Published:Updated:

மீதேன் திட்டத்தை எதிர்த்து பெண்கள் போராட மேத்தா பட்கர் வலியுறுத்தல்!

மீதேன் திட்டத்தை எதிர்த்து பெண்கள் போராட மேத்தா பட்கர் வலியுறுத்தல்!
மீதேன் திட்டத்தை எதிர்த்து பெண்கள் போராட மேத்தா பட்கர் வலியுறுத்தல்!

தஞ்சாவூர்: மீதேன் திட்டத்தை எதிர்த்து பெண்கள் போராட வேண்டும் என்று சமூக சேவகி மேத்தா பட்கர் வலியுறுத்தி உள்ளார்.

மீதேன் திட்டத்தை எதிர்த்து பெண்கள் போராட மேத்தா பட்கர் வலியுறுத்தல்!

நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள பழைய பாளையம், திருநகரி, திருவாரூர் மாவட்டம் வெள்ளக்குடி, எருக்காட்டூர், தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ஆகிய ஊர்களில் சுற்றுப்பயணம் செய்தார் சமூக சேவகி மேதா பட்கர். அப்போது, மக்களிடம் மீதேன் திட்டத்தின் பாதிப்புக்களையும், அதனால் ஏற்படும் சுற்றுசூழல் சீர்கேடுகளையும் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2,000 மீட்டர் ஆழத்தில் துளையிடுகிறார்கள். இது நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. இதனால் 12 கிராமங்களுக்கு மேல் அடியோடு அழிந்துபோகின்ற நிலை உருவாகி இருக்கிறது. ஒரு கிராமத்தில் உள்ள 23 குடும்பங்களை வெளியேற்ற நினைக்கிறார்கள்.

மீதேன் திட்டத்தை எதிர்த்து பெண்கள் போராட மேத்தா பட்கர் வலியுறுத்தல்!

மீதேன் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்கக் கூடாது. மக்களிடம் பள்ளிக்கூடம் கட்டித்தருவதாக சொல்லி நிலத்தை கையகப்படுத்துகிறார்கள் கார்பரேட் நிறுவனத்தினர். வேறொரு இடத்திற்கான அனுமதியை வைத்துக் கொண்டு இங்கு வந்து துளைபோட்டு மீதேன் திட்டத்தை செயல்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். ஒட்டு மொத்த டெல்டா விவாசயத்தை அழிக்க நினைக்கிறார்கள்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம், ஆழ்துளையிடும்போது வெளிப்படும் தண்ணீர் நச்சுத்தன்மை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், அது பருகிய ஆடு, மாடுகள் இறந்து போயிருக்கின்றன. இரவு நேரங்களில் துளையிடுகிறார்கள். புகார் கொடுக்கச் சென்றால் அவர்களையும் மிரட்டுகிறார்கள். மீத்தேன் திட்டத்தை ஓ.என்.ஜி.சி. மூலம் எடுத்து வருகிறார்கள். காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி, மோடியின் பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி எல்லா அரசுகளுமே பன்னாட்டு கம்பெனிகளுக்கு துணைபோகின்ற அரசாங்கமாகத்தான் இருக்கிறது.

இதற்காக நடத்தப்படும் போராட்டங்களில் பெண்கள் கலந்து கொண்டு போராட வேண்டும். அப்போதுதான், இந்த போராட்டத்தில் நாம் ஜெயிக்க முடியும். இதை உடனே இந்திய அரசு தடை செய்ய வேண்டும், இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்" என்றார்.

ஏ.ராம்

படங்கள்: 
கே.குணசீலன்