Published:Updated:

எலும்புருக்கி நோய், வீல்சேர் வாழ்க்கை, ஐஏஎஸ் கனவு - கேரளாவின் தன்னம்பிக்கை மனுஷி லதீஷா!

எலும்புருக்கி நோய், வீல்சேர் வாழ்க்கை, ஐஏஎஸ் கனவு - கேரளாவின் தன்னம்பிக்கை மனுஷி லதீஷா!
எலும்புருக்கி நோய், வீல்சேர் வாழ்க்கை, ஐஏஎஸ் கனவு - கேரளாவின் தன்னம்பிக்கை மனுஷி லதீஷா!

"குழந்தையைத் தூக்கிட்டு போற மாதிரிதான் என்னை அப்பா எந்நேரமும் சுமந்துட்டு போவாங்க. எனக்கு நம்பிக்கை வற்றாமயிருக்கக் காரணம் என் அப்பாதான். எல்லா மகள்களுக்கும் அவங்க அப்பாதான் ரோல் மாடலா இருப்பாங்க. எனக்கு என் அப்பா சூப்பர் ஹீரோ!"

``என் நோய் என் வளர்ச்சிக்குத் தடை அல்ல" என உரக்கச் சொல்கிறார், 24 வயதாகும் லதீஷா அன்சாரி. சிறு வயதிலேயே எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டவர். அதுமட்டுமன்றி நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார். செயற்கை சுவாசத்தின் உதவியால் மட்டும் வாழ்ந்து வருகிறார் லதீஷா. இந்நிலையில் நேற்று நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வை எழுதியிருக்கிறார். தன்னுடைய தன்னம்பிக்கையால் அனைவரையும் வியக்கவைக்கும் லதீஷா அன்சாரியிடம் பேசினோம்.

எலும்புருக்கி நோய், வீல்சேர் வாழ்க்கை, ஐஏஎஸ் கனவு - கேரளாவின் தன்னம்பிக்கை மனுஷி லதீஷா!

``கேரளாவிலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் பிறந்தேன். என்னுடைய ஆறு வயசுல எலும்பு நோய் பாதிப்பு ஏற்பட்டுச்சு. அம்மாவும் அப்பாவும் என்னை பல மருத்துவமனைகளுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. ஆனாலும் எந்தப் பலனும் இல்லை. இந்த நோய் எப்படி எனக்கு வந்துச்சு, எதனால வந்துச்சுனு கண்டே புடிக்க முடியலை. கண்ணீரும், சோகமும் நிறைஞ்சு இருந்தது. அதற்கப்புறம் அதுல இருந்து வெளிய வர நினைச்சேன். எனக்கு ஒரு அக்கா இருக்காங்க. அவங்க நார்மலான பொண்ணு. எந்தக் குறையும் இல்லாத அழகான மனுஷி. என் குடும்பம்தான் என் பலம். ஸ்கூலுக்கு என்னை கூட்டிட்டுப் போறதுலயிருந்து எனக்கான வேலைகளைப் பார்த்துத் தருவதுவரை எல்லாமே என் அப்பாதான். குழந்தையைத் தூக்கிட்டு போற மாதிரிதான் என்னை அப்பா எந்நேரமும் சுமந்துட்டு போவாங்க. எனக்கு நம்பிக்கை வற்றாமயிருக்கக் காரணம் என் அப்பாதான். எல்லா மகள்களுக்கும் அவங்க அப்பாதான் ரோல் மாடலா இருப்பாங்க. எனக்கு என் அப்பா சூப்பர் ஹீரோ!

பள்ளிப்படிப்பு முடிஞ்சதும் கல்லூரியில் சேர்ந்தேன். `உனக்குப் பிடிச்ச பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படி'ன்னு சொன்னாங்க. பி.காம் படிச்சேன். கல்லூரி ஆசிரியர்கள், நண்பர்கள்னு எல்லோருமே எனக்கு உறுதுணையாக இருந்தாங்க. படிக்கிறதுக்கு ரொம்பப் பிடிக்கும். பி.காம் முடிச்சதும் எம்.காம் படிச்சேன். நார்மல் பசங்களோடு ஒப்பிடும்போது நான் படிக்கிறதுக்கு பல சவால்கள் இருக்கும்தான். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் படிச்சேன். 

எலும்புருக்கி நோய், வீல்சேர் வாழ்க்கை, ஐஏஎஸ் கனவு - கேரளாவின் தன்னம்பிக்கை மனுஷி லதீஷா!

ஐஏஎஸ் ஆகணும்ங்கிறது என் கனவு. அதனால யுபிஎஸ்சி தேர்வு எழுதலாம்னு முடிவெடுத்தேன். அதுக்காக என்னைத்  தயார்படுத்திக்கொண்டேன். என்னால செயற்கை சுவாச உதவியோடதான் தேர்வு எழுத முடியும்ங்கிறதுனால, கலெக்டர்கிட்ட அனுமதி கேட்டிருந்தேன். என் நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு தேர்வு அறைக்குள் ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு போக அனுமதி கொடுத்தாங்க. கலெக்டருக்கு முதலில் என் நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன். தேர்வை நல்லபடியா எழுதியிருக்கேன்.

மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உதவிகளை அரசு செஞ்சு கொடுக்கணும். பல மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்துக்காகப் போராடிட்டு இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் நல்லது பண்ணணும்னுதான் ஐ.ஏ.எஸ் ஆகணும்னு ஆசைப்படுறேன். பாஸ் ஆகிடுவேன்னு நம்புறேன். இல்லைன்னாலும் தொடர்ந்து முயற்சி செய்வேன்'' என்றவரிடம், அவர் வரைந்த ஓவியங்கள் குறித்துக் கேட்டோம்.

எலும்புருக்கி நோய், வீல்சேர் வாழ்க்கை, ஐஏஎஸ் கனவு - கேரளாவின் தன்னம்பிக்கை மனுஷி லதீஷா!

``என்னால முடியாதுன்னு நான் எதையுமே நினைக்க மாட்டேன். நிறைய விஷயங்களை கத்துக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுலயிருந்தே எனக்கு டிராயிங் பண்ணப் பிடிக்கும். நான் வரைஞ்ச ஓவியங்களை எங்கப்பா கொண்டாடுவாங்க. அதுக்காகவே வரைய ஆரம்பிச்சேன். கிளாஸ் பெயின்டிங் எனக்குப் பிடித்தமான ஒன்று. என் ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் என் கையால வரைஞ்ச பெயின்டிங்கை கிஃப்ட் பண்ணுவேன். பெயின்டிங்க்கு அடுத்தபடியா, எனக்கு மியூசிக் மேல தீராக்காதல். கீ-போர்டு பிளே பண்ணுவேன். நிறைய நிகழ்ச்சிகளில் கீ-போர்டு பிளே பண்ணியிருக்கேன்'' - புன்னகைக்கிறார் இந்தத் தன்னம்பிக்கை மனுஷி.

வாழ்த்துகள் லதீஷா!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு