Published:Updated:

'உபேர்' டாக்சி பலாத்கார வழக்கில் டிரைவர் குற்றவாளி: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Vikatan Correspondent
'உபேர்' டாக்சி பலாத்கார வழக்கில் டிரைவர் குற்றவாளி: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு
'உபேர்' டாக்சி பலாத்கார வழக்கில் டிரைவர் குற்றவாளி: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 'உபேர்' டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவை குற்றவாளி என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

'உபேர்' டாக்சி பலாத்கார வழக்கில் டிரைவர் குற்றவாளி: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி 'உபேர்' என்ற தனியார் கால் டாக்சியில் சென்றபோது, அதன் டிரைவரால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக 25 வயது இளம் பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷிவ்குமார் யாதவ் (32) என்ற கால் டாக்சி டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், ஒரு பெண்ணை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்ததாக ஷிவ் குமார் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவர்  குற்றவாளி என்று நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்று எந்த மாதிரியான தண்டனை விதிக்கப்படுவது தொடர்பாக விவாதம் நடைபெறும் என்று தெரிவித்தார்.