Published:Updated:

அது ஒரு கல்ச்சுரல்ஸ் காலம்!

கல்ச்சுரல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கல்ச்சுரல்ஸ்

வீ. ஹேமவர்த்தினி

அது ஒரு கல்ச்சுரல்ஸ் காலம்!

வீ. ஹேமவர்த்தினி

Published:Updated:
கல்ச்சுரல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கல்ச்சுரல்ஸ்

கொரோனாவால காலேஜை மட்டுமல்ல... கல்ச்சுரல்ஸையும் ரொம்ப மிஸ் செய்றோம் நாங்க. ‘அது ஒரு கல்ச்சுரல்ஸ் காலம்’னு என்னோட சேர்ந்து நீங்களும் உங்க கல்ச்சுரல்ஸ் நாள்களை ரீவைண்ட் பண்ணிக்கலாம் வாங்க!

கல்ச்சுரல்ஸுக்கான சுற்றறிக்கை வந்ததுமே ஒருவித உற்சாகம் தொற்றிக்கொள்ளும். படிப்பாளி ‘கிளாஸ் ரெப்’ இப்போது கொஞ்சம் ஓரமாகப் போற, ‘கல்ச்சுரல் கேர்ள்ஸ்’ கெத்தாக முன்னுக்கு வருவோம். ‘ஏய் நீயெல்லாம் நல்லாத்தானே ஆடுவ வாப்பா’ என்று பெயர்ப்பட்டியல் தயாராகும். அடுத்து பாட்டு செலக்‌ஷன். ஒரு பாடல் அனைவராலும் ஒருமனதாக ஓ.கே செய்யப்படுவதற்குள் பிரளயம்தான். பிராக்டீஸ் ஆரம்பிக்கும்போது, ‘இல்ல இந்த ஸ்டெப் எனக்குப் பிடிக்கல, நல்லாயில்ல’ என்று ஒருத்தி சொல்ல, ‘அடியே, நீதான் இத நல்லா ஆடல, உனக்கு வரலைன்னு சொல்லு’ என்று இன்னொருத்தி டென்ஷன் ஆக, இப்படி சின்னச் சின்ன சண்டைகள், சமாதானங்களுடன் நாள்கள் சென்று கொண் டிருக்க... வந்தேவிடும் கல்ச்சுரல்ஸ் டே.

அது ஒரு கல்ச்சுரல்ஸ் காலம்!

வீட்டிலிருந்து மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டிய துண்டுச்சீட்டுப் பட்டியலை நூறுமுறை சரிபார்த்து எடுத்துக்கொண்டு ஆடிட்டோரியத்துக்கு ஓடுவோம். மேடை ஏறுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தீமூட்டி, காலையிலிருந்து காய வைத்திருக்கும் எங்கள் பறைகளுக்குச் சூடு காட்டிக் கொள்வோம்.

‘அடுத்து நீங்கதான் போங்க’ என்று அனுப்பப்பட்டு மேடையில் நிற்கும் நொடி, இதயமெல்லாம் ‘திக் திக்’. பாட்டுபோட்டதும் உடம்புக்குள் ஏதோ ஒன்று வந்திறங்கியதுபோல ஆட ஆரம்பிக்க, எங்கள் பறையொலியுடன் விசில் களும் கைதட்டல்களும் துணைக்கு வர, அடுத்த சில நிமிடங்களுக்கு ஆரவாரம் அன்லிமிடெட். கேர்ள்ஸ் செம்ம்ம்ம ஆட்டம் போட, மிடுக்காக அமர்ந்திருக்கும் அலுவலர்களையும் தவிர்க்க முடியாமல் தோள்குலுக்க வைத்துவிடும் பறையிசை. மேடையைவிட்டு இறங்கும் வரை கேட்டுக்கொண்டே இருக்கும் கைதட்டல் போதைதான், ஒவ்வொரு வருடமும் கல்ச்சுரல்ஸை எதிர்பார்த்து நம்மை காக்க வைப்பது.

அன்றிரவு கண்மூடுகையில், அத்தருணத்தை நினைவு கூரும்போது கண்களில் வழியும் நீருக்கு `மகிழ்ச்சி' என்று பெயர்!மேடையை விட்டு இறங்கும்வரை கேட்டுக் கொண்டே இருக்கும் கைதட்டல் போதைதான், ஒவ்வொரு வருடமும் கல்சுரல்ஸை எதிர்பார்த்து நம்மை காக்க வைப்பது.