
மகளிர் தின மாரத்தான்
சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் முதல் முறையாக மூன்று வெவ்வேறு நகரங்களில் ஒரே நேரத்தில் மாரத்தான் நடைபெற்றது. இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களுரூ, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இந்த மாரத்தான் நடந்தது. இதனை குவாண்ட-ஜி என்ற அமைப்பு நடத்தியது.

வெவ்வேறு நகரங்களில் நடைபெற்றாலும் இந்த வோமனதான் (womanathon) எடுத்து கொண்ட தலைப்பு ஒன்றுதான். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் அவர்களின் மரியாதை இதை அவர்களுக்கு உறுதி செய்வதுதான்.

சென்னையில் நடைபெற்ற மாரத்தானில் நடிகர் தருண் குமார், இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் காவல்துறை அதிகாரி ராஜேஷ் தாஸ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

10, 5 மற்றும் 3 கிலோ மீட்டர் என மூன்று பிரிவாக நடைபெற்ற இந்த மாரத்தானில் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- அ .பார்த்திபன்
படங்கள்: டி.ஆரோன் பிரின்ஸ் காட்ஸன்
(மாணவப் பத்திரிகையாளர்கள்)