
இந்தியாவின் மகளும், 38424 மணி நேரமும்... #VikatanTimeline
இந்தியாவின் மகள் நிர்பயா டிசம்பர் 16, 2012-ம் ஆண்டு 5 பேரால் டெல்லியில் கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த குற்றவாளிகளுக்கு 1601 நாட்கள் கழித்து உச்ச நீதிமன்றத்தால் அவர்களது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இடைப்பட்ட இந்த 38424 மணி நேரத்தில் இந்த வழக்கின் திருப்பங்கள் இதோ....#VikatanTimeline
(குறிப்பு: டைம்லைனில் உள்ள புள்ளியில் கர்சரை வைத்து நகர்த்தினால் அடுத்த நிகழ்வுக்கு செல்லும்)
டிசம்பர் 16,2012
மாலை 6:30 மணி
நிர்பயா, சிட்டி மருத்துவமனையில் பயிற்சி பெறும் 23 வயது பிசியோதெரஃபிஸ்ட் தனது நண்பருடன் தெற்கு டெல்லியில் சினிமாவுக்கு சென்று விட்டு திரும்புகிறார்
டிசம்பர் 16,2012
இரவு 8:30 மணி
இருவரும் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு செல்லகின்றனர். ஆட்டோ ட்ரைவர் முனிர்கா பகுதி வரை மட்டுமே வருவதால் அங்கிருந்து பேருந்தில் செல்கின்றனர்,
டிசம்பர் 16,2012
இரவு 09:05 மணி
வெள்ளை நிற DL 1 PC 0149 பேருந்தில் துவாரகாவுக்கு பயணிக்கின்றனர். அந்த பேருந்தில் ட்ரைவர் தவிர 5 பேர் அந்த பேருந்தில் இருந்துள்ளனர். அதில் 18 வயது நிரம்பாத ஒரு சிறுவனும் இருந்துள்ளான்.
டிசம்பர் 16,2012
இரவு 9.10 மணி
பேருந்தில் இருந்த 5 பேரும் நிர்பயாவிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ராம்சிங் நிர்பயாவின் நண்பரை தாக்குகிறான். 5 பேரும் நிர்பயாவை நிர்பயாவை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துகிறார்கள். மேலும் இரும்பு கம்பியால் நிர்பயாவை கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்கள்
டிசம்பர் 16,2012
இரவு 10 மணி
இருவரையும் மஹிபால்பூர் மேம்பாலம் அருகே தள்ளிவிட்டு செல்கின்றனர் அந்த வழியாக சென்ற சுங்க மேலாளர் கன்ட்ரோல் ரூம் வாகனம் மூலம் சஃபடர்ஜன்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். நிர்பயாவை அவரசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கின்றனர்.
டிசம்பர் 17,2012
இரவு 2 மணி
விசாரணை துவங்குகிறது. வசந்த் விஹார் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்படுகிறது.
டிசம்பர் 17,2012
மதியம் 12 மணி
நிர்பயா பயணம் செய்த பேருந்து கண்டறியப்பட்டு ராம் சிங் கைது செய்யப்படுகிறான். விசாரணயில் மற்றவர்களை பெயரையும் கூறுகிறான். ராம் சிங்கின் சகோதரன் முகேஷ், நண்பன் வினய் ஷர்மா மற்றும் பழ வியாபாரி பவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
டிசம்பர் 20,,2012
18 வயதுக்குட்பட்ட சிறுவன் இந்த வழக்கில் கைது செய்யப்படுகிறான்.
டிசம்பர் 21,,2012
நிர்பயாவின் வாக்குமூலம் சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் முன்பு பெறப்படுகிறது.
டிசம்பர் 25,,2012
நிர்பயாவின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையை எட்டுகிறது. நீதித்துறை மாஜிஸ்ட்ரேட் முன்பு வாக்குமூலம் பெறப்படுகிறது.
டிசம்பர் 26,,2012
சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படுகிறார்.
டிசம்பர் 29,,2012
நிர்பயாவின் உடல் உறுப்புகள் முழுவதுமாக செயலிழந்த நிலையில் சிகிச்ச பலனின்றி நிர்பயா மரணம்
ஜனவரி 3, 2013
இந்த குற்றத்தில் தொடர்புடைய 5 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.
மார்ச் 10, 2013
முக்கிய குற்றவாளியான ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொல்கிறான்
செப்டம்பர் 10, 2013
கீழ் கோர்ட்டில் 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது
மார்ச் 13,2014
உயர் நீதி மன்றமும் நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதை உறுதி செய்து தீர்ப்பளிக்கிறது.
டிசம்பர் 20,2015
18 வயதுக்குட்பட்ட சிறுவனாக கைது செய்யப்பட்டவன் மட்டும் சிறார் சட்டத்தின் அடிப்படையில் சிறார் சீர்திருத்தபள்ளியிலிருந்து விடுவிக்கப்படுகிறான்.
மே 5, 2017
நிர்பயா வழக்கில் மீதமுள்ள நான்கு பேருக்கும் உச்ச நீதி மன்றம் மரண தண்டனையை உறுதி செய்கிறது.