Published:Updated:

'வேண்டும்' ஸ்பெஷல்... சாதிக்கத் தூண்டும் 22 தங்கப் பெண்கள்!

பல்வேறு துறைகளிலும் செயல்படுகிற இந்தப் பெண்கள் அளிக்கும் செய்தி நம்மில் பல மாற்றங்களை உருவாக்குவது உறுதி

அவள் விகடனின் 22-ம் ஆண்டு மலரில் 22 காரட் தங்கப் பெண்களை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம். இந்தப் பொன்மணிகள் தாங்கள் எடுத்த காரியத்தில் உள்ளத்தையும் உழைப்பையும் முழுமையாக செலுத்தி வெற்றி கண்டவர்கள். பணியோ, தொழிலோ, சேவையோ, போராட்டமோ... எதிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் ஈடுபடுகிறவர்கள்.

பல்வேறு துறைகளிலும் செயல்படுகிற இந்தப் பெண்கள் அளிக்கும் செய்தி நம்மில் பல மாற்றங்களை உருவாக்குவது உறுதி. இந்தப் பெண்கள் 'வேண்டும்' என்று சொல்கிற ஒவ்வொன்றும் நமக்கும் அவசியம் வேண்டும்!

2
வானதி

நல்விதையை மாணவர்களிடம் விதைக்க வேண்டும்!

திருச்சி மாவட்டம் வெங்கடாசலபுரம் பஞ்சாயத்தில் நடுநிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார் வானதி. இது இன்றைய அடையாளம். 15 ஆண்டுகளுக்கு முன்னர், அவர் அதே பஞ்சாயத்தின் தலைவர். `பஞ்சாயத்துத் தலைவர் டு ஆசிரியர் பணி'க்கான அவரது பாதை வலியும் வலிமையும் கலந்தது.

விரிவாக படிக்க க்ளிக் செய்க ... https://www.vikatan.com/lifestyle/women/vanathi-sharing-about-experiences-of-teacher-work

3
அமிர்தவர்ஷினி

புதுமைகள் படைக்க வேண்டும்!

“இசைக்கருவிகளில் ‘ராஜ வாத்தியம்’ என்று அழைக்கப்படுகிற தவிலை ஆண் கலைஞர்களே மிகவும் சிரமப்பட்டு வாசிப்பார்கள். ஆனால், கற்றுக்கொடுப்பதை மிக எளிதாக உள்வாங்கி அமிர்தவர்ஷினி அற்புதமாக வாசிக்கிறாள். 13 வயதிலேயே அமெரிக்கா வரை சென்று அவள் இசை நிகழ்ச்சி நடத்தியிருப்பதில் குருமார்கள் என்ற வகையில் எங்களுக்கெல்லாம் பெருமை’’ என்று புகழ்கிறார்கள் அமிர்தவர்ஷினியின் குரு நாதர்களான ஆதிச்சபுரம் இராமதாஸ் மற்றும் ‘கலைமாமணி’ கோவிலூர் கல்யாணசுந்தரம்.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/news/women/interesting-story-of-thavil-player-amruthavarshini

4
துளசி ஹெலன்.

தற்காப்புக்கலையும் அவசியம் வேண்டும்!

சில ஆண்டுகளுக்கு முன், பாலியல் தொல்லைகளை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக விளையாட்டில் இருந்து முடக்கப்பட்ட துளசி ஹெலன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். பகுதி நேர ஆட்டோ ஓட்டுநர், மற்ற நேரத்தில் குத்துச்சண்டை, பாடி பில்டிங் பயிற்சி என பிஸியாக இருக்கிறார். இந்தியாவின் ‘லேடி முகமது அலி’ என்று கொண்டாடப்பட்டவர் குத்துச்சண்டை வீராங்கனை துளசி ஹெலன்.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/news/healthy/thulasi-helen-sharing-about-martial-arts

5
லதா

பசி போக்கும் மனம் வேண்டும்!

கோவையின் சாலையோர மனிதர்களைத் தேடித் தேடி தினமும் உணவு அளிக்கிறார் பொருளாதாரப் பட்டதாரியான லதா என்கிற வெண்ணிலா. ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் இவர் தன் வருமானம் மூலம் மட்டுமே இதைச் செய்கிறார்.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/lifestyle/women/vennila-sharing-about-food-work-experience

6
வசந்தகுமாரி

களத்தில் இறங்கி போராட வேண்டும்!

நீலகிரி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றம் எந்த திசையில் நடந்தாலும் முதல் நபராகக் குரல் கொடுப்பவர் வசந்தகுமாரி. எந்தப் பெண்ணுக்குப் பிரச்னை என்றாலும் உடனே இவரைத்தான் அழைக்கிறார்கள்.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/lifestyle/women/get-down-on-the-field-and-fight

7
பூஜா குமார்

மக்களைக் கேள்வி கேட்க வைக்க வேண்டும்!

கடல் பாதுகாப்புக்காகவும் கடல்சார்ந்து வாழும் மீனவ மக்களுக்காகவும் தொடர்ந்து போராடிவரும் சூழல் போராளி பூஜா குமார். மீனவ மக்கள் தங்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் போராடும் தைரியத்தையும் வலிமையையும் அறிவுசார் பின்புலத்தையும் அவர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/lifestyle/women/pooja-kumar-sharing-about-environment-militant

8
நஸ்ரின்

உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்!

``வெற்றிதான் மகிழ்ச்சியைத் தரும்னு சொல்வாங்க. ஆனா, மகிழ்ச்சியா இருந்தால்தான் வெற்றியடைய முடியும்'' என்கிறார் தொழில்முனைவோர் நஸ்ரின். ஒரு பிசினஸை நடத்தவே திக்குமுக்காடுவோர் மத்தியில் பல பிசினஸ்களை வெற்றிகரமாக இவர் நடத்துவதற்குக் காரணம், திட்டமிட்டு நேரத்தைப் பயன்படுத்துவதுதான்!

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/lifestyle/women/nasrin-sharing-about-colour-therapy

9
சண்முகப்பிரியா

காலத்துக்கேற்ற பிசினஸ் வேண்டும்!

25 வாட்ஸ்அப் குரூப்கள் மூலம் புடவை பிசினஸ் செய்து மாதம் 25 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சண்முகப்பிரியா. அதோடு, 3,000 பெண்களுக்கு ஆன்லைன் மூலம் பிசினஸ் வாய்ப்பும் வழங்கியிருக்கிறார்.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/lifestyle/women/shanmuga-priya-talking-about-whatsapp-group-sarees-business

10
ஜோதி

மனதில் உறுதி வேண்டும்!

பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் 10 வயதில் இருந்தபோது தாயும் நான்கு மூத்த சகோதரிகளும் மனநல பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை, துயரங்கள், போராட்டங்கள் என அனைத்தையும் தனியொருத்தியாகச் சமாளித்துவருகிறார்.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/news/women/inspirational-real-life-stories-hard-work

11
நமீதா அம்மு

மாற்றத்தை நாமே தொடங்க வேண்டும்!

மாற்றத்தை நாமே தொடங்க வேண்டும்!

சமுத்திரக்கனி இயக்கும் நாடோடிகள்-2 படத்தில் தமிழ்நாட்டில் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகப் பதவியேற்ற பிரித்திகா யாசினியின் ரோலில் நடிக்கிறார். அந்தப் படத்தில் பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த `மிஸ் டிரான்ஸ் இந்தியா' என்ற பட்டத்தைத் தொடர்ந்து ஸ்பெயினில் நடைபெற உள்ள `மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல்' பிரிவுக்குத் தேர்வாகி சர்வதேச அளவில் தடம் பதித்துக்கொண்டிருக்கிறார் நமீதா அம்மு.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/news/general-news/transgender-namitha-ammu-talking-about-miss-trans-india

12
நாகலட்சுமி சண்முகம்

பெண்ணின் வெற்றிக்குப் பின் ஆண் வேண்டும்!

யுவால் நோவா ஹராரியின் ‘சேப்பியன்ஸ்’, பாலோ கொயலோவின் ‘ரசவாதி’ உள்ளிட்ட முக்கியமான நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர் நாகலட்சுமி சண்முகம். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மிகுந்த புலமை இருப்பவர்களால் மட்டுமே நூலின் நடையும் உள்ளடக்கமும் சிதையாத முறையில் மொழிபெயர்க்க முடியும்.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/lifestyle/women/nagalakshmi-shanmugam-talking-about-writing-books

13
கிரேட் கோல்ஸ்

ஆரோக்கியமான பால்யத்தை அளிக்க வேண்டும்!

குழந்தைகளுக்காக இயங்கும் ஸ்போர்ட்ஸ் அகாடமிகளில் முக்கியமானது, சென்னையின் `கிரேட் கோல்ஸ்’. ஆறு கிளைகளைக்கொண்ட இந்த அகாடமி, சந்தியா ராஜன், பிரியா கோபாலன் ஆகியோரின் தோழமையில் உருவானது. பிரியா, அடிப்படையில் இன்ஜினீயர். சந்தியா, குழந்தைகளுக்கான அறிவியல் ஆசிரியர். சில வருடங்களுக்கு முன் ஒருவரை ஒருவர் அறிந்திராத இவர்கள், இன்று இவ்வளவு பெரிய அகாடமியை இணைந்து நடத்துவதன் பின்னணியில் சுவாரஸ்யமான ஒரு ஃப்ளாஷ்பேக் உண்டு.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/lifestyle/women/provide-a-healthy-diet

14
கோகிலா

வாழ்வில் நம்பிக்கை வேண்டும்!

மனநலம் பாதித்த தந்தை, துரத்தும் கல்விக்கடன், சிதைந்துபோன ஆசிரியர் கனவு... கோகிலா என்கிற இந்த முதுகலை பட்டதாரி இன்று நடைபாதை வியாபாரி...

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/lifestyle/women/have-faith-in-life

15
முருகேஷ்வரி

பாக்கியம் செய்ய வேண்டும்!

`செத்துட்டா தெய்வமாகிட்டாங்கன்னு சொல்வாங்க. அந்தத் தெய்வத்தைத் தொட்டுத் தூக்கி காரியம் பண்றதை பாக்கியமா நினைக்கிறேன்'' என்கிறார் தனியொரு பெண்ணாக, மயானத்தில் பிணம் எரிக்கும் பணியைச் செய்துவரும் முருகேஷ்வரி. தேனி மாவட்டம், போடி நகராட்சி எரிவாயு தகன மேடையில் பிணம் எரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் முருகேஷ்வரி.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/lifestyle/women/inspirational-real-life-stories-hard-work-2

16
ஸ்வாதி ஸ்ரீஅரவிந்த்

குழந்தைகளின் நலனுக்கு உதவ வேண்டும்!

எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத வகையில், குழந்தைகளுக்கான பிரத்யேக டயப்பர் மற்றும் உடைகளைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீஅரவிந்த். தொழில் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஈட்டி, பிசினஸில் வேகமாக வளர்ந்து வருகிறார்.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/lifestyle/women/help-for-the-welfare-of-children

17

இயற்கை வேளாண்மையே இனி வேண்டும்!

இயற்கை விவசாயி, விவசாய சங்கத் தலைவர் என நிறைய முகங்கள் உண்டு ரங்கநாயகிக்கு. சோகம் அப்பிய வாழ்வை உடைத்து வெளியே வந்து சேவை செய்வதில் சிறக்கிறார் இவர்! சிதம்பரத்துக்கு அருகேயுள்ள வடமூர் கிராமத்தில் ரங்கநாயகியை பசுமை தேவதையாகவே பார்க்கிறார்கள் மக்கள்.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/lifestyle/women/ranganayaki-talking-about-natural-agriculture-farming

18

அன்புசூழ் உலகை உருவாக்க வேண்டும்!

சாலையோரங்களில் ஆதரவின்றி சுற்றித்திரியும் கைவிடப்பட்ட முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, மருத்துவ சிகிச்சை, உணவு, உடை வழங்கி, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கிறார் மனிஷா. இப்படி இவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாத்து, பராமரித்த ஆதரவற்றவர்களின் எண்ணிக்கை 130.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/lifestyle/women/we-need-to-create-a-world-of-love

19

கஷ்டங்களைத் தாண்டி முன்னேற வேண்டும்!

வரதட்சிணைக் கொடுமையால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களைச் சந்தித்த சத்யா, துவண்டுவிடாமல் இன்று முயல் பண்ணை வைத்து தானும் முன்னேறி பலரையும் முன்னேற்றிக்கொண்டிருக்கிறார்.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/lifestyle/women/progress-over-difficulties

20

பிடித்த விஷயத்தையே வேலையாக மாற்ற வேண்டும்!

பயணங்களின் பிரியராக இருந்தவர் ரேகா ராஜா. இன்று பயணங்களை ஏற்பாடு செய்யும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார். ``பிடித்த வேலையை மனதாரச் செய்கிறேன். இந்த அதிர்ஷ்டம் எத்தனை பேருக்கு வாய்க்கும்!'' என்கிறவரின் பிசினஸ் பயணமும் இனிதாக இருக்கிறது.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/lifestyle/women/the-favorite-thing-to-do-is-to-change-work

21

ஊருக்கு நல்லது செய்ய வேண்டும்!

தமிழ்நாடெங்கும் தண்ணீருக்கான குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்க, சின்னச் சின்ன நீர்நிலைகள் எல்லாம் தூர்வாராமல் புதர் மண்டிக்கிடக்க, நமக்கான முன்னெடுப்பை நாமே செய்வோம் என மக்களை ஒன்றுதிரட்டி தங்கள் ஊரில் இரண்டு குளங்களை தூர்வாரி அசத்தியிருக்கிறார் தேனி காமாட்சிபுரத்தைச் சேர்ந்த வாழ்வரசி பாண்டியன்.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/lifestyle/women/must-do-good-for-the-town

22

குழந்தைகளை மகிழ்விக்க வேண்டும்!

``ஸ்கூலுக்குப் போய்ட்டு வர்ற வழியில இருக்கிற காய்ந்த இலைகள், சின்னச் சின்னக் கற்களை பையில் போட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்து ஏதாவது செய்வேன். `ஸ்கூல் பையை இப்படியா குப்பையா வெச்சுக்கறது’ன்னு அம்மா திட்டுவாங்க. ஒருமுறை சூடும் வெச்சிருக்காங்க’’ என்று சிரிக்கிறார் மோகன வாணி. கோயம்புத்தூரைச் சேர்ந்த மோகன வாணி, பள்ளிகள் மற்றும் குழந்தைகள் நிகழ்ச்சிகளில் பனை ஓலையில் பொம்மைகள் செய்யக் கற்றுக்கொடுக்கிறார். நிகழ்ச்சிகளுக்குப் பனை ஓலை பொம்மைகள் செய்துதருகிறார்.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/lifestyle/women/have-fun-with-the-kids

23

கடைசி நாள் வரை கதை சொல்ல வேண்டும்!

சந்தன நிற காட்டன் புடவையில் மலர்ந்த பூசணிப்பூப்போல உட்கார்ந்திருந்த கல்பகம், பாலமந்திர் காமராஜர் அறக்கட்டளையில் இருக்கிற குழந்தைகளின் கதைசொல்லி. வயது 86.

விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://www.vikatan.com/lifestyle/women/tell-the-story-till-the-last-day

அடுத்த கட்டுரைக்கு