என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

ஷாப்பிங், ஈட்டிங்... ஃபிரெண்ட்ஸுடன் அவுட்டிங்!

2K kids
பிரீமியம் ஸ்டோரி
News
2K kids

2K kids

இ.சரண்யா

புதுக்கோட்டையில காலேஜ் கேர்ள்ஸ் அவுட்டிங் போனா எப்படிப் போவாங்க, எங்க போவாங்க, என்ன செய்வாங்க?

ஜெஸ்ஸி, சங்கீதா, இனியா, சந்தியா, நந்தினி அர்ச்சனா மற்றும் சரண்யா போன அவுட்டிங்ல நாமளும் கலந்துகிட்டோம்.

‘`மாசத்துக்கு நாலு அவுட்டிங், ஒரு மூவினு டைம்டேபிள் போட்டு சின்சியரா ஃபாலோ பண்ணிட்டு இருந்த நம்மள, இந்தக் கொரோனா 10 மாசமா வீட்டுக்குள்ள போட்டு கதவை சாத்திடுச்சு. இன்னிக்குத்தான் சாபவிமோசனம் பெற்று ஒரு மீட்டிங்கை போட்டிருக்கோம். ஹை ஃபை’’ என்று அர்ச்சனா சொல்ல, அனைவரும் கேங் மூடுக்கு வந்தார்கள். பஸ்ஸில் ஏறியவர்கள் பஜாருக்கு வந்து சேர்ந்தார்கள்.

ஷாப்பிங், ஈட்டிங்... ஃபிரெண்ட்ஸுடன் அவுட்டிங்!

‘`நடக்கக்கூட முடியாம கூட்டமிருக்கும் கடைவீதி, இப்போ இப்படி வெறிச்சோடி போயிருக்கே’’ என்று நாட்டின் பொருளாதாரம் பற்றி வருத்தப்பட்டஜெஸ்ஸி, ‘`சரி ஒரு டிரஸ் எடுக்கணும்... எந்தக் கடைக்குப் போகலாம்...’’ என்றார். சாத்தாரம்மன் கோயில் அருகில் இருக்கும் ஒரு கடைக்குச் செல்ல ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

நடை வேகமெடுக்க, தோழிகளில் ஒருவர் போன் பேசிக்கொண்டே வந்தார். ‘மம்மி சொன்ன பையன கட்டுனா டார்ச்சர் இல்லடி, நீ டாவடிக்கும் பையன கட்டுனா லைஃப் போயிரும்டி’ என்று அவரை மற்றவர்கள் கேலி செய்தனர். ‘காலேஜ் பொண்ணுக்குப் போன் பண்ணி லைஃப் இன்ஷூரன்ஸ் போடச் சொல்றீங்களே... ஒரு நியாயம் வேண்டாமானு, நானே அந்த கஸ்டமர் சர்வீஸ் கால்ல கதறிட்டு வர்றேன்... அதுக்குள்ள நீங்க காதல் கதை கட்டிட்டீங் களா?’ - அவர் அடிக்கத் துரத்த, அதற்குள் கடை வந்துவிட்டது.

ஷாப்பிங், ஈட்டிங்... ஃபிரெண்ட்ஸுடன் அவுட்டிங்!

‘`அண்ணே, நியூ கலெக்‌ஷன் காட்டுங்க...’’ என்றவர்களை, ‘`இங்க எல்லாமே நியூதாம்மா...’’ என்று வரவேற்றார் கடைக்காரர். பல ரேக்கு களை பிரித்துப்போட்ட பின்னர் ஒருவழியாக டிரஸ் பில் ஆனது. ‘`சரி டிரஸ்ஸுக்கு மேட்ச்சிங்கா பிங்க் வளையல், கம்மல் எல்லாம் வாங்கணும்’’ என்று அடுத்த ரவுண்டு ஷாப்பிங்குக்கு ரெடியானார் சரண்யா.

‘`லோட்டஸ் பிங்க், பேபி பிங்க், ராணி பிங்க், ஹாட் பிங்க்... எல்லா ஷேட்ஸும் காட்டுங்க’’ என்று சரண்யா கேட்க, ‘வாங்குறது பஞ்சுமிட்டாய் கலர், இதுல பேரை பாரு’ என்ற கடைக்காரரின் மைண்டு வாய்ஸ் நமக்கும் கேட்டது.

‘`ஷாப்பிங் முடுஞ்சுருச்சு. ஆனா, டைம் இருக்கே’’ என்றவர்கள், ஹக்கீம் பிரியாணி கடையில் சில பிளேட்டுகள் சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, ஆம்லெட் என்று ஆர்டர் செய்த பின்னர், மறக்காமல் அந்த சம்பிரதாயத்தை செய்தனர். ‘லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள!’

‘`அடுத்து புதுக்குளத்

துக்குப் போகலாமா?” என்று அர்ச்சனா கேட்க, அவருக்கு ஐந்து ஓட்டுகளும் விழ, பஸ் ஏறினார்கள் அனைவரும். ‘`என்னடி இங்க வெறும் லவ்வர்ஸா இருக்காங்க...’’ என்று ஜெஸ்ஸி ஜெர்க் ஆக, ‘`சித்தன்னவாசலுக்கு அடுத்து அவங்களுக்குப் பிடிச்ச ஸ்பாட் இதான்’’ என்றார் சரண்யா.

‘`நாம எல்லோரும் இப்படி சேர்ந்து சுத்தி எவ்ளோ நாளாச்சு?! இன்னிக்கு செமையா போச்சு. மணி 5.30... இப்போ பஸ் ஏறினா தான் வீட்டுக்கு நேரத்துக்குப் போய் சேர முடியும். எல்லாரும் வீட்டுக்குப் போ யிட்டு வாட்ஸ்அப் அனுப் புங்க. மாஸ்க், சானிட்டைஸர் எல்லாம் ஒழுங்கா போட்டு கொரோனாவை உங்ககிட்ட இருந்து காப்பாத்துங்க” - குறும்பாகச் சொன்னார் ஜெஸ்ஸி.

பை பை!