Published:Updated:

இந்திய ராணுவத்தில் முதன்முதலாக சிப்பாய்களாகப் பெண்கள்... தொடரவிருக்கும் மாற்றங்கள்!

ராணுவ சிப்பாய்களாகp பெண்கள்
ராணுவ சிப்பாய்களாகp பெண்கள்

பெண்களுக்கு ராணுவத்தில் பிரதிநிதித்துவம் வழங்கும் திட்டம் 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன்படி ராணுவக் காவலில் 20% பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். முதல் தொகுதியில் 83 பெண்கள் பெங்களூரில் உள்ள துரோனாச்சாரியா அணிவகுப்பு மைதானத்தில் அணிவகுப்பு நடத்தினர்.

இந்திய ராணுவத்தில் முதன்முதலாகப் பெண் சிப்பாய்கள் (soldiers) பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஓராண்டு கடின பயிற்சிகளுக்குப் பிறகு, இந்த முதல் தொகுதி பெண் ராணுவ வீரர்கள் ராணுவ அலுவலர் அல்லாத பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதல் தொகுதியில் 83 பெண்கள் பெங்களூரில் உள்ள துரோனாச்சாரியா அணிவகுப்பு மைதானத்தில் அணிவகுப்பு நடத்தினர்.

ராணுவ காவலர்களாக பெண்கள்
ராணுவ காவலர்களாக பெண்கள்

கோவிட் தொற்று காரணமாக எளிமையாக நடைபெற்ற அணிவகுப்பைப் பார்வையிட்ட சி.எம்.பி மையம் மற்றும் பள்ளியின் (CMP Centre and School) கமாண்டென்ட், 61 வார பயிற்சியை வெற்றிகரமாக முடித்துப் பணியாற்ற இருக்கும் பெண்களின் பணி சிறக்க வாழ்த்தினார். முதல் கட்டமாக 83 பெண் ராணுவ சிப்பாய்களை பணியில் சேர்த்துள்ள இந்திய ராணுவம், இன்னும் 1,700 பெண் ராணுவ சிப்பாய்களை பணியில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. தற்போதுவரை பெண்கள் ராணுவத்தில் மருத்துவம், சட்டம், கல்வி, பொறியியல் போன்ற துறைகளில் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்த நிலையில், முதன்முதலாக கள வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

பெண்களுக்கு ராணுவத்தில் பிரதிநிதித்துவம் வழங்கும் திட்டம் 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன்படி ராணுவக் காவலில் 20% பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

மிக விரைவில் பெண்கள் ராணுவ விமானங்களில் பறக்கும் வண்ணம் ஜூலை 2021-ல் பெண்களுக்கு விமான பயிற்சிகள் தொடங்க உள்ளன. ஜூலை 2022-ல் பயிற்சிகள் முடிவடைந்து முதல் தொகுதி பெண் விமானிகள் பணியில் சேர்க்கப்படுவர். இதுவரை விமானப் படையில் பெண்கள் தரையில் இருந்து கவனிக்கும் பொறுப்புகளில் மட்டுமே பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவத்தின் முப்படைகளிலும் மொத்தம் 9,000 பெண்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். பெண்களுக்கு அளிக்கப்படும் புதிய வாய்ப்புகள் ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு