Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...
நமக்குள்ளே...

முன்னொரு காலத்தில் கோடை மழை வந்தது. அனல் கக்கும் ஏப்ரல், மே மாதங்களில் வரும் இந்தக் கோடை மழை, அவ்வபோது நிலம் நனைத்துச் செல்லும். இன்றோ, அதையும்கூடத் தொலைத்து விட்டு புவிவெப்பமயமான காரணத்தால் வியர்வை மழையில் திணறிக்கொண்டிருக்கிறோம். மாநகரங்கள், கிராமங்கள் என எங்கெங்கும் தெருக்களில் வண்ண பிளாஸ்டிக் குடங்களின் அணிவரிசை; திரும்பிய திசையெல்லாம் நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆழ்துளைக் கிணறுகள்; உறிஞ்சும் நீரை ஊர்முழுக்கக் கொடுப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கும் லாரிகள் என... கொஞ்சநஞ்ச ஈரமும் பறிபோய்க்கொண்டிருக்கிறது. ‘இது சரியா, தவறா... நம்மால் வேறு என்னதான் செய்ய முடியும்?’ என்கிற கேள்விகளுடன் கையறு நிலையில் நிற்கிறோம்.

தோழி வீட்டுக்குச் சென்றபோது கவனித்தேன். தண்ணீர் ஃபில்டரில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, பக்கெட்டில் பிடித்து வைத்துக்கொள்கிறார். ஏசியில் இருந்து சொட்டுச்சொட்டாக வழியும் நீரையும் பிடித்து வைத்துக்கொள்கிறது அந்தக் குடும்பம். அந்தத் தண்ணீரை வாசல் தெளிக்க, செடிகளுக்கு ஊற்ற என்று பயன்படுத்திக்கொள்கிறார்கள். சிறு முயற்சிதான்... ஆனால், தினமும் இரண்டு வாளி தண்ணீர் கிடைக்கிறதே!

முயன்றால், எல்லோருக்கும் கைகூடக் கூடியதே! எத்தனையோ வீடுகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி நிறைந்து தரையிலும் வீதியிலும் நீர் வீணாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. கொஞ்சம்போல அக்கறை காட்டி, சரியான நேரத்தில் மோட்டாரை அணைக்கலாம் அல்லது தானியங்கி மோட்டார் ஸ்விட்ச் வைத்துக்கொள்ளலாம். மழைநீர்ச் சேகரிப்புக் குழாயை இதுவரை அமைக்கவில்லை என்றால், இந்தக் கோடையிலாவது அமைக்கலாம்.

டிஷ்வாஷர் எனப்படும் பாத்திரத்தைக் கழுவும் கருவிகள் போல அதிக தண்ணீர் தேவைப்படும் கருவிகளுக்கு விடுமுறை கொடுக்கலாம்; குழாயைத் திறந்துவைத்துக்கொண்டு நேரடியாகப் பாத்திரங்களைக் கழுவுவது, ஷேவிங் செய்வது, பல் துலக்குவது போன்றவற்றைக் கைவிடலாம்; வாஷிங் மெஷின் வெளியேற்றும் நீரைக் கழிவறையில் பயன்படுத்தலாம்; வீட்டுத்தோட்டங்களுக்கு சிறிய அளவிலான சொட்டுநீர்ப் பாசனக் குழாய்களைப் பதிக்கலாம்; வாகனங்களைக் கழுவ மறுசுழற்சி நீரைப் பயன்படுத்தலாம்... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம், நீர்சேமிப்புக்கான வழிமுறைகளை.

‘இதையெல்லாம்விட, கழிவுநீர் மறுசுழற்சி, கடல்நீரைக் குடிநீராக மாற்றுவது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எனப் பெருமுயற்சிகளைச் செய்தாலே தண்ணீர்ப் பஞ்சத்தைத் தவிர்க்கலாமே’ என்று நமக்குத் தோன்றுவது இயல்புதான். ஆனால், நவீன உலகத்தில் தண்ணீரின் தேவை பெருகிக்கொண்டே இருக்கும் சூழலில், வீட்டுக்கு வீடு முயற்சிகளை மேற்கொண்டால்தான், எதிர்காலம் நமக்கானதாக இருக்கும்.

`சிறுதுளி பெருவெள்ளம்' என்று சொல்லிவைத்திருப்பது வெறும் பேச்சுக்காக அல்ல!

நமக்குள்ளே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism