Published:Updated:

குண்டுவெடிப்பில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்: மல்லிகார்ஜுன கார்கே

விகடன் விமர்சனக்குழு
குண்டுவெடிப்பில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்: மல்லிகார்ஜுன கார்கே
குண்டுவெடிப்பில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்: மல்லிகார்ஜுன கார்கே
குண்டுவெடிப்பில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்: மல்லிகார்ஜுன கார்கே

பெங்களூர்: கவுகாத்தி ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான இளம் பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் கார்கே அறிவித்துள்ளார்.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெங்களூர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், சுவாதி (வயது 24) என்பவர் பலியானார். மேலும் பலர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக, பெங்களூரில் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''பெங்களூர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 'எஸ்-4', 'எஸ்-5' ஆகிய 2 பெட்டிகளில் குண்டு வெடித்து உள்ளது. அடுத்தடுத்த நடந்த இந்த குண்டுவெடிப்பில் சுவாதி என்ற பெண் பலியானார். பெங்களூரில் இருந்து ஆந்திர மாநிலம் குண்டூருக்கு சென்றபோது, அவருக்கு இந்த துயர கதி நேர்ந்துள்ளது.

மேலும், 2 பேர் பலத்த காயமும், 7 பேர் லேசான காயமும் அடைந்து உள்ளனர். குண்டுவெடிப்பில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும். அனைவரின் சிகிச்சை செலவையும் ரெயில்வே துறை ஏற்றுக்கொள்ளும்.

குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததும் ரயில்வே துறை அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். குண்டுவெடிப்பு சம்பவத்துக்கான காரணங்கள் குறித்து கண்டறிவதற்காக டெல்லியில் இருந்து நிபுணர் ஒருவர் சென்னைக்கு வருகிறார். குண்டுவெடிப்பு தொடர்பாக ரயில்வே வாரியமும், தமிழக போலீசாரும் ஒருங்கிணைந்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். ரயில்வே சார்பில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரிவான அறிக்கை கிடைத்த பிறகே குண்டுவெடிப்புக்கான காரணங்கள் குறித்து தெரியவரும்" என்றார்.