதை அந்தக்கால சமூகம் எப்படி எடுத்துக்கொண்டது?
- அனிதா.பி, தஞ்சாவூர்

ஹோமோ செக்ஸ், லெஸ்பியன், டேட்டிங் இதையெல்லாம் விட்டுட்டீங்களே!

1970-ல் நான் அமெரிக்கா போயிட்டு வந்த அனுபவங்களைத் தொடராக, ‘அனுபவங்கள்’, ‘அனுபவங்கள் தொடர்கின்றன’ என ரெண்டு தடவை தினமணிக் கதிரில் எழுதினேன். அங்கதான் மேலே சொன்ன விஷயங்களையெல்லாம் முதல் தடவையா பார்த்தேன். 16 வயசுப் பொண்ணோட அமெரிக்க அம்மா ஒருத்தவங்க, ‘என் பொண்ணுக்கு இன்னும் பாய் ஃப்ரெண்ட் அமையலை’ன்னு வருத்தப்பட்ட கலாசார அதிர்ச்சியை எல்லாம் சந்திச்சது அப்போதான்.

வாடகைத்தாய் பற்றி எழுதியதற்கு யாரும் விமர்சனம் செய்யலை. ஆனா, ஓரினச் சேர்க்கையைப் பத்தி எழுதினப்போ ‘ஒரு பெண் இதையெல்லாம் எழுதலாமா’ன்னு விமர்சனம் வரத்தான் செய்தது.

`லலிதா மேல் நான் வைத்த அன்பைவிட அவள் என் மேல் வைத்த அன்பு பெரிது’ என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தீர்களே... ஏன் அப்படி?
- ஆர்.ஷீபா, விருத்தாசலம்

நான் அப்படிச் சொன்னது உண்மைதான். லலிதா, என் கதைகளைப் படிச்சு என்னை தன் அம்மாவா வரிச்சுக்கிட்டவ. ஆனா, நான் அவளை நல்ல சிநேகிதியா மட்டும்தான் பார்த்தேன். அவ எனக்குக் கொடுத்தது நிபந்தனையற்ற அன்பு. ஒரு வருஷம், ரெண்டு வருஷமில்ல, 40 வருஷங்கள் பிரியமான மகளா, செக்ரெட்டரியா, எனக்கு எல்லாமுமா இருந்தா. ஆனா, என் கணவர் இறந்த தினத்துல இருந்துதான் நான் அவளை மகளா பார்க்க ஆரம்பிச்சேன். எங்க வழக்கப்படி மகள்தான் அப்பாவின் உடலைக் குளிப்பாட்டணும். இதைப் பெரியவங்க சொன்னதும், லலிதா தலையில் தண்ணீரை ஊத்திக்கிட்டு ஈரப் புடவையோடு என் கணவருடைய உடம்பைக் குளிப்பாட்டினா. அந்த நேரம் லலிதாவோட சொந்த பெற்றோர் அங்கேதான் இருந்தாங்க. ஒரு நிமிஷம் அவளுடைய அன்பில் நான் ஆடிப்போயிட்டேன். அவள் கேன்சர் வந்து இறந்தது எனக்கு மிகப்பெரிய இழப்பு.

திரைப்படங்களான உங்கள் கதைகள் பற்றி...
- டி.வி.ராஜேஸ்வரி, சேலம்

என்னுடைய ‘திரிவேணி சங்கமம்’ கன்னடத்தில் ‘மறையாத தீபாவளி’யாக வந்தது. ‘ஒரு சிங்கம் முயலாகிறது’ வாடகைத் தாய் பற்றிய கதை. அந்தக் கதை தமிழில் ‘அவன், அவள், அது’ என வந்தது. குடிநோயாளி பற்றிய ‘ஒரு மனிதனின் கதை’, வெளிநாட்டு மாப்பிள்ளையின் நெகட்டிவ் பக்கத்தைச் சொன்ன ‘47 நாட்கள்’, புற்றுநோய் பற்றிய ‘நண்டு’ ஆகியவை அதே பெயரிலேயே வந்திருக்கின்றன. என்னுடைய `ஆயுள் தண்டனை’ நாவல் `கண்ணீர்ப் பூக்க'ளாகவும், `வெட்கம் கெட்டவர்கள்’ நாவல் ‘பெருமை’ என்ற பெயரிலும் திரைப் படங்களாகின.

அந்தக் கால எழுத்தாளர்கள், இந்தக் கால எழுத்தாளர்கள்... யார் லக்கி? காரணம் சொல்லுங்களேன்!
- என்.நிர்மலா, சென்னை-94

அந்தக் காலத்தில் சில பத்திரிகைகள்தான் இருந்தன. அதனால், எங்களுக்கு வாய்ப்புகள் குறைச்சலாகத்தான் கிடைச்சது. இப்ப சமூக வலைதளங்கள், வலைதளங்கள்னு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்குது. ஆனா, எங்க காலத்துல மக்கள் மத்தியில் எங்களுக்கு இருந்த பிரபலமும் புகழும் இப்ப இருக்கிற எழுத்தாளர்களுக்குக் கிடைக்கிற மாதிரி தெரியலை. எங்க காலத்தில் ஒரு பத்திரிகைக்கு ஆல்டர்னேட்டிவ் இன்னொரு பத்திரிகைதான். இன்னிக்கு டி.வி, போன், இணையம், சமூக வலைதளம்னு பல்வேறு தளங்கள் இருக்கின்றன. இதுல லக்கி யார்னு கேட்டா, ஒரு விதத்தில் பார்த்தா நீங்க; ஒரு விதத்தில் நாங்க!

நீங்கள் ஒரு டிராவல் பிரியை என்று தெரியும். நீங்கள் சென்ற இடங்களில் சந்தித்த வித்தியாசமான சம்பவங்களைச் சொல்லுங்களேன்!
- எஸ்.காவ்யா, புதுச்சேரி

நிறைய சம்பவங்கள் இருக்கு. ஒண்ணு மட்டும் சொல்றேன். கென்யாவின் மசைமாராவுல இருக்கிற பழங்குடியினர்கிட்ட வித்தியாசமான பழக்கம் ஒண்ணு இருக்கு. அவங்க காலையில் எழுந்ததும் கொட்டிலில் இருக்கிற ஒரு பசுவோட காதுல லேசா கீறி ரத்தத்தை எடுத்து பாலோட கலந்து குடிப்பாங்க. இதற்காக தினம் ஒரு பசுகிட்ட இருந்து ரத்தம் எடுப்பாங்க. ஒரு தடவை ஒரு பசுகிட்ட இருந்து ரத்தம் எடுத்துட்டாங்கன்னா, மறுபடியும் அதுகிட்ட இருந்து ஒரு மாதம் கழிச்சுதான் எடுப்பாங்க. பசுவுடைய ரத்தத்தை தங்களுடைய சீக்ரெட் ஆப் எனர்ஜின்னு அவங்க நம்பறதுதான் இதுக்குக் காரணம்!

இலக்கியம் மூலம் இந்திய இணைப்புப் பணிக்காக, உங்கள் சொந்த எழுத்தை நிறுத்தியதற்காக எப்போதாவது வருத்தப்பட்டிருக்கிறீர்களா?
- சி.காயத்ரி, அயனாவரம்

இல்லவே இல்லை. 16 வருஷங்கள்; இந்தியா முழுக்கப் பயணம்; 18 மொழிகள்ல இருக்கிற 100-க்கும் மேற்பட்ட இலக்கிய ஆளுமைகளின் சந்திப்பு; இந்திய இலக்கியத் தொன்மையை நான்கு பாகங்களாகத் தொகுத்தது... இது கோடியில் ஒருவருக்குத்தான் கிடைக்கும். எனக்குக் கிடைச்சது. தவிர, எழுத்துலகத்தில் 25 வருஷங்கள் பூர்த்தியான பிறகுதான், இலக்கியத்துக்கு என்னுடைய பங்களிப்பு பெரியளவுல இருக்கணும்னுதான், நான் இலக்கியம் மூலம் இந்திய இணைப்பைக் கையில் எடுத்தேன். 16 வருஷங்கள் அதையொரு தவம் மாதிரி செஞ்சேன். அதனால, என் சொந்த எழுத்து நின்னதுக்காக நான் என்றைக்குமே வருத்தப்பட்டதில்லை.

நீங்கள் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்பதால் கேட்கிறேன்... நடிகர்களெல்லாம் வரிசையாக அரசியலில் குதிப்பது ஆரோக்கியமான விஷயம்தானா?
- ஆர்.சித்ரா, முகலிவாக்கம்

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். டாக்டராக வேலை பார்க்கணும் னாலும் சரி, நர்ஸாக வேலை பார்க்கணும் னாலும் சரி... அதற்கான படிப்பும் அனுபவமும் இருக்கணும் இல்லையா? அதே மாதிரி மக்களுக்கு நல்லது செய்ய யார் வேணும்னாலும் அவங்களைத் தகுதிபடுத்திக்கிட்டு வரலாம். நடிகர்களுக்கும் இது பொருந்தும்.

உங்களுடைய எழுத்துத் தோழமைகள் யார் யார்?
- ஆர். கெளரி, வேலூர்

எல்லோருடனும் பழக்கம் இருக்கிறது. ஆனால், ஒரேயொரு தோழமைதான். அது எழுத்தாளர் மாலன்.

இன்றைய பெண்ணியம், பெண்ணியவாதிகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
- லலிதா தாமோதரன், வளசரவாக்கம்

வெல்... இன்றைய பெண்ணியவாதிகளைப் பற்றிய என்னோட கருத்தைச் சொல்றதுக்கு முன்னாடி என்னைப் பற்றி சில விஷயங்கள் சொல்லிடுறேன். நான், பெண்ணாகப் பிறந்ததற்கு சந்தோஷப்பட்டதும் இல்லை; குறைபட்டுக்கொண்டதுமில்லை. ஒரு மனுஷியாக இருந்து, ஆண், பெண் - இருவருடைய நல்லது கெட்டதுப் பற்றியும் என் எழுத்துகளில் எழுதியிருக்கிறேன். அதனால், `பெண்கள் எல்லாம் சரி, ஆண்கள் எல்லாம் தவறு’ங்கிற கான்செப்ட் என்கிட்ட கிடையாது. இந்த அடிப்படைப் புரிந்துணர்வு இருக்கிற பெண்ணியவாதிகளுக்கு என் வாழ்த்துகள்!

இப்போது இருக்கிற எழுத்தாளர்களில் யாருடைய எழுத்து உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது?
- பா.ஞானசுந்தரி, புட்லூர்

கதைகள் படிக்கிறது குறைஞ்சிருக்கு. இப்பல்லாம் ஆன்மிகம்தான் படிக்கப் பிடிச்சிருக்கு. சில நேரங்கள்ல என்னை பாதிக்கிற, சிந்திக்கவைக்கிற கதைகளை, எழுதினது யார்னுகூடத் தெரியாம வாசிக்கிறேன். அதனால, உங்க கேள்விக்குக் குறிப்பா என்னால பதில் சொல்ல முடியலை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான உங்கள் நட்பு...
- வி.அப்சரா, ஹைதராபாத்

எங்களுடைய உறவை நட்புன்னு சொல்றதா, அக்கா தங்கை உறவுன்னு சொல்றதான்னு தெரியலை. நல்ல தோழிகளாக கோல்டன் பீச்சில் மனசுவிட்டுப் பேசியிருக்கோம். தங்கையா என் வீட்டு அடுப்படி மேடை மேலே உட்கார்ந்துக்கிட்டு நான் வார்த்துத் தந்த தோசைகளை ரசிச்சு ருசிச்சு சாப்பிட்ட அம்முவின் அன்பையும் அனுபவிச்சிருக்கேன். அவங்க அரசியலில் நுழைந்த பிறகுதான் எங்க நட்பு அறுபட்டுப் போச்சு. என்னைவிட சின்னப் பொண்ணு அவங்க. இன்னும் ரொம்ப வருஷம் வாழ்ந்திருக்க வேண்டியவங்க, ப்ச்...

தொகுப்பு: ஆ.சாந்தி கணேஷ், படங்கள்: ப.சரவணகுமார்