Published:Updated:

90ஸ் கிட்ஸ் Vs 2கே கிட்ஸ்

90ஸ் கிட்ஸ் Vs 2கே கிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
90ஸ் கிட்ஸ் Vs 2கே கிட்ஸ்

குளோரி பெர்க்மான்ஸ்

90ஸ் கிட்ஸ் Vs 2கே கிட்ஸ்

குளோரி பெர்க்மான்ஸ்

Published:Updated:
90ஸ் கிட்ஸ் Vs 2கே கிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
90ஸ் கிட்ஸ் Vs 2கே கிட்ஸ்

துரை மிர்ச்சி ஆர்.ஜேவாக மக்களின் ஃபேவரைட் ஆகி, இப்போது புதுச்சேரி மிர்ச்சியில் ஆர்.ஜேவாகக் கலக்கிக்கொண்டிருக்கும் மிர்ச்சி ரமணா, தேசத்தின் முக்கிய பிரச்னை பற்றிப் பேசுகிறார்... 90’ஸ் கிட்ஸ் Vs 2கே கிட்ஸ். இவர் விகடன் முன்னாள் மாணவப் பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘90'ஸ் கிட்ஸுக்கும் 2கே கிட்ஸுக்கும் 10 வருஷம்தான் வித்தியாசம். ஆனா, 20-ம் நூற்றாண்டின் சாட்சியா 90'ஸ் கிட்ஸும், 21-ம் நூற்றாண்டின் டிரெய்லரா 2கே கிட்ஸும் ஆகிட்டதால, இவங்க வாழ்க்கை முறையில எக்கச்சக்க வித்தியாசம் கெடக்குதுங்க. சாம்பிள் இங்க...

90ஸ் கிட்ஸ் Vs 2கே கிட்ஸ்

10 புக்ஸ், 20 நோட்ஸ்னு கூன்விழுற அளவுக்கு ஸ்கூல்பேக் பொதி சுமந்தாங்க 90'ஸ் கிட்ஸ். ஆண்ட்ராய்டு போன்ல ஆன்லைன் கிளாஸ்ல படிக்குதுங்க 2கே கிட்ஸ்.

மச்சி, மச்சான், தோஸ்துனு ஆசையா பேசிக்கிட்டாங்க 90'ஸ் கிட்ஸ். இங்கிலீஷ் படத்துல வர்ற கெட்ட வார்த்தையையெல்லாம் நல்ல வார்த்தை(!) ஆக்கிட்டானுங்க 2கே கிட்ஸ்.

டீச்சருக்கு பயந்து பயந்து ஸ்கூலுக்குப் போனவங்க 90'ஸ் கிட்ஸ். ஹோம் டியூஷன்னு டீச்சரையே வீட்டுக்கு வரவெச்சவங்க 2கே கிட்ஸ்.

90ஸ் கிட்ஸ் Vs 2கே கிட்ஸ்

பயத்துலேயே லவ் ஃபெயிலியர் ஆகி, ‘பறவையே எங்கு இருக்கிறாய்’னு பரதேசியா திரியுறானுங்க 90'ஸ் கிட்ஸ். ஆன்லைன்ல மீட் பண்ணி, டேட்டாவுல சாட், டேட் பண்ணி, லவ் ஃபெயிலியர்ங்கிற வார்த்தையவே டிக்‌ஷ்னரியில இருந்து தூக்கிட்டு, ‘பிரேக்அப்’னு ஹேப்பியா சொல்லிட்டு, ‘சிங்கிள் ரெடி டு மிங்கிள்’னு ஸ்டேட்டஸ் வெச்சுட்டு போய்ட்டே இருக்காங்க 2கே கிட்ஸ்.

நல்ல நாள் பெரிய நாளுக்கு வீட்டுல கொடுக்குற 50 ரூபாயை 45 நாளுக்கு வெச்சு செலவழிச்சாங்க 90'ஸ் கிட்ஸ். ஜூஸ் குடிக்கக்கூட டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தேய்க்கிறாங்க 2கே கிட்ஸ்.

ஃபிரெண்டு யாராச்சும் பிறந்தநாளுக்கு வெட்டுன கேக்கைத்தான் பார்த்துருப்பானுங்க 90'ஸ் கிட்ஸ். ஃபிரெண்ட்ஸ் டே, வேலன்டைன்ஸ் டே, மண்டே, ட்யூஸ்டேக்கு எல்லாம் கேக் வெட்டுறாங்க 2கே கிட்ஸ்.

90ஸ் கிட்ஸ் Vs 2கே கிட்ஸ்

ஜிம், வாக்கிங் கிளப், சலூனோட சேர்த்து, மேட்ரிமோனியல் வெட்சைட்டுக்கும் ரெகுலர் கஸ்டமரா இருக்குறவங்க 90'ஸ் கிட்ஸ். ப்ரீ வெடிங் ஷுட், தீம் வெடிங், போஸ்ட் வெடிங் ஷுட், மெட்டர்னிட்டி போட்டோஷூட், பேபி போட்டோஷுட்னு ‘40 வயதுக்குள் தாத்தா வாழ்க்கையை வாழத்துடிக்கிற?’ ஸ்பீடுல போய்ட்ட்டே இருக்கானுங்க 2கே கிட்ஸ்.

தீபாவளி, பொங்கலுக்கு எடுக்குற டிரஸ்ஸை பட்டன், ஸிப்லாம் பார்த்துப் பார்த்து எடுத்தாங்க 90'ஸ் கிட்ஸ். டார்ன் (torn) ஜீன், டார்ன் ஸ்லீவ்னு கிழிஞ்சிருக்குற டிரஸ்ஸா பார்த்துப் பார்த்து எடுக்குறாய்ங்க 2கே கிட்ஸ்.

நல்லாவருவீங்கடா டேய்!