Published:Updated:

நீ சொல்வதை கேட்கிறேன்... கொலைகாரனிடம் கெஞ்சிய இந்திய பெண் பொறியாளர்!

Vikatan Correspondent
நீ சொல்வதை கேட்கிறேன்... கொலைகாரனிடம் கெஞ்சிய இந்திய பெண் பொறியாளர்!
நீ சொல்வதை கேட்கிறேன்... கொலைகாரனிடம் கெஞ்சிய இந்திய பெண் பொறியாளர்!
நீ சொல்வதை கேட்கிறேன்... கொலைகாரனிடம் கெஞ்சிய இந்திய பெண் பொறியாளர்!

சிட்னி: ஆஸ்திரேலியாவில் படுகொலை செய்யப்பட்ட இந்திய பெண் பொறியாளர், கொலைகாரனிடம், நீ சொல்வதை கேட்கிறேன், என்னை உயிருடன் விட்டுவிடுமாறு கெஞ்சிய தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த பிரபா அருண் குமார் என்பவர் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

வழக்கம் போல கடந்த 7ஆம் தேதி இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு பிரபா திரும்பிக்கொண்டிருந்த போது மர்ம ஆசாமி ஒருவன் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பிவிட்டான். கத்தியால் குத்தப்பட்ட பிரபா உயிரிழந்தார். இது தொடர்பாக சிட்னி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபா பெங்களூரில் உள்ள தனது கணவரிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றது. தற்போது சிட்னியில் இருக்கும் அருண் குமாரிடம் காவல்துறையினர் நடந்ததை கேட்டு அறிந்துள்ளனர்.

டி.வி. ஒன்றுக்கு அருண்குமார் அளித்த பேட்டியில், எனது மனைவி, கொலைகாரன் அருகே வருவதை பார்த்து உள்ளார். கொலைகாரன் அருகே நெருங்கியபோது, எனது மனைவி என்னை காயப்படுத்தாதே என்று கத்தினார். நீ சொல்வதை கேட்கிறேன், என்னை உயிருடன் விட்டுவிடு என்று கெஞ்சினார். பின்னர் எனது மனைவி என்னை கத்தியால் குத்திவிட்டான் என்று கூறிய சத்தம் செல்போனில் கேட்டது. பின்னர் எதுவும் செல்போனில் கேட்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

பிரபாவின் கழுத்துப் பகுதியில் மர்மநபர் கத்தியால் வெட்டியதை அடுத்து அவர் உயிரிழந்தார் என்று காவல்துறை தரப்பு கூறுகிறது. பிரபாவின் தோழியும் காவல்துறையினரிடம் நடந்ததை கூறியுள்ளார்.