Published:Updated:

கிராமத்து பசங்களுக்கு இலவச டியூஷன், கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு - ஐடி டு டியூஷன் டீச்சரான பிரியதர்சினி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கிராமத்து பசங்களுக்கு இலவச டியூஷன், கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு - ஐடி டு டியூஷன் டீச்சரான பிரியதர்சினி
கிராமத்து பசங்களுக்கு இலவச டியூஷன், கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு - ஐடி டு டியூஷன் டீச்சரான பிரியதர்சினி

"ஆரம்பத்தில் படிப்பை பாதியில் நிப்பாட்டுன புள்ளைகள ஸ்கூலில் சேர்த்துவிட்டு அவங்களுக்கு டியூஷனும் எடுக்க ஆரம்பிச்சேன். சொன்ன நம்பமாட்டீங்க. ஸ்கூல் போகமாட்டேன்னு ஆறாம் வகுப்போட நின்ன புள்ளைய திரும்பி ஸ்கூலில் சேர்த்து தினமும் பாடம் சொல்லிக்கொடுத்து பத்தாம் வகுப்பில் 373 மார்க் எடுக்க வெச்சேன். இப்போ அந்தப் பொண்ணு காலேஜ் படிக்குது."

"நம்ம எல்லாருக்கும் ஏதாவது ஒரு வேலை இருந்துட்டேதான் இருக்கும். அதையெல்லாம் ஓரங்கட்டிட்டு நம்மளச் சுத்தி இருக்கிறவங்களுக்காக நாம என்ன பண்றோம்னு ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்க. கண்டிப்பா உங்க மனசுலேயும் மாற்றம் பிறக்கும்" என மாற்றத்திற்கான விதையை மனதில் விதைக்கிறார் பிரியதர்சினி. தான் பார்த்து வந்த ஐடி வேலையை விட்டுவிட்டு தன்னுடைய சொந்த கிராமத்தில் 40 குழந்தைகளுக்கு இலவச டியூஷன் எடுப்பது, இடை நிற்றலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, பெண் குழந்தைகளின் கல்வி, உடல் தானம், வீடுதோறும் கழிப்பறை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனச் சமூக ஆர்வலராக உருவெடுத்துள்ளார் பிரியதர்சினி. ஐடி பணி டு டியூஷன் டீச்சராக மாறிய நிமிடங்களை நம்மிடம் பகிர்கிறார் பிரியதர்சினி.

``எனக்குச் சொந்த ஊரு சீர்காழி பக்கத்துல இருக்கற புதுத்துறை கிராமம். படிக்காத ஜனங்கள் நிறைய வாழுற ஊரு. அந்த ஊர்லதான் அப்பா வாத்தியாராக வேலை பார்த்துட்டு இருந்தாங்க. அதனால் எங்க ஊரு ஜனங்க எல்லாரும் ஏதாவது ஒரு சின்ன தகவல் தெரிஞ்சிக்கணும்னாகூட எங்க வீட்டு வாசலுக்குத்தான் வந்து நிப்பாங்க. யாருக்கு என்ன உதவினாலும் அதைக் கேட்டு சுணக்கப்படாம நிறைவேற்றிக் கொடுப்பாங்க. ``செத்ததுக்கு அப்புறமும் வாழணும்னா நாம் யாருக்காவது உதவி செய்யணும்மா"னு அப்பா அடிக்கடி சொல்லுவாங்க. அந்த வார்த்தை என் மனசுக்குள்ள ஆழமாக பதிஞ்சிருச்சு. அதனால் ஸ்கூல், காலேஜ் படிக்கும் போதே வீட்டுல எனக்குத் தின்பண்டம் வாங்கக் கொடுக்குற காசை சேமிச்சு கஷ்டப்படுற புள்ளைகளுக்கு என்னால முடிஞ்ச சின்னச் சின்ன உதவிகளைச் செஞ்சிட்டு இருந்தேன்.

கிராமத்து பசங்களுக்கு இலவச டியூஷன், கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு - ஐடி டு டியூஷன் டீச்சரான பிரியதர்சினி

பி.இ., படிச்சு முடிச்சிட்டு சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். திடீர்னு ஒரு போன் கால்... அப்பா இறந்துட்டாங்கனு. அதிர்ந்து போய் பதறியடிச்சுட்டு வீட்டுக்கு ஓடினா, எங்க ஊரே எனக்கு ஆறுதலா எங்க வீட்டு வாசல் முன்னாடி நின்னாங்க. அப்பாவுக்கு தன் உறுப்புகளை தானம் செய்யணும்னு ஆசை. அதனால் எந்தச் சடங்கும் செய்யாம அப்பாவோட உடலைச் சிதம்பரம் அண்ணாமலை மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக கொடுத்துட்டோம். இப்போ நான் உட்பட எங்க வீட்டில் இருக்கும் எல்லாருமே உடல் தானம் செய்ய முடிவெடுத்துருக்கோம்" என்றவர் இலவச டியூசன் எடுக்க ஆரம்பித்தது பற்றிப் பகிர்கிறார்.

``அப்பா இறந்தப்போ லீவ் எடுத்துட்டு சொந்த ஊரில் தங்கியிருந்தேன். அப்போ எங்க ஊரைச் சேர்ந்த நிறைய பொம்பள புள்ளைக பள்ளிக்கூடத்துக்குப் போகாம, வீட்டு வேலைக்குப் போயிட்டு இருந்துச்சுங்க. அவங்கள கூப்பிட்டு பேசி திரும்பப் பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்டுட்டு சென்னைக்கு வந்தேன். 15 நாள் கழிச்சு ஊருக்குத் திரும்பிப் போனப்ப நான் பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்ட பொண்ணுங்க எல்லாரும் திரும்பி வீட்டு வேலைக்குத்தான் போயிட்டு இருந்தாங்க. அவங்க வேலைக்குப் போறதுக்கு வறுமை ஒரு காரணமா இருந்தாலும், படிப்பில் ஆர்வம் இல்லைங்கிறதும் ஒரு காரணம். அவங்க எல்லாத்தையும் கூப்பிட்டு பேசுனேன். அவங்க எல்லாருக்காகவும் ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அந்த நிமிஷம் அவங்களோட எதிர்காலத்தைவிட என் சம்பளம் எனக்கு பெருசா தெரியலை. அதனால் வேலையை விட்டுட்டு சொந்த ஊருலேயே இருந்து இலவசமா டியூஷன் எடுக்க ஆரம்பிச்சேன். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் 'வாழ்க்கையை வீணடிச்சுக்குறனு என்னைப் பார்த்து கிண்டல் பண்ணினாங்க. ஆனா, நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படலை. ரொம்பப் பெருமையான டியூஷன் டீச்சராக என்னை உணர ஆரம்பிச்சேன்.

கிராமத்து பசங்களுக்கு இலவச டியூஷன், கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு - ஐடி டு டியூஷன் டீச்சரான பிரியதர்சினி

ஆரம்பத்தில் படிப்பை பாதியில் நிப்பாட்டுன புள்ளைகள ஸ்கூலில் சேர்த்துவிட்டு அவங்களுக்கு டியூஷனும் எடுக்க ஆரம்பிச்சேன். சொன்ன நம்பமாட்டீங்க. ஸ்கூல் போகமாட்டேன்னு ஆறாம் வகுப்போட நின்ன புள்ளைய திரும்பி ஸ்கூலில் சேர்த்து தினமும் பாடம் சொல்லிக்கொடுத்து பத்தாம் வகுப்பில் 373 மார்க் எடுக்க வெச்சேன். இப்போ அந்தப் பொண்ணு காலேஜ் படிக்குது. இந்த மாதிரி நிறைய பொண்ணுங்களை ஸ்கூல் முடிக்க வெச்சுருக்கேன். இப்போ எங்க ஊரில் இருக்க எல்லா பசங்களுக்கும் இலவசமாக டியூஷன் எடுத்துட்டிருக்கேன். தினமும் சாயங்காலம் 4 மணி ஆயிருச்சுனா போதும் வீடு முழுக்கப் புள்ளைக கூட்டம் நிறைஞ்சுரும். 9 மணி வரை பாடம் சொல்லிக்கொடுப்பேன். என்கிட்ட டியூஷன் படிக்கிற பொண்ணுங்க மூலமா அவங்களோட வீட்டில் கழிப்பறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். ஒவ்வொரு வீடா போயி கழிப்பறையின் அவசியத்தை விளக்கி புரிய வெச்சு, இன்னைக்கு எங்க ஊரில் கழிப்பறை இல்லாத வீடே இல்லை" என்ற பிரியாவின் கண்களில் பெருமிதம் பொங்குகிறது.

பாடம் தாண்டி குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் இருக்கோ அதைக் கற்றுக்கொடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுட்டு வர்றேன். அதன் மூலமா எங்க புள்ளைக வாழ்கையில் ஏதாவது வெளிச்சம் வந்தா சந்தோஷம் தானுங்களே என்ற பிரியாவிடம் அவரின் திருமணம் பற்றிக் கேட்டோம். "33 வயசாயிருச்சு... என்னோட சமூக சேவையைத் தொடர்ந்து செய்யவிடுற மாப்பிள்ளை கிடைச்சா கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தேன். இப்போ எங்க பக்கத்து ஊருக்காரர் அதுக்கு சம்மதம் தெரிவிச்சிருக்கார். திருமணத்துக்குப் பிறகு ரெண்டு கிராமத்திற்கும் பொதுவான இடத்தில் வைத்து சேவையைத் தொடரலாம்னு முடிவெடுத்திருக்கேன்" என்கிறார்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு