Published:Updated:

Rewind 2021: பி.வி.சிந்து முதல் கமலா ஹாரிஸ் வரை; 2021-ல் நம்பிக்கையளித்த 10 பெண்கள்!

2021-ல் நம்பிக்கையளித்த 10 பெண்கள்!
News
2021-ல் நம்பிக்கையளித்த 10 பெண்கள்!

2021-ல் மட்டுமல்ல இனிவரும் காலங்களிலும் பெண்கள் இவ்வுலகுக்கு நம்பிக்கையளித்துக்கொண்டேதான் இருப்பார்கள். ஏனென்றால், ஒவ்வொரு பெண்ணுமே நம்பிக்கையின் ஒளிக்கீற்றுதான்.

கல்லூரி மாணவியோ, குடும்பத்தை நிர்வகிப்பவரோ, அலுவலகம் செல்பவரோ, நாட்டை ஆள்பவரோ யாராக இருந்தாலும் பெண்கள் அதிசயமானவர்கள்தாம். வாழ்க்கையில் ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் உடல் உபாதைகள், உள்ளப் போராட்டங்கள், குடும்ப நெருக்கடிகள், சமூக சமநிலையின்மை, அரசியல் எல்லாமே அனைவருக்கும் ஒன்றுதான். இவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு ஒரு பெண்ணின் முகத்தில் மிளிரும் சிரிப்புதான் இந்த உலகத்தின் ஆகச்சிறந்த நம்பிக்கை. அப்படி அரசியல் முதல் விளையாட்டுவரை, உள்ளூர் தொடங்கி உலக நாடுகள் வரை, 2021-ம் ஆண்டு நம்பிக்கையளித்த டாப் 10 பெண்களைப் பற்றிய தொகுப்பு இதோ!

கமலா ஹாரிஸ்

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சியாமளா கோபால் மற்றும் ஜமைக்காவைச் சேர்ந்த டொனால்டு ஜெ.ஹாரிஸின் மகளான கமலா ஹாரிஸ், 2021-ல் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரானார். அமெரிக்க துணை அதிபராகும் முதல் ஆசிய-அமெரிக்கர் மற்றும் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கரும் கமலாதான். அமெரிக்க வரலாற்றில் இத்தகைய உயர் பதவி வகித்த முதல் பெண்ணும் இவர்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Kamala harris
Kamala harris
AP

மருத்துவ காரணங்களுக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், அந்த இடைப்பட்ட ஒரு மணி நேரம் தற்காலிக அதிபராகும் வாய்ப்ப்பும் கமலா ஹாரிஸுக்குக் கிடைத்தது. அமெரிக்கத் தேர்தல் முடிவுக்குப் பிறகு கமலா ஹாரிஸை அமெரிக்கா மட்டுமன்றி தமிழகமும் உச்சி மோந்தது ஸ்பெஷல் மொமென்ட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கீதா கோபிநாத்

இந்திய அமெரிக்கப் பொருளாதார அறிஞரான கீதா கோபிநாத், சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund - IMF) தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பதவி வகிக்கிறார். இவரின் பதவிக் காலம் 2022-ல் முடிய இருந்த நிலையில் ஐ.எம்.எஃப். இவரை முதல் துணை நிர்வாகத் தலைவராகப் பதவி உயர்வு செய்துள்ளது.

Gita Gopinath
Gita Gopinath
Twitter Photo:/ @GitaGopinath

இந்தப் பதவி ஐ.எம்.எஃப்பின் இரண்டாவது முக்கிய பதவியாகும். மைசூரில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்து, டெல்லிப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்று, சர்வதேச நாடுகள் உறுப்பினராக இருக்கும் பொருளாதார அமைப்பில் முக்கிய பதவிக்கு உயர்ந்திருக்கிற கீதா கோபிநாத் நம்பிக்கையின் மொத்த உருவம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹர்னாஸ் கவுர் சாந்து

2021-ல் நடந்த 70-வது பிரபஞ்ச அழகிப்போட்டியை வென்று, லாரா தத்தாவுக்குப் பிறகு 21 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார் பஞ்சாபைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து.

ஹர்னாஸ் கவுர் சாந்து
ஹர்னாஸ் கவுர் சாந்து

போட்டியின் இறுதிச் சுற்றில், ``இளம் பெண்கள் சந்திக்கும் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு உங்கள் அட்வைஸ் என்ன?" என்ற கேள்விக்கு, ``மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு உங்களை நீங்கள் நம்ப வேண்டும். என்னை நான் நம்பியதால்தான் இன்று இங்கு நிற்கிறேன்" என்று மெர்சலான பதிலைச் சொல்லி `பிரபஞ்ச அழகி' பட்டத்தைத் தனதாக்கினார் ஹர்னாஸ். அவரின் வார்த்தைகள் ஒவ்வொரு பெண்ணும் தனக்குத்தானே சூட்டிக்கொள்ள வேண்டிய தன்னம்பிக்கை மகுடம்.

மிதாலி ராஜ்

சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் அடித்த இரண்டாவது உலக வீராங்கனையாகவும், முதல் இந்திய வீராங்கனையாகவும் சாதனை படைத்துள்ளார் மிதாலி ராஜ். பெண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் குறைவாகவே நடைபெறுகின்றன. ஆனாலும் மிதாலி இத்தனை ரன்கள் அடித்து அசர வைத்திருக்கிறார்.

Mithali Raj | ENGvIND | Women's Cricket
Mithali Raj | ENGvIND | Women's Cricket
twitter.com/BCCIWomen

ஒருநாள் போட்டிகளில் 7,000 ரன்கள் அடித்த முதல் வீராங்கனையாகவும் சாதனை புரிந்துள்ளார். பெண்கள் கிரிக்கெட்டின் நம்பிக்கை ஐகானாக மிளிர்கிறார் மிதாலி ராஜ்.

ஆனி சிவா

பெற்றோர் எதிர்ப்பை மீறி 18 வயதில் காதலனைக் கரம் பிடித்தார் கேரளாவைச் சேர்ந்த ஆனி. 8 மாதக் குழந்தையுடன் கணவன் கைவிட, பெற்றோரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. பாட்டியின் குடிசை வீட்டில் தங்கி மலாசா பொருள்கள், திருவிழாக்களில் ஜூஸ், ஐஸ்க்ரீம் விற்பனை செய்து வந்தவர், இடையில் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி காவலர் தேர்வுக்குத் தயாராகி, வெற்றியும் கண்டார்.

போலீஸ் எஸ்.ஐ ஆனி சிவா
போலீஸ் எஸ்.ஐ ஆனி சிவா

அன்று ஐஸ்க்ரீம் விற்ற அதே ஊரில் எஸ்.ஐ போஸ்டிங். சீருடையில், போலீஸ் ஜீப் முன்னால் `ஸ்டைலா கெத்தா' அவர் கொடுத்த போஸை எந்த மாஸ் ஹீரோவுடனும் ஒப்பிட முடியாது. ``அன்று பாதுகாப்பு இல்லாமல் இருந்த நான், இன்று மக்களைப் பாதுகாக்கும் பணியில் இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்" நிமிர்ந்து நிற்கிறார் ஆனி.

குட்டியம்மா

கேரளாவின் குட்டியம்மா பாட்டிக்கு சிறு வயதில் பள்ளிக்குச் சென்று படிக்க ஆசை இருந்தும் சூழல் இடம் தரவில்லை. அப்போது விட்டதை 104-வது வயதில் பிடித்திருக்கிறார் பாட்டியம்மா.

குட்டியம்மா
குட்டியம்மா

கேரள அரசின் `அனைவருக்கும் கல்வி' என்ற திட்டத்தின் கீழ் 2021-ல் நடத்திய எழுத்தறிவு தேர்வில் 100-க்கு 89 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். கணிதத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளார். ``கற்பதற்கும் சாதிப்பதற்கும் வயது தடையில்லை" என பொக்கை வாயால் சிரிக்கிறார் குட்டியம்மா பாட்டி.

நிகிதா

2019-ல் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் விபூதி சங்கர் தவுந்தியாலின் மனைவி நிகிதா. கணவர் வழியில் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குத் தொண்டாற்ற நுழைவுத் தேர்வெழுதி வெற்றி பெற்றார்.

ராணுவத்தில் பதவியேற்ற நிகிதா
ராணுவத்தில் பதவியேற்ற நிகிதா

திருமணமாகி ஒரு வருடம் முடியும் முன்பே கணவர் வீர மரணம் அடைந்ததால், பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு ராணுவத்தில் சேர்ந்தார் நிகிதா. நாட்டை அளவில்லாமல் நேசிக்கும் நிகிதாவும், அவரது தேச பக்தியும் மக்களை நெகிழச் செய்திருக்கிறது. நாட்டுக்குத் தொண்டாற்ற ஆண், பெண் பேதம் தேவையில்லை. நாட்டுப் பற்று போதுமானது என்று நிரூபித்த நிகிதாவுக்கு சல்யூட்!

கிடாக்குழி மாரியம்மாள்

`கண்டா வரச் சொல்லுங்க' என்ற ஒற்றைப் பாடலின் மூலம் கவனம் ஈர்த்த கிடாக்குழி மாரியம்மாள், சிறு வயதிலிருந்தே நாட்டுப்புறப் பாடல்கள் பாடிக்கொண்டு இருந்தவர். இத்தனை வருடங்கள் கிடைக்காத பேரும் புகழும் இந்தப் பாடல் மூலம் 50 வயதில் கிடைத்துள்ளது.

மாரியம்மாள்
மாரியம்மாள்

இத்தனை கால போராட்டத்துக்குப் பிறகு மாரியம்மாளுக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம், பயிற்சியும் முயற்சியும் இருந்தால் வெற்றி எந்த வயதிலும் நம் தோள்களில் அமரும் என்பதற்குச் சான்று.

பி.வி.சிந்து

2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கம் வென்று, இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

PV Sindhu
PV Sindhu

வெற்றியைத் தக்க வைத்துக்கொண்டது மட்டுமன்றி, பல பெண்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளார் சிந்து.

ராஜேஸ்வரி

நவம்பர் மாதம் சென்னையில் பெய்த பெரும் மழையில் கீழ்ப்பாக்கம் கல்லறை அருகே மரம் முறிந்ததால் விபத்துக்குள்ளானார் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர். அவர் உயிரிழந்துவிட்டார் என யாரும் கண்டுகொள்ளாத நிலையில், குற்றுயிராகக் கிடந்தவரைத் தோளில் சுமந்து சென்று, ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார் சென்னை டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி. இவரின் இந்தத் துணிச்சலான செயலைப் பாராட்டி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

இவருக்கு மக்களிடமிருந்தும் சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்தன. மனிதநேயத்தையும் தைரியத்தையும் விதைத்திருக்கும் ராஜேஸ்வரி நம்பிக்கை நாயகி.

2021-ல் மட்டுமல்ல இனிவரும் காலங்களிலும் பெண்கள் இவ்வுலகுக்கு நம்பிக்கையளித்துக்கொண்டேதான் இருப்பார்கள். ஏனென்றால், ஒவ்வொரு பெண்ணுமே நம்பிக்கையின் ஒளிக்கீற்றுதான்.