Published:Updated:

''இப்ப அவங்க எம்.பி... என் பிரச்னைக்காக பேசுவாங்கனு நினைக்கிறேன்!’’ - கனிமொழிக்கு திருநங்கையின் கோரிக்கை

''இப்ப அவங்க எம்.பி... என் பிரச்னைக்காக பேசுவாங்கனு நினைக்கிறேன்!’’ - கனிமொழிக்கு திருநங்கையின் கோரிக்கை
''இப்ப அவங்க எம்.பி... என் பிரச்னைக்காக பேசுவாங்கனு நினைக்கிறேன்!’’ - கனிமொழிக்கு திருநங்கையின் கோரிக்கை

"என் உரிமைக்காகத் தினம் தினம் போராடியே சேமித்து வைத்திருந்த பணம் எல்லாம் தீர்ந்துபோச்சு. எனக்கும் மற்றவர்கள்போல சக மனுஷியாக இந்தச் சமூகத்தில் வாழணும்னு ஆசை. பெரிய வசதி வேண்டாம். என் சராசரி தேவையையே உழைச்சு செய்துக்க நினைக்கிறேன். அடிப்படைத் தேவையையே பூர்த்தி செய்துக்க வழியில்லாத இந்தச் சமூகத்தில் ஏன் வாழணும்?"

'என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள்!' என்று திருநங்கை ஷானவி, குடியரசுத் தலைவருக்கு கொடுத்திருந்த மனு கடந்த ஆண்டு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட ஓராண்டு ஆகியும் இன்றளவும் அவருடைய உரிமையைப் பெறத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார் ஷானவி. அவரிடம் பேசினோம்.

''இப்ப அவங்க எம்.பி... என் பிரச்னைக்காக பேசுவாங்கனு நினைக்கிறேன்!’’ - கனிமொழிக்கு திருநங்கையின் கோரிக்கை

``2010-ல் என் பொறியியல் படிப்பை முடிச்சிட்டு 2014-ல் ஆபரேஷன் செய்து திருநங்கையாக மாறினேன். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்தான் எனக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சேன். ஒரு வருஷம் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டு இருந்தேன். அதுக்கப்புறம் ஏர் இந்தியா வேலைக்குப் பதிவு செஞ்சேன். நேர்காணலில் நல்லா பர்ஃபார்ம் பண்ணியும் மூன்று முறை என்னை நிராகரிச்சாங்க. அதுக்கப்புறம்தான் என் நிராகரிப்புக்கான காரணம் என் பாலினம்னு தெரிஞ்சது. நானும் முடிஞ்ச அளவுக்கு இது விஷயமா போராடிப் பார்த்தேன். திறமை இருந்தும் ஏன் வேலை கொடுக்க மறுக்கறீங்கனு துறை சம்பந்தமான ஆட்களைச் சந்திச்சு கேட்க முயற்சி பண்ணினேன். ஆனால், யாரையும் நேரில் பார்க்கவே முடியலை. முறையான பதிலும் கொடுக்கலை. அப்புறம்தான், பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பினேன். உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு பதிவுசெய்தேன். ஆனா, நான் எடுத்த எந்த முயற்சிக்கும் பலன் இல்லை. 

இப்படி என் உரிமைக்காகத் தினம் தினம் போராடியே சேமித்து வைத்திருந்த பணம் எல்லாம் தீர்ந்துபோச்சு. எனக்கும் மற்றவர்கள்போல சக மனுஷியாக இந்தச் சமூகத்தில் வாழணும்னு ஆசை. பெரிய வசதி வேண்டாம். என் சராசரி தேவையையே உழைச்சு செய்துக்க நினைக்கிறேன். அடிப்படைத் தேவையையே பூர்த்தி செய்துக்க வழியில்லாத இந்தச் சமூகத்தில் ஏன் வாழணும்? அதனால்தான் என்னைக் கருணைக் கொலை பண்ணச் சொல்லி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பினேன். ஆனா, அந்தக் கடிதத்துக்கும் இன்னைக்கு வரைக்கும் எந்தப் பதிலும் வரலை. இந்த அரசு என்னை மாதிரியான திருநங்கைகளுக்கு இவ்வளவுதான் மதிப்பு கொடுக்குதுன்னு புரிஞ்சிகிட்டேன். 

''இப்ப அவங்க எம்.பி... என் பிரச்னைக்காக பேசுவாங்கனு நினைக்கிறேன்!’’ - கனிமொழிக்கு திருநங்கையின் கோரிக்கை

இது தொடர்பா உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தேன். என் சார்பாக வாதாடின வக்கீல், 2014-ல் வந்த ஆணைப்படி, திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கணும். இவ்வளவு நாள் அவங்களை ஏன் அலைக்கழிக்கிறீங்கன்னு கேட்டார். ஒவ்வொரு முறையும் வழக்கைத் தள்ளிப் போடறாங்க. பொருளாதார ரீதியா ரொம்பவே கஷ்டப்படுறேன். இந்தப் பிரச்னை வெளியே தெரியுறதுக்கு முன்னாடி, மும்பையில் மாடலிங் பண்ணிட்டிருந்தேன். போராட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அந்த வாய்ப்பும் என்னைவிட்டுப் போயிருச்சு. 

இப்போ இறுதியாக வருகிற ஆகஸ்ட் மாசம் இந்த வழக்கு விசாரணைக்கு வருது. அதுல நல்ல தீர்ப்பு கிடைக்கும்னு நம்புறேன். அதுமட்டுமல்லாமல் இது மத்திய அரசு தொடர்பான விஷயங்கிறதுனால ரொம்பவே கேஸை இழுத்து டைவர்ட் பண்றாங்க. எனக்கு சொந்த ஊர் திருச்செந்தூர். எங்கள் எம்.பி கனிமொழி மேம்கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு இருக்கேன். இதுக்கு முன்னாடியே அவங்ககிட்ட என் பிரச்னையைப் பற்றி சொன்னேன். அவங்க அப்போ அவங்க ஆட்சியில் இல்லைங்கிறதனால எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்லியிருந்தாங்க. ஆனா, இப்போ எம்.பி-யாகிட்டதால் நேரடியா பார்லிமென்ட்ல அவங்களால பேச முடியும். அதனால, அவங்ககிட்ட பிரச்னைகள் குறித்து பேசலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அவங்களைச் சந்திச்சு பேசுனா என் பிரச்னைக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுவாங்கன்னு நம்புறேன்'' என்றார் ஷானவி.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு