Published:Updated:

``இன்னும் நாலு நாள்ல எனக்கு பிரசவம்!'' - நெகிழும் லாவண்யா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``இன்னும் நாலு நாள்ல எனக்கு பிரசவம்!'' - நெகிழும் லாவண்யா
``இன்னும் நாலு நாள்ல எனக்கு பிரசவம்!'' - நெகிழும் லாவண்யா

``கத்தியில வெட்டினது, இரும்பு ராடால என் தலையில ஓங்கி ஓங்கி அடிச்சதுன்னு எல்லாமே என் உடம்புல தழும்பா அங்கங்கே இருக்கு. என் வயித்துலகூட நிறைய அடி விழுந்துச்சு.''

`அன்னிக்கு நடுராத்திரி, அந்தக் கொள்ளைக்காரங்க என்னைக் கொடூரமா அடிச்சதினால் வயித்துல அடிப்பட்டிருக்குமோ';  அதனால என் கருப்பை பாதிக்கப்பட்டிருக்குமோன்னு மனசுக்குள்ளே எப்பவும் ஒரு பயம் இருக்கு.' - திருமணம் முடிந்த சில தினங்ககளில் லாவண்யா நம்மிடம் கண் கலங்கியபடி பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் இவை. தற்போது தாய்மை அடைந்திருக்கும் லாண்யாவுக்கு இன்னும் நான்கு நாள்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது. சென்ற வருடம் பிப்ரவரி மாதம் பெரும்பாக்கத்தில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த ஐ.டி.லாவண்யாதான் இவர். நினைவுபடுத்திக் கொள்ள முடியாதவர்களுக்குச் சின்ன அறிமுகம்.

``இன்னும் நாலு நாள்ல எனக்கு பிரசவம்!'' - நெகிழும் லாவண்யா

சென்னைப் பெரும்பாக்கம் - தாழையூர் சாலையில், வேலை முடிந்து நள்ளிரவு 12 மணிக்கு மேல் தன் டூ வீலரில் வந்துகொண்டிருந்தார் லாவண்யா. திடீரென மூன்று கொள்ளையர்கள் அவருடைய வண்டியைத் தடுத்து நிறுத்த, தப்பிக்கும் எண்ணத்தில் வண்டியின் ஆக்ஸிலேட்டரை முறுக்கினார். ஆனால், மூவரில் ஒருவன் பெரிய வெட்டுக்கத்தியால் லாவண்யாவை வெட்ட முயல, தைரியமாக அந்தக் கத்தியைப் பிடித்துத் தடுத்துவிட்டார். இதனால், இன்னும் கோபமாக கொள்ளையர்கள் அவரின் தலையில் இரும்பு ராடால் ஓங்கி அடிக்க ஆரம்பித்தார்கள். மயங்கி விழுந்தார் லாவண்யா. அவரிடம் இருந்த பணம், போன், பைக் என்று எல்லாவற்றையும் திருடிக் கொண்டதோடு, லாவண்யாவை இழுத்து ஒரு புதருக்குள் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். மயக்கம் தெளிந்து எழுந்த லாவண்யா, புதருக்குள் இருந்து தவழ்ந்து தவழ்ந்தே சாலைக்கு வந்திருக்கிறார். போன கொள்ளையர்கள் திரும்பி வந்து தன்னைக் கொன்று விடுவார்களோ என்கிற பயத்தில், அப்படியே செத்தவரைப் போல படுத்தே கிடந்த லாவண்யாவை, கிட்டத்தட்ட விடியற்காலையில் அந்தப் பக்கமாக ரோந்து சென்ற காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தார்கள். அதன் பிறகு அவர் மறுஜென்மம் எடுத்தது, திருமணம் முடித்தது எல்லாமே எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அதே லாவண்யா, இன்று காலையில் போன் செய்து, 'ஐ யம் பிரக்னென்ட். வளைகாப்புகூட முடிஞ்சிருச்சு' என்று உற்சாகத்தின் உச்சியில் நின்றபடி பேச ஆரம்பித்தார். வாழ்த்துகள் சொல்லிவிட்டு நாமும் அவருடைய சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொண்டோம்.

``இன்னும் நாலு நாள்ல எனக்கு பிரசவம்!'' - நெகிழும் லாவண்யா

``அந்த நடுராத்திரியை இன்னும்கூட என்னால முழுசா மறக்க முடியலை. கத்தியில வெட்டினது, இரும்பு ராடால என் தலையில ஓங்கி ஓங்கி அடிச்சதுன்னு எல்லாமே என் உடம்புல தழும்பா அங்கங்கே இருக்கு. என் வயித்துலகூட நிறைய அடி விழுந்துச்சு. ரவிச்சந்திரன் என்னைக் கல்யாணம் பண்ணிக்க கேட்டப்போகூட, எனக்குக் குழந்தை பிறக்குமான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக டாக்டர்கிட்டே செக் பண்ணிக்கிட்டேன். அவங்க `என் கர்ப்பப்பையில் எந்த அடியும் படலை. எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்கும்'னு சொன்னாங்க. அதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல நிஜமாகப் போகுது. ஜூன் 3 ம் தேதி டெலிவரி டேட் கொடுத்திருக்காங்க'' என்ற லாவண்யாவிடம், "கர்ப்பமா இருக்கிற தன்னோட மனைவியை கணவர்கள் உள்ளங்கையில் வைச்சு தாங்குவாங்களாமே... உங்க கணவர் எப்படி?" என்றோம். 

``சந்து மாதிரி யாருக்கும் ஹஸ்பெண்ட் கிடைக்க மாட்டாங்க. ரொம்ப அபூர்வமான மனுஷன் அவர். கல்யாணத்துக்கு முன்னாடி, `உனக்கு பிஸிக்கல் ஹராஸ்மென்ட் நடந்திருந்தாலும் ஐ டோன்ட் கேர்'னு சொன்னவர் அவர். அதுமட்டுமல்லீங்க, 'அது தொடர்பாக யாரும் என்கிட்டே கேள்வி கேட்கக் கூடாது'ன்னு சொன்னவர். கல்யாணத்துக்குப் பிறகும் அவர் இயல்பு கொஞ்சம்கூட மாறலை. அவரோட லவ் இன்னும் அதிகமாகியிருக்கு. வீடு, ஆஃபீஸ்னு ரெண்டையும் என்னால சமாளிக்க முடியுதுன்னா, அதுக்குக் காரணம் அவரோட சப்போர்ட்தான்' என்றவர், பிறக்கப் போகிற தன் ஜூனியரைப் பற்றிய தங்களுடைய கனவுகளைப் பகிர்ந்து கொண்டார். 

``இன்னும் நாலு நாள்ல எனக்கு பிரசவம்!'' - நெகிழும் லாவண்யா

``எனக்குப் பையன், பொண்ணு யார் பிறந்தாலும் ஓகேதான். அதனால, பிங்க், ப்ளூன்னு ரெண்டு நிறத்துலேயும் டிரெஸ் வாங்கிட்டேன். ஆனா, சந்துவுக்கு என்னை மாதிரியே தைரியமான பெண் குழந்தைதான் வேணுமாம்'' லாவண்யாவின் குரலில் தாய்மையும் பெருமிதமும் பொங்கி வழிகிறது. 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு