Published:Updated:

உன் முகத்தை பார்த்தும் எப்படி தான் தூக்கிப்போட மனசு வந்துச்சோ- உருகிய பெண் இன்ஸ்பெக்டர்...

கே.குணசீலன்
உன் முகத்தை பார்த்தும் எப்படி தான் தூக்கிப்போட மனசு வந்துச்சோ- உருகிய பெண் இன்ஸ்பெக்டர்...
உன் முகத்தை பார்த்தும் எப்படி தான் தூக்கிப்போட மனசு வந்துச்சோ- உருகிய பெண் இன்ஸ்பெக்டர்...

தஞ்சாவூர்  அரசு ராசாமிராசுதார் குழந்தைகள் மருத்துவமனையில் பிரசவ வார்டு வாசலில் இரண்டு காது மடல்கள் இல்லாத நிலையில் பிறந்து 3 நாகளான பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த  பணியாளர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.விசாரணைக்காக வந்த பெண் இன்ஸ்பெக்டர் தாயாக மாறி குழந்தையை கொஞ்சியது அனைவரையும் நெகிழ வைத்தது.

தஞ்சாவூரில் அரசு ராசாமிராசுதார் குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது.இதில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பிரசவத்திற்காக அனுமதிக்க படுகின்றனர் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் இந்த மருத்துவமனை வளாகம்.இந்த நிலையில் பிறந்த 3 நாட்களான பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று பிரசவ வார்டு வாசலில் கிடந்தது.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் குழந்தையை மீட்டு டாக்டர்களிடம் ஒப்படைத்தனர்.குழந்தையின்  பெற்றோர்கள் யார் என தெரியவில்லை. குழந்தைக்கு இரண்டு காதுகளின் மடல்கள் இல்லை இதனால் குழந்தையை போட்டுவிட்டு சென்றிருக்க வாய்ப்பிருக்கலாம் என தெரிகிறது.

இதனையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் மருத்துவமனை நிர்வாகத்தினர். விசாரணைக்காக வந்த மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா குழந்தையை பார்த்து ஒரு தாயாக மாறி கொஞ்ச தொடங்கினார்.மடியில் போட்டு கொண்டு கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்.என்னடா ராஜா பையா உனக்கு இரண்டு காது மடல்கள் இல்லை என உன்னை பெத்த அம்மா தூக்கி போட்டு விட்டு போய்ட்டாங்களா. நீ கவலைபடாத உனக்கு ஆதரவாக நிறைய பேர் இருக்காங்க என கொஞ்சினார்.இந்த பிஞ்சு முகத்தை பார்த்தும் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல்  தூக்கி போட்டு விட்டு செல்ல எப்படிதான் மனசு வந்தது என தெரியவில்லை அந்த கல் நெஞ்சம் படைத்த பெற்றோர்களுக்கு என்றும் புலம்பினார். பின்னர் குழந்தை யாருடையது என்பது குறித்த விசாரணையில் ஈடுபட்டார்.