Published:Updated:

வித்யாபாலன் விளம்பரத்துக்கு வெற்றி : ஆடுகளை விற்று வீட்டுக்கு கழிவறை கட்டிய 102 வயது மூதாட்டி!

டுகளை விற்று, 102 வயது மூதாட்டி ஒருவர் வீட்டுக்கு கழிவறை கட்டியுள்ளார்.
 
வித்யாபாலன் விளம்பரத்துக்கு வெற்றி : ஆடுகளை விற்று வீட்டுக்கு கழிவறை கட்டிய 102 வயது மூதாட்டி!

சட்டிஸ்கர் மாநிலம் கோதாபரி கிராமத்தில் வசித்து வருபவர் குவார்பாய் யாதவ். 102 வயது மூதாட்டி. ஆடு மேய்ப்பதுதான் இவரது தொழில். பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டம் குவார்பாயை கவர்ந்து இருக்கிறது. ‘கழிப்பறை கட்டி பயன்படுத்துங்கள்‘ என்ற வித்யாபாலன் நடித்த விளம்பரத்தையும் குவார்பாய் பார்த்துள்ளார்.

இதையடுத்து தான் வளர்த்து வந்த ஆடுகளை விற்று அந்த பணத்தில் கழிவறை கட்ட குவார்பாய் முடிவு செய்தார். ஆடு விற்ற பணம் 22 ஆயிரத்தை கொண்டு தனது வீட்டருகே தற்போது கழிவறை கட்டியுள்ளார்.

இது குறித்து குவார்பாய் கூறுகையில்,  '' இந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்குமே கழிவறை தேவை என்பதை உணர்ந்துள்ளேன். கிராமத்து மக்கள் என்னை பார்த்தாவது கழிவறை கட்டும் முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் நான் வளர்த்து வந்த ஆடுகளை விற்றுள்ளேன். திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை கிராமத்து மக்களுக்கு எடுத்துக் கூறி வருகிறேன் என்றார்.

102 வயதில் இந்த சமூகத்துக்கு ஒருவர் எடுத்துகாட்டாக வாழ முடியுமென்றால் அதற்கு குவார்பாய் ஒரு உதாரணம்.

அடுத்த கட்டுரைக்கு