Published:Updated:

வயது 50; தொழில்: வாழைப்பழ வியாபாரம்... திருநங்கை அம்பிகாவின் ஒருநாள்! #VikatanPhotoStory

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகில் உள்ள கோமலை சேர்ந்த 50 வயதான திருநங்கை அம்பிகா வாழைப்பழ வியாபாரம் செய்து வருகிறார். அவரின் ஒருநாள் படங்களாக இங்கே...

அம்பிகா
அம்பிகா
தினமும் காலை 6 மணிக்கு எழுந்து தன் அன்றாட வேலைகளை செய்யத் தொடங்குகிறார்

காலையில் வீட்டு வேலைகளை முடித்தபிறகு வீட்டிலிருந்து சற்று தொலைவிலுள்ள தன் வாழைப்பழக்  கடைக்குச் செல்லத் தயாராகும் அம்பிகா

தினமும் தன் கடைக்கு அருகில் உள்ள இராமலிங்க அடிகளின் உருவப்  படத்திற்கு இரண்டு வாழைப் பழங்களை வைத்து வணங்கிவிட்டே வியாபாரத்தை தொடங்குவது இவரின் வழக்கம்.

வாழைத் தாரை அறுத்து பழங்களை சீப்புகளாக்கி வியாபாரத்தைத் துவங்குகிறார்

வாழைப் பழங்கள் வாங்குபவர்கள் காசை குறைத்துகொடுத்தாலோ அல்லது  காசு இல்லாமல் பசிக்கு கேட்டாலோ சிரித்துக் கொண்டே முகம் சுளிக்காமல் பழங்களை தந்து வருகிறார்

தன் குடும்ப உறுப்பினர்கள் போலவே அனை வரையும் பாவித்து பழகும் இவர் தன்னை அனைவரும் வயது வித்தியாசம் இல்லாமல் `அம்பிகா' என்று தனது பெயரை கூறி அழைக்கவே விரும்புகிறார்.

பெரும்பாலும் மதிய உணவை வீட்டிலிருந்தே எடுத்து வரும் இவர், அப்படி எடுத்து வராத நேரங்களில் கடைக்கு அருகில் உள்ள பரோட்டா கடையில் பரோட்டா வாங்கிச் சாப்பிடுகிறார்

தன் தாயை இப்போது போல எப்போதும் தானே கவனித்துக் கொள்ளவேண்டும் என்று கூறும் அம்பிகா மதிய உணவு உண்ட பிறகு கடைக்கு வரும் தன் தாயிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம்

காலையில் பள்ளி சென்ற தனது பேத்தி மற்றும் அருகில் வசிக்கும் பள்ளி குழந்தைகளின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அம்பிகா மாலை நேரங்களில் தினசரி பேப்பர் படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்

பள்ளி முடிந்து வந்த தனது பேத்தி மற்றும் மற்ற குழந்தைகளுடன் சிறிது நேரம் சிரித்து பேசி மகிழ்கின்றார்

குழந்தைகளுடன் செல்போனில் வாட்ஸ்அப் மற்றும்
டிக்டாக் வீடியோக்களை பார்த்து மகிழ்வது இவருக்கு பிடித்த பொழுதுபோக்கு.
குழந்தைகளுடன் செல்போனில் வாட்ஸ்அப் மற்றும் டிக்டாக் வீடியோக்களை பார்த்து மகிழ்வது இவருக்கு பிடித்த பொழுதுபோக்கு.
இரவு வியாபாரத்தை முடித்து சுமார் பத்து மணி அளவில் வீட்டுக்குச்    செல்லும் திருநங்கை அம்பிகா